May17Movement

7.7K posts

May17Movement banner
May17Movement

May17Movement

@May17Movement

Retired as account withheld in India | Follow @may17iyakkam

Присоединился Kasım 2012
5 Подписки50K Подписчики
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழ்நாட்டில் பாஜக நுழைந்தால் என்னாகும்? உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். இந்த படத்தில் வரும் காட்சிகள் யாவும் உண்மையே. இதில் காட்டப்படும் காட்சிகள் இந்தியாவில் நடந்த நிஜ சம்பவங்களே. இது நம்மைப் பற்றிய படம். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் பார்க்க வேண்டிய படம். அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழ்
7
64
91
865
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழர்களின் வணிகத்தை வடநாட்டு மார்வாடிகளுக்கு தாரைவார்க்கவே வடநாட்டு கட்சியான பாஜக மதக் கலவரங்களை உண்டாக்குகிறது.
தமிழ்
8
95
182
1.4K
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்காகவே பார்ப்பன கடப்பாரையை கையிலெடுத்த சீமான்.
தமிழ்
19
53
86
870
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
இரங்கற் செய்தி ஆற்றல்மிகு தோழர் ஆனந்த் (வயது 41) அவர்கள் நேற்று (19-04-2026 ஞாயிறு) நண்பகலில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். தோழர் ஆனந்த் சீரிய தமிழ்த்தேசிய சிந்தனை கொண்டவர். மே 17 இயக்கத்தில் தொடர்ச்சியாக வீரியத்துடன் செயலாற்றி வந்தவர். மதவெறி கும்பலை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிட வேண்டும் என்பதில் சிரத்தையுடன் செயல்பட்டவர். சமூகத்தின்பால் அவர் கொண்ட அன்பும், தமிழ்ச் சமூகத்திற்காக அவர் ஆற்றிய பணியும் மெச்சத்தக்கது. அவரது அறிவையும் ஆற்றலையும் நீண்டகாலத்திற்கு முழுமையான பெற இயலாமல் போனது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. அவரது இழப்பு மே 17 இயக்கத்திற்கு மட்டுமல்லாது, தமிழ்ச் சமூகத்திற்கே ஏற்பட்ட இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். தோழரது இறுதி வீரவணக்க நிகழ்வு இன்று (20-04-2026 திங்கள்) பிற்பகல் 3 மணியாளவில் சென்னை நெற்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் அனைத்து தோழர்களும் பங்கேற்குமாறு அழைக்கிறோம். தொடர்புக்கு: 8056697247 / 9994512253
மே 17 இயக்கம் | May 17 Movement tweet media
தமிழ்
12
38
60
1.2K
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
ஆங்கிலேயருக்கு எதிராக நேதாஜி-முத்துராமலிங்க தேவர் படை திரட்டிய போது, ஆங்கிலேயர்களுக்கு விசுவாசம் காட்ட, ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்த சாவர்க்கர் நேதாஜிக்கு எதிராக படைதிரட்டினார்.
தமிழ்
4
89
170
1.8K
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசுப் பணிகளில் மோடி அரசு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் இந்தி பேசும் மாநிலத்தவர்களுக்கே பணி வழங்கியதை தட்டிக் கேட்காத பாஜக அடிமை எடப்பாடி அரசு, தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் தெரியாதவர்களும் சேரலாம் என்று சட்டமியற்றி தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்தது.
தமிழ்
1
12
16
196
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழர்களான முஸ்லீம்களுக்கு திருப்பத்தூர் தர்காவை கட்டிக் கொடுத்தவர்கள் மருது பாண்டியர்கள்.
தமிழ்
2
34
63
497
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
ஐயர்கள் கறி சாப்பிட மாட்டார்கள் என்பதற்காக சாமிக்கு கறி சோறு படைத்து கறி சோறு சாப்பிடுகிற நம் எல்லாரையும் கீழ்த்தரமானவர்கள் என்று அசிங்கப்படுத்துகிறது பாஜக.
தமிழ்
4
58
125
1K
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
மண்டபத்தில் அடைத்து சாப்பாடு போடப்போகிற கைதுக்கு பயந்து ஆட்டோ ஏறி ஓடிப் போன அண்ணாமலையை வீரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கீகள்.
தமிழ்
0
19
43
487
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரம் உண்டாக்க முயன்ற ராம ரவிக்குமாருடன் தமிழை நீச பாசை என்று சொல்லும் சங்கர மடத்திற்கு சென்று ஆசீர்வாதம் வாங்கிய தமிழின துரோகி சீமான்.
தமிழ்
33
292
599
6.4K
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
அதிமுககிட்ட பிச்சை எடுத்து 4 எம்எல்ஏ பதவி வாங்குன பாஜக, தனியா நின்னா ஒரு கவுன்சிலர் கூட வாங்க முடியாத பாஜக அதிமுக கூட்டணியை இன்று பாஜக கூட்டணி என்கிறது.
தமிழ்
3
28
54
452
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழை நீச பாசை என சொல்லும் சங்கர மடத்திற்கு சென்று ஆசீர்வாதம் வாங்கியதோடு, அங்குள்ள கோசாலை பசுக்களுக்கு உணவு வழங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ‘கோமியம்’ அனுப்பி வைக்கும் விழா மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு குறித்து விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு 17-04-2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் எடுத்துரைத்தார். யூடியூப் இணைப்பு: youtube.com/watch?v=jczNkA… மே பதினேழு இயக்கம் 9884864010
