செல்வா retweetou

சில விசயங்களை குறிப்பிட வேண்டும்.
1. 234 தொகுதியிலும் போட்டி
2. 225 பேர் பெரிய அறிமுகம் இல்லாதவர்கள்
3. 117 பெண் வேட்பாளர்கள்
4. பணம் குடுப்பதில்லை (பணம் இல்லை என்பது வேற விசயம்)
5. ஐந்தாவது முறையாக தனித்துப் போட்டி
6. சாதி மதம் தனி தொகுதி பொது தொகுதி என்று எதுவும் கிடையாது.
7. டிவி பேப்பர் மீடியா பவர் எதுவுமில்லை.
8. போன முறை வேற சின்னம் இந்த முறை மீண்டும் பழைய சின்னம்.
9. தனித்து அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே கட்சி (எனக்கு தெரிந்து)
10. எந்த பின்புலமும் இல்லாமல் சாமானிய தமிழ் உணர்வாளர்களின் உழைப்பிலும் ஆதரவிலும் மட்டுமே வந்த கட்சி
11. இதுவரை ஓட்டுக்களை வியாபாரம் பேசி விற்காத ஒரே கட்சி
இது எல்லாத்துக்கும் மேல..
தலைவர் பிரபாகரனை தலைவராக ஏற்றுக்கொண்டு.. பெயரளவில் மட்டும் இல்லை..
ஒரு சேர் உடைந்தது கிடையாது ஒரு பெண் அவமரியாதையை பார்த்தது கிடையாது ஒரு குப்பையை விட்டுட்டு போனது கிடையாது மாலை கிடையாது துண்டு கிடையாது மேற்கூறை கிடையாது ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கூட கிடையாது. குருதிக்கொடை 20000 யூனிட்டுக்கு மேல் குடுத்த கட்சி. லட்சக்கணக்கான பணை மரங்களை நட்ட கட்சி. தமிழில் மட்டுமே பேசும் தலைவனையும் அவனை சமரசமில்லாமல் பின் தொடரும் அண்ணனின் வழியில் செயல்படும் கட்சி.
என் இனத்தை தொட்டால் தூக்குவோம்டா என்று முழங்கும் கட்சி. ஒரு பெண்ணை தொட்டா தொட்டவன கொண்ணுட்டு அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வோம் எனும் கட்சி. சாதி பாத்து போடாத ஓட்டு அது திட்டு எனும் கட்சி.
நாங்க செத்தா இப்ப என்ன? இதை அடுத்த தலைமுறை வென்றுவிட்டு போகட்டும் எனும் உறுதி கொண்ட கட்சி. நீ எத்தனை முறை தோற்கடித்தாலும்.. என் மக்களிடம்தானே தோல்வி.. பரவாயில்லை என்று மீண்டும் எழுந்து ஓடும் கட்சி.
தலைவர் குடும்பத்தையே குடுத்தார். இதெல்லாம் ஒரு விசயமா என்று தோல்விமேல் தோல்வியை வீரத்துண்டாக தோளில் தாங்கும் லட்சக்கணக்கான தம்பி தங்கைகளை கொண்ட வரலாற்றில் இல்லாத இதற்கு மேல் காணவே முடியாத தகுதியை கொண்ட ஒரே ஒரு கட்சி. நாம் தமிழருக்கு விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼

தமிழ்




















