𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍

20.1K posts

𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 banner
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍

𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍

@ntkwillpower

@Naamtamilarorg அதிகாரம் மிக வலிமையானது நமது அதிகாரம் மக்களுக்கானது. நாம்தமிழர்கட்சி அனைத்து உயிர்களுக்குமானது... https://t.co/PfgvAroiLv

Canada انضم Mayıs 2019
340 يتبع23.3K المتابعون
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
செந்தமிழன் சீமான்
உலகத்தொழிலாளர் நாளில் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்! ”காலுக்குச் செருப்புமில்லை கால் வயிற்றுக் கூழுமில்லை பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே பசையற்றுப் போனோமடா” எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே உலகெங்கும் தொழிலாளர் பெருமக்கள் இன்றளவும் இருக்கிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். இதனைக் கண்டித்து 1886 ஆம் ஆண்டு மே 1 அன்று 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு மிகப்பெரிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மே - 4 அன்று அமெரிக்காவின் சிகாகோ ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. எனினும் தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்த அமெரிக்க வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில், பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில், 1890 ஆம் ஆண்டு மே 1 முதல் உலகளாவிய தொழிலாளர் தினமாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை‌ கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நம்முடைய பாட்டன், பொதுவுடமை போராளி ஐயா சிங்காரவேலர் தலைமையில் உழைப்பாளர் நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று தொடங்கி இன்றுவரை தொழிலாளர் நாள்தான் கொண்டாடப்படுகின்றதே தவிர தொழிலாளர்களை உலகம் கொண்டாடவில்லை. கொண்டாட்டத்துக்கு உரியவர்களாக தொழிலாளர்களை நடத்தவும் இல்லை என்பதுதான் வரலாற்றுப்பெருந்துயரமாகும். விவசாயம் முதலாக வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளப்பூர்வமாக ஒப்புவித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களைச் சுரண்டி பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு சேவை புரியும் தரகு நிறுவனங்களாகவே ஆளும் அரசுகள் செயல்படுகின்றன. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைத் தட்டிப்பறித்து முதலாளித்துவக் கைகூலிகளாக செயல்படும் அரசுகளுக்கு எதிராக, தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி, தீயதை எதிர்த்து போராடும் துணிவும் – வலிமையும் பெற்ற பேராற்றலாகவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடும் பேராளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும். ஆளும் அரசுகள் தொழிலாளர் உழைப்பினைச் சுரண்டி, உரிமைகளைப் பறிக்க முயன்றால், அத்தகைய கொடுங்கோன்மை அரசுகளைத் தூக்கி எறியவும் சிறிதும் அச்சமின்றி தொழிலாளர் வர்க்கம் துணை நின்றுள்ளனர் என்பதே கடந்தகால வரலாறாகும். ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு உலகமயம், தாராளமயம் என முதலாளித்துவம் நம்மை அச்சுறுத்தும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக உழைப்பாளர் உரிமைபெற்ற 'மே நாளில்' உழைப்புச் சுரண்டலுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்! இனியும் வெறும் நாளினை மட்டுமே கொண்டாடாமல், உழைக்கும் மக்களை ஒவ்வொரு நாளும் கொண்டாடுவோம்! – செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
15
640
1.3K
13.7K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
செந்தமிழன் சீமான்
தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்! கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது கடந்த 25.04.26 சனிக்கிழமை அன்று ஈழத்தாயகத்தினை சேர்ந்த 3 மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் இருவர் தப்பியோடிய நிலையில், காங்கேசன் துறையைச் சேர்ந்த அயந்தன் என்ற தமிழ் மீனவரை, தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபடுத்தி கொண்டுவந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டு தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்தாயக தமிழ் மீனவர்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் இதுபோன்ற கசப்பான நிகழ்வுகள் மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறைபிடிக்கப்பட்ட காங்கேசன்துறை மீனவர் அயந்தன் தற்போது தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இருதரப்பினர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாடு காவல்துறை விசாரணை மூலம் உண்மை நிலையை கண்டறிவதோடு, காயமடைந்த மீனவருக்கு உரிய மருத்துவம் அளித்து, அவர் விரைவில் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே, தமிழக மீனவர்கள் மீது சிங்கள இராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடைமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை நடுக்கடலிலே வைத்து தாக்குவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடைமைகளைப் பறித்துக்கொள்வது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைபிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது என இலங்கை கடற்படை அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல. இலங்கை கடற்படையினரின் தாக்குதலின் மூலம் இதுவரை பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளைச் சிதையக் கொடுத்துள்ளனர். 