YouTube video
YouTube
தமிழ்
13
27
52
764
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
ஒன்னா மன்னா பழகுறவங்க மத்தில மதக்கலவரம் உண்டாக்க வந்த சங்கீகளை அடித்து விரட்டிய மதுரைக்காரங்க.
தமிழ்
1
31
63
660
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
இட்லிக்கும் வரி சட்டினிக்கும் வரி என நம் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் வரி போடுகிறது மோடி அரசு.
தமிழ்
5
27
44
222
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
மே பதினேழு இயக்கத்தின் தோழரும் தமிழ்த்தேசிய களப்போராளியுமான எங்கள் தோழர் மு.நாகராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் (17-04-2021) இன்று. தோழர் நாகராஜ் விட்டுச்சென்ற பணியினை செய்து முடிக்க இந்நாளில் உறுதியேற்போம். மே பதினேழு இயக்கம் 9884864010
மே 17 இயக்கம் | May 17 Movement tweet media
தமிழ்
1
8
13
151
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
ஒன்றிய அரசுடன் இணக்கமாக சென்றால் தான் நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று சொல்கிற எடப்பாடி பழனிச்சாமி, தன்னுடைய அடிமை ஆட்சிக்காலத்தில் எத்தனை நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்?
தமிழ்
4
23
35
319
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிராகரிக்கிறோம்! மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதித்திட்டம்! இந்தி பேசும் மாநிலங்களுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை நிரந்தர அடிமையாக்கும்! - மே பதினேழு இயக்கம் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற போர்வையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை முன்மொழிந்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்னிந்திய மாநிலங்களை அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும். அதிக மக்கள்தொகை கொண்ட இந்தி பேசும் மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரித்து, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க இந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை முன்மொழியும் பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 2002ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 84வது நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதா, முந்தைய நடைமுறையை பின்பற்றி, 1971 மக்கள்தொகை அடிப்படையில், தொகுதிகளை கூட்டவோ குறைக்கவோ செய்யாமல், தொகுதிகளின் எல்லைகளை மட்டுமே மாற்றியமைத்தது. அந்த மசோதாவின்படி அடுத்த தொகுதி மறுசீரமைப்பு 2026 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றது. அதனடிப்படையில் 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை கொரானாவை காரணம் காட்டி தவிர்த்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முன்வைத்து 131 வது சட்டத்திருத்த மசோதாவாக நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு திருத்த மசோதாவை இன்று (ஏப்ரல் 16, 2026) சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்கிறது. இது பாஜக அரசு மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டமாகும். ஒன்றிய அரசின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுக் கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தியதில் தமிழ்நாடு முன்னணியில் வகிக்கிறது. இதனால் நாட்டின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு பெரும்பங்கு வகிக்கிறது. நாட்டிற்கு அதிக வரிவருவாய் அளிப்பதில் முன்னணியில் இருக்கிறது. கல்வி, மருத்துவம், தொழில்துறை, பொருளாதாரம் என அனைத்திலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதேவேளை, இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள்தொகை குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதோடு நாட்டை பின்னுக்கு இழுக்கின்றன. ஆனால், இந்தி பேசாத மாநிலங்களிடமிருந்து பெறப்படும் நிதியை இந்தி பேசும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து தமிழ்நாடு போன்ற மாநிலங்களை பொருளாதாரரீதியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது தமிழ்நாடு போன்ற இந்தி பேசாத மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் வகையில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் தற்போதைய நாடாளுமன்ற இடங்கள் 543 என்பதிலிருந்து 850 இடங்கள் வரை கூட்டப்படும். அதற்கேற்ற வகையிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அதிக இருக்கைகளைக் கொண்டு கட்டப்பட்டது. இதனை புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படும் போதே