


M.K.Stalin
12K posts

@mkstalin
President of the DMK | Belongs to the Dravidian stock
















மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன், ம.சுகன்யா - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் ஆகிய 4 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் 40 இலட்சம் ரூபாயினை இன்று (10.6.2026) குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார். இதுவரை 22 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்." என்று அறிவித்திருந்தார். அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். லிங்கேஸ்வரன் - மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். திருப்பதி - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.முத்துராஜா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நா.மாரிமுத்து - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பார்வதி (எ) உஷா - திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இ.பரத்குமார் ஆகிய 18 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து; தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் தனது மனைவி ம.சுகன்யா ஆகியோர், 09.12.2025 அன்று உத்தமபாளையம் - கம்பம் மெயின் ரோடு காக்கில்சிக்கையன்பட்டி பண்டாரம் களம் அருகில் அவர்கள் சென்ற இருசக்கரம் வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள், கடந்த 20.11.2025 அன்று சென்னிமலையிலிருந்து இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது வழியில் சென்னிமலை, பெருந்துறை ரோடு, எஸ்எல்என் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது வேன் மோதி விபத்தில் சிக்கியும் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சண்முகம் அவர்கள், 10.07.2025 அன்று ஓசூருக்கு வேலை செல்வதற்காகபிளப்பநாயக்கஅள்ளி - ஏ.பாப்பாரப்பட்டி ரோட்டில் எட்டியாம்பட்டி ஏரி மதகு அருகே அவர் சென்ற இருசக்கரம் வாகனம் மீது எதிரில் வந்த மினி லாரி மோதி விபத்தில் சிக்கியும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வில்வராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்கள், 30.10.2025 அன்று ஜி.எஸ்.டி.சாலை, இருங்குன்றம்பள்ளி பாலாறு பாலம் அருகே அவர் வந்த இருசக்கர வாகனம்மீது அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் உயிரிழந்த இந்த 4 குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் - திருமதி ம.சுகன்யா ஆகியோரின் மகன் எம்.கௌதம் அவர்களிடமும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் மனைவி திருமதி ஜி.சவிதா அவர்களிடமும் – தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் அவர்களது மனைவி திருமதி எஸ்.நதியா அவர்களிடமும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்களின் மனைவி திருமதி சபிதா அவர்களிடமும் இன்று (10-06-2026) காலை வழங்கினார்.


