850-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலிலே கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ச்சியாக வாடிக்கொண்டுள்ளனர். இருந்தபோதிலும், இதுவரை தமிழக மீனவர்கள் மீதான இக்கோரத் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக இந்திய ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்ததுமில்லை. எதிர்வினையாற்றியதும் இல்லை. இத்தகுச் சூழலில் இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்கள், இலங்கை இனவாத ராணுவத்தால் திட்டமிட்டு நடத்தப்படும் கொடுமைகளை மறைத்து, இங்குள்ள தமிழ் மீனவர்களுக்கும், ஈழத்து தமிழ் மீனவர்களுக்கும் இடையேதான் பிரச்சனை என்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்குவது நிலைமையை மென்மேலும் சிக்கலாக்கவே வழிவகுக்கும். தமிழ் மக்களிடையே நிரந்தர பகையை உருவாக்க நடைபெறும் இதுபோன்ற சூழ்ச்சிகள் குறித்து இருநாட்டு தமிழ் மீனவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தொப்புள்கொடி சொந்தங்களான தமிழ் மீனவர்கள் தங்களுக்குள் நிலவும் எல்லை சிக்கலையும், மீன்பிடி சிக்கலையும் பேச்சுவார்த்தை மூலம் எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும். சிங்கள இராணுவம் ஈவிரக்கமற்று தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைச் சிறைபடுத்தி வருவதும், கடுமையாகத் தாக்குவதும் தமிழர்கள் மீதான வன்மத்தின் வெளிப்பாடேயாகும். அதனை எந்த காலத்திலும் சிங்கள ராணுவம் கைவிடப்போவதில்லை. இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைத்த தீர்வை எந்த காலத்திலும் பெற்றுத்தரப் போவதுமில்லை. ஆகவே, தமிழ்நாடு மற்றும் தமிழீழத் தமிழ் மீனவர்களும் எவ்வித சிறு பகைமைக்கும் இடமளிக்காமல், தங்களுக்குள் நிலவும் சிறு சிறு சிக்கல்கள் குறித்து திறந்த மனதுடன் அமர்ந்து பேசி, நிலையான தீர்வு காண முன்வர வேண்டும். அதன் மூலம், இருநாட்டு தமிழ் மீனவர்களிடையே பகையை உருவாக்கி, உருவெடுத்து வரும் இன ஓர்மையை சிதைக்க முயலும் இலங்கை இனவாத அரசின் திட்டமிட்டச் சதியை தமிழர்கள் ஒற்றுமையுடன் முறியடிக்க வேண்டும். தற்போது, தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள, மீனவர் அயந்தனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து, விரைந்து தாயகம் திருப்பி அனுப்ப காவல் துறை மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
10
642
1.4K
17.1K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
செந்தமிழன் சீமான்
'வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உலகாள உனது தாய்மிக உயிர்வாதை யடைகிறாள் உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!' 'நறுக்குவோம் பகையின்வேர் சிறுத்தைப் பெருங்கூட்டம் நாம்! தமிழர் நாம்தமிழர் என்று முரசறைவாய் குறுக்கில் முளைத்திட்ட அயலார் ஆட்சி கூண்டோடு போயிற்றுக் கொட்டடா முரசம்!' "செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறைமீட்க நந்தமிழர் உள்ளத்தில் வையம் நடுநடுங்கும் வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே' ‘சிங்கக் குகையினில் நரிக்கிடம் தந்தோம்; செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம் பொங்கும் உணர்வால் எழும்தமி ழரசு; போர்தொடங் கிற்றுக் கொட்டடா முரசு!' என்று பாடி, உணர்வற்று உறங்கி கிடந்த தமிழ்ச் சமூகத்தை உணர்ச்சிமிக்கப் பாக்களால் உசுப்பிய தமிழ்ப்பெரும் பாவலர் நம்முடைய தாத்தா பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று! தமிழ்த்தேசிய உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி வருகிற இளந்தலைமுறை பிள்ளைகளாகிய நாங்கள், எங்கள் தாத்தா பாரதிதாசனின் பாக்களைத் தாய்ப்பாலுக்கு இணையாகப் பருகி, உணர்வு பெற்று, பெருமிதத்தோடும் திமிரோடும் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்! தாத்தா பாரதிதாசன் புரட்சிக் கனவை எந்தச் சமரசமுமின்றி நிறைவேற்றிட தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதிமொழியை இந்நாளில் ஏற்கிறோம். தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு அடையாளம் நம்முடைய தாத்தா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
12
638
1.4K
16.2K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