மே பதினேழு இயக்கம் எச்சரித்தது. நாடாளுமன்ற இடங்கள் அதிகரிக்கும் போது, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அதற்கேற்ப நாடாளுமன்ற தொகுதிகள் வழங்கப்படும். அதனடிப்படையில் தமிழ்நாட்டின் தற்போதைய 39 தொகுதிகள் 49 தொகுதிகளாக மாற்றப்படலாம். அதேவேளை தற்போது 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் சுமார் 143 முதல் 152 இடங்கள் வரை கிடைக்கும். அதாவது நாடாளுமன்றத்தில் உத்தரப் பிரதேசத்தின் பலம் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயரும். தமிழிநாட்டின் பலமோ குறிப்பிடத்தக்க அளவில் குறையும். இது தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தி பேசாத மாநிலங்கள் அனைத்திற்குமே பாதிப்பை உண்டுபண்ணுகிறது. இதன் மூலம், இந்தி பேசும் மாநிலங்களின் நாடாளுமன்ற பலம் 38.1%-லிருந்து 43.1% ஆக அதிகரிக்கிறது. ஆனால் தென்னிந்தியாவின் நாடாளுமன்ற பலம் 24.3%-லிருந்து 20.7% ஆக குறையும். இப்படியாக தென்னிந்தியாவின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் மாற்றப்படுவதால், இந்தி பேசாத மாநிலங்களின் தயவு இல்லாமலே எந்த ஒரு கட்சியும் இந்திய ஒன்றியத்தில் ஆட்சியை கைப்பற்றலாம். அப்படியான சூழலில் தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் நசுக்கப்படும். தமிழ்நாட்டின் உரிமைகளை பேச அனுப்பப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சு எடுபாடாமல் போய்விடும். இந்தி பேசும் மக்களின் சட்டமே தமிழ்நாட்டின் சட்டமாக மாற்றப்படும். இவ்வளவு மோசமான ஒரு நடைமுறையை ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை முன்வைத்தே செயல்படுத்துகிறது. தமிழ்நாட்டின் நாடாளுமன்ற அரசியல் அதிகாரத்தை குறைப்பதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் நிரந்தர அடிமையாக மாற்றிவிட முயற்சிக்கிறது பாஜக. ஆனால், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுக இதுகுறித்த எவ்வித கவலையுமின்றி இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமை நிரந்தரமாக பறிபோகும் சூழலிலும் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் ஒன்றிய பாஜக அரசின் சூழ்ச்சிக்கு துணைபோகும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. தமிழின விரோத பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு தமிழ்நாட்டின் அரசியல் உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்துள்ள அதிமுக, நாதக போன்ற கட்சிகள் தமிழ்நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது ஜனநாயக விரோதமானது. இந்தியாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களும் உரிய அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும். மொழிவழி மாநிலங்களுக்கு ஒன்றியத்தில் சம விகிதத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமல்லாது, சமூக-பொருளாதார காரணிகளை உள்ளடக்கிய ஒரு மாற்று வழிமுறையே இதற்கு தீர்வை அளிக்கும். அப்படியான ஒரு வழிமுறைதான் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்தளிக்கும் நிதி ஆணையத்திற்கும் செயல்படுத்தப்பட வேண்டுமென கருதுகிறோம். தற்போதைய வடிவிலான தொகுதி மறுசீரமைப்பு ஏற்றுக்கொள்ள இயலாதது. மக்கள் மன்றத்தில் நீண்டகாலத்திற்கு விவாதத்திற்கு உட்படுத்தி ஒரு தீர்வை எட்டும் வரை, 1971 மக்கள்தொகை அடிப்படையிலான முந்தைய நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தற்போதைய நடைமுறையின் போதாமை குறித்த எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லாதது. நிர்வாக வசதி என்ற பெயரில் நாடாளுமன்ற இடங்கள் கூட்டப்படுவதால் நிர்வாகத்திற்காகவே பெரும் நிதி செலவிடப்படும் நிலையை உண்டாக்கி விடும். ஒன்றிய அரசால் மாநிலங்களுக்கு நிதி அளிக்கவே இயலாத சூழலில் இந்த முன்னெடுப்பு தமிழ்நாடு போன்ற மாநிலங்களையே பெருமளவில் பாதிக்கும். எனவே ஒன்றிய பாஜக அரசு தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை திரும்பப் பெறுவதோடு, மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை தற்போது இடங்களில் 50% என உயர்த்திட சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மே பதினேழு இயக்கம் 9884864010 16/04/2026
மே 17 இயக்கம் | May 17 Movement tweet media
தமிழ்
4
20
28
300
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தொகுதி மறுசீரமைப்பு குறித்து முன்னரே எச்சரித்த மே 17 இயக்கம்.
தமிழ்
1
38
64
598
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழ்நாட்டுக்கு நல்லது செய்த ஒரு பாஜக தலைவரை 40 வருசம் கட்சி நடத்துகிற பாஜக காட்ட முடியுமா?
தமிழ்
2
14
28
328
May17Movement ретвитнул
மே 17 இயக்கம் | May 17 Movement
தமிழ்நாட்டுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை தர மறுக்கும் பாஜக தான் தமிழ்நாட்டில் மதக் கலவரம் பண்ணுவதற்கு சங்கிகளுக்கு நிதி கொடுக்கின்றது.
தமிழ்
3
38
63
513