تغريدة مثبتة
Actor Vijay Team
28.4K posts

Actor Vijay Team
@ActorVijayTeam
Actor Vijay Team Providing Latest News, Information And Pictures. Connecting Thalapathy Vijay Fans Everywhere With Love! Upcoming Film: #JanaNayagan
Kentucky, USA انضم Mart 2017
49 يتبع98.8K المتابعون
Actor Vijay Team أُعيد تغريده

கனிம வள மாஃபியாக்கள் ராஜ்ஜியம் நடக்கிறதா? கொள்ளை ஆட்சியை விரட்டியடிப்போம்.
சேலம் மாநகர் ரெட்டியூர் பகுதியில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்த தொலைக்காட்சி செய்தி
அதிர்ச்சி அளிக்கிறது.
தினமும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து புகார் கூறிய பின்னரும் சேலம் மாவட்ட கனிமவளத்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு.
கனிம வளங்களை பாதுகாக்கத்தானே கனிம வளத்துறை..? அல்லது கமிஷன் வாங்கிக்கொண்டு கமுக்கமாக இருக்கவா..?
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சேலம் மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளை பெருகி விட்டது. மலைகள் வெட்டப்படுவதும், மண் கடத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் கனிம வள மாஃபியாக்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
கனிம வளங்களை கொள்ளையடித்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்களுக்கு, துணையாக இருக்கிறது திமுக அரசு. ஏனென்றால் மணல் குவாரி, கல் குவாரி நடத்தும் பெரும்பாலானவர்கள் திமுகவினர்தான்.
மக்களை தவிர மற்ற எல்லா சமூக விரோதிகளுக்கும் திமுக ஆட்சியில் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது.! இப்படிப்பட்ட மோசமான ஆட்சிக்கு ஏப்ரல் மாதம்
மொத்தமாக முடிவு கட்டப்படும்.!
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @BussyAnand | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
தமிழ்
Actor Vijay Team أُعيد تغريده

குற்றவாளிகளின் கூடாரமாக மாறுகிறதா தமிழகம்? விடியா அரசின் மெத்தனத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
தலைகுனிய வைக்கும் தகவல்: தூத்துக்குடியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு எட்டயபுரம் அருகே மூதாட்டி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த அதே நபர் தான், இன்று ஒரு இளம் மாணவியின் உயிரையும் பறித்திருக்கிறார் என்பது காவல்துறையின் மிகப்பெரிய தோல்வியையே காட்டுகிறது.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: ஏற்கனவே ஒரு கொடூரமான கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய இத்தகையக் குற்றவாளிகள், பிணையில் வெளிவந்த பிறகு அவர்கள் என்ன செய்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்கத் தவறியது ஏன்? ஒரு பழைய குற்றவாளி எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக நடமாடி, மீண்டும் ஒரு கொடூரமான கொலையைச் செய்யும் அளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
தடுக்கத் தவறிய அரசு: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சி. காவல்துறையும் உளவுத்துறையும் தங்களது கடமையில் விழிப்புடன் இருந்திருந்தால், அந்த மாணவியின் உயிர் இன்று காப்பாற்றப்பட்டிருக்கும். ஒரு மூதாட்டியைக் கொன்ற போதே இவனுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தந்து, உரியக் கண்காணிப்பில் வைத்திருந்தால், இன்று மற்றொரு குடும்பத்திற்கு இந்தத் துயரம் நேர்ந்திருக்காது.
விடியா அரசின் மெத்தனம்: ஏற்கனவே ஒரு கொலைக் குற்றவாளியைச் சுதந்திரமாக நடமாட விட்டு, மீண்டும் ஒரு உயிரைப் பறிக்க வழிவகை செய்த இந்தப் பாவத்தைச் செய்தவர்கள் யார்? தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசு இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். பெயரளவிலான கைதுகளைத் தாண்டி, சட்டம் தன் கடமையைச் சரிவரச் செய்யத் தவறும் பட்சத்தில், மக்கள் இந்த அரசுக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
தமிழ்
Actor Vijay Team أُعيد تغريده

பெண்களின் பாதுகாப்பிற்கு எமனாகும் திமுக - காமுகர்களின் கூடாரமாகிறதா அறிவாலயம்?
தமிழகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சட்டத்தை எள்ளி நகையாடி, பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைத்து வரும் காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் மிகுந்த அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, 6-ஆம் வகுப்பு மாணவியிடம் திமுக கிளைக் கழகப் பொறுப்பாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அருவருக்கத்தக்கச் சம்பவம், "திமுகவினர் எதற்கும் துணிந்தவர்கள்" என்ற ஆணவத்தையே காட்டுகிறது.
கட்சி நிர்வாகிகள் வரிசையாகப் பாலியல் குற்றங்களில் சிக்கும்போது, அதன் தலைமை அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குப் பதிலாக, கள்ள மௌனம் காப்பதும், கண்துடைப்பிற்காகப் பெயரளவு நடவடிக்கை எடுப்பதும் வேதனையளிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமை, விமானப் பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலரின் அநாகரிகம், கிருஷ்ணகிரியில் 2.5 வயதுப் பிஞ்சு குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரம் இப்படிப் பெண்களுக்கு எதிரான அனைத்து அக்கிரமங்களிலும் திமுகவினரே முன்னணியில் இருப்பது, இக்கட்சி காமுகர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஒரு "பாதுகாப்பான புகலிடமாக" மாறிவிட்டதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
ஆட்சியதிகாரம் கையில் இருக்கிறது, எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது" என்கிற திமிர் பிடித்த மனநிலை திமுகவின் கடைமட்டத் தொண்டன் வரை பரவியிருப்பதற்குத் தலைமையின் கையாலாகாதத்தனமே முழு முதற்காரணம். பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பற்ற ஒரு நரகச் சூழலைத் தமிழகத்தில் உருவாக்கியுள்ள திமுக தலைமைக்கு, வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
"பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய திமுகவிற்கு வாக்களிப்பது, நமது பாதுகாப்பிற்கு நாமே வைக்கும் கொள்ளி" என்பதைத் தமிழகப் பெண்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். பெண்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் இந்த மக்கள் விரோதத் தலைமையைப் பதவியில் இருந்து தூக்கியெறிவதே தமிழகப் பெண்களின் பாதுகாப்பிற்கு ஒரே வழி!
தமிழ்
Actor Vijay Team أُعيد تغريده

இந்தி திணிப்பை எதிர்த்து, ரயில் நிலையத்தில் இந்தி பெயரழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்க செயல்பாட்டாளர் தோழர் சிவா திலீபன் எனும் திரு. சிவக்குமார் அவர்கள், தமிழ்நாட்டின் மொழி உரிமைக்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கும் செய்தி மன வேதனையைத் தருகிறது.
தோழர் சிவக்குமார் அவர்களின் தியாகம், தமிழக மொழி உரிமைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைக்கும்; என்றென்றும் போற்றப்படும்! அவரின் தியாகத்தை நினைவுகூரும் இத்தருணத்தில், "தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் கைவிட மாட்டோம்; அதனை சீரிய அரசியல் போராட்டங்களின் மூலம் நிலைநாட்டுவோம்; இனி, ஒரு உன்னத உயிரும் அதற்காக நாம் இழக்கக