செந்தமிழன் சீமான்
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை. தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப் பாணர் அப்பா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்தியதையடுத்து இன்று 28-04-2026 பிற்பகல் படப்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று இறுதி வணக்கம் செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
10
462
1.4K
34.4K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #NTK #Seeman #CauveryRiver News18Taminadu | News18Tamil.com
News18 Tamil Nadu tweet media
தமிழ்
7
180
509
4.6K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
NTK கொடியை அறுத்து காலில் மிதித்த சம்பவம்.. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட தவெகவினர் #ntk #tvk #police #thanthitv
தமிழ்
42
695
1.7K
32.6K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
News7 Tamil
News7 Tamil@news7tamil·
“வன்மையான கண்டனத்துக்குரியது!'' #Seeman | #NTK | #Cauvery | #TamilNews | #LatestNews
News7 Tamil tweet media
தமிழ்
8
370
899
10.8K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
Seeman Condemns | சீமான் வெளியிட்ட கண்டன அறிக்கை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தை கூட்ட வேண்டும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 3 மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் Tamilnadu | Puducherry | Kerala | Election Result | Seeman | NTK | Condemns #Tamilnadu #Puducherry #Kerala #ElectionResult #Seeman #NTK #Condemns #Tamilnews #NewsTamil24x7
News Tamil 24x7 tweet media
தமிழ்
10
507
1.2K
14.7K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நாம்தமிழர் கொடியை அவமதித்த தவெகவை சார்ந்தவர்கள் நாம்தமிழர் கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இனி எந்தக் கட்சிக் கொடியையும் அவமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். !
தமிழ்
179
1.8K
5.2K
111.9K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
Polimer News
Polimer News@polimernews·
'புழுக்களாக நெளிந்து கொண்டிருந்த எங்களை எல்லாம் புலியாக மாற்றியவர்...' பாடகர் செல்லப்பா உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் சீமான் பேட்டி.! #NTK | #Seeman | #Singer | #ThenisaiSellappa | #PolimerNews
தமிழ்
5
462
1.7K
21.2K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
செந்தமிழன் சீமான்
மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும்! காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 29.04.2026 அன்று நடைபெறும் என்று அறிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் கூட்டத்தை நடத்த காவிரி மேலாண்மை ஆணையம் முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. காவிரி ஆற்றினை பங்குகொள்ளும் மூன்று முக்கிய மாநிலங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இன்னும் அமையாத நிர்வாகச் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை அவசர அவசரமாக கூட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? முழுமையான அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? மாநிலங்களின் உயர் அதிகாரிகள் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கும் சூழலில் மண்ணின் உரிமைகளையும், மக்களின் உணர்வுகளையும் எப்படி உரத்து எழுப்புவார்கள்? நடைபெறவுள்ள கூட்டத்தில் மேகதாது அணை கட்டுமானம் குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதர மூன்று மாநிலங்களில் அதிகாரம் படைத்த அரசுகள் இல்லாத நிலையில், கூட்டம் முழுக்க முழுக்க ஒருபக்க சார்பாக மாறி கர்நாடகாவுக்கு சாதகமாகிவிடாதா? யாருடைய உத்தரவின் பேரில் இத்தனை அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்படுகிறது? யாருடைய நலனுக்காக இத்தனை அவசரமாக ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது? தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க, கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரசு அரசு மற்றும் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கூட்டுச் சூழச்சியாகவே இக்கூட்டம் நடத்தப்படுவதாக தோன்றுகிறது. கச்சத்தீவு போன்று தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய வரலாற்றுச் சதிகளை இனியும் அனுமதிக்க முடியாது. ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
21
962
2K
41.5K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
வேட்பாளர் அனீஸ்பாத்திமா தாக்கப்பட்டதை கண்டித்து அம்மாபேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட நாதகவினர்! #NTK #Ammapettai #PoliceStation #Condemning #NewsTamil24x7
தமிழ்
0
335
731
6.6K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
