
நியூஸ் தமிழ் செய்தியாளர் ராஜேஷ் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நியூஸ் தமிழ் தொலைக்காட்சி தேர்தல் பயணம் என்ற நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மகர்நோன்புத் திடலில் இன்று (23.03.26) மாலை தேர்தல் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த திமுகவினர் மேடையை நோக்கி நாட்காலிகளை தூக்கி வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். திமுகவினர் மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த செய்தியாளர் ராஜேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், நியூஸ் தமிழ் தொலைக்காட்சியின் காரைக்குடி செய்தியாளர் சதாம்உசேன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல், வன்முறையில் ஈடுபட்ட திமுவினரின் நடவடிக்கையை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடாவடியில் ஈடுபட்டு செய்தியளார்களுக்கு காயம் ஏற்படுத்திய திமுகவினரின் அராஜக நடவடிக்கைய சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலுக்கு காரணமான அனைவர் மீதும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. @NewsTamilTV24x7 @mkstalin



