நாம்தமிழர் கட்சியின் மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளரும் பாபநாசம் வேட்பாளருமான தங்கை அனீஸ் பாத்திமாவை தாக்கிய திமுக குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி அம்மாபேட்டை காவல்நிலையத்தை முற்றுகையிட்ட நாம்தமிர் கட்சி ! @thamizhachi_Ani
தமிழ்
71
1.3K
3.4K
44.9K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
ABP Nadu
ABP Nadu@abpnadu·
"கர்ப்பிணி மீது தாக்குதல்! கைது பண்ணுங்க! இல்லனா..." எச்சரிக்கும் சீமான் #seeman #naamtamilarkatchi #anisfathima #papanasam #tnelection2026 #ABPNADU
தமிழ்
8
495
1.1K
7K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
News7 Tamil
News7 Tamil@news7tamil·
பாபநாசம் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான நிறைமாத கர்ப்பிணியை திமுகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #DMKmembersattacking #pregnantwoman #NaamTamilarParty #NaamThamizharKatchi #ntkcandidate #attack #papanasamassemblyconstituency #Shocking #News7Tamil #News7TamilUpdates
தமிழ்
23
528
932
21.7K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
News7 Tamil
News7 Tamil@news7tamil·
“உடனடியாக கைது செய்ய வேண்டும்!" #NTK | #Seeman | #TamilNews | #LatestNews | #DMK
News7 Tamil tweet media
தமிழ்
8
379
968
8.8K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"கைது செய்யுங்கள்" சீமான் ஆவேசம் | NTK | Seeman #Seeman | #NTK | #Papanasam
தமிழ்
11
589
1.6K
37.7K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
செந்தமிழன் சீமான்
பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து உடனடியாக கைது செய்ய வேண்டும்! தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணாக இருந்தபோதிலும், தம்முடைய வலிகள் யாவையும் தாங்கிக்கொண்டு, களத்தில் பாயும் புலியாக மிகத்தீவிரமாக பரப்புரை பணிகளில் ஈடுபட்டு வந்தார். தேர்தல் களத்தில் சிறிதும் சோர்வின்றி அவர் காட்டிய வேகமும், கடுமையான உழைப்பும் கண்டு பாபநாசம் தொகுதி மக்கள் செல்லும் இடமெங்கும் பேராதரவை தந்தனர். பெருகும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சம் கொண்ட திமுகவைச் சேர்ந்த முரடர்கள், தேர்தல் நாளான நேற்று பாபநாசம் தொகுதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அம்மாப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடிகளை பார்வையிட சென்ற தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக முரடர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்த தங்கையின் நிலை கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் திறனற்ற கோழைகள், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெற்றி பெற நினைப்பது வெட்கக்கேடானதாகும். ஆட்சியிலிருந்த ஐந்து ஆண்டுகாலமும் பள்ளிப் படிக்கும் சிறுமிகள் முதல் வீட்டில் தனியாக இருக்கும் பாட்டிகள் வரை பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி, பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது திமுக அரசு. தற்போது 5 ஆண்டுகால ஆட்சியும் முடிந்த பிறகும், பெண்கள் மீதான தாக்குதல்களை திமுக முரடர்கள் தொடர்வது அதிகார மமதையின் உச்சமாகும். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? தமிழக காவல்துறையை கட்டுப்படுத்துவது யார்? திமுகவா? அல்லது தேர்தல் ஆணையமா? அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் பெண் வேட்பாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் கூறப்போகிறது? தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து நேற்றே நாம் தமிழர் கட்சியினர் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யாதது ஏன்? தேர்தல் ஆணையம் எதனை மூடி மறைக்க முயல்கிறது? யாரை காப்பாற்ற நினைக்கிறது? சனநாயகத்தையே குழிதோண்டி புதைக்க செய்யும் இதுபோன்ற அட்டூழியங்களை தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கைப்பார்த்தால், பாமர மக்களுக்கு சனநாயகம் மீது எப்படி நம்பிக்கை வரும்? ஆகவே, தமிழ்நாட்டின் காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ள தேர்தல் ஆணையம், பாபநாசம் தொகுதி வேட்பாளர் அன்புத்தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்திய திமுக முரடர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்து இன்று மாலைக்குள் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாளை பாபநாசத்தில், தங்கை அனிஸ் பாத்திமா அவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாம் தமிழர் கட்சி மாபெரும் கண்டன போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
127
1.4K
3K
137.6K
𝐕𝐎𝐈𝐂𝐄𝐎𝐅𝐒𝐄𝐄𝐌𝐀𝐍 أُعيد تغريده
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல்: சீமான் கண்டனம் #Seeman | #NTK | #Papanasam
PttvOnlinenews tweet media
தமிழ்
7
245
600
8.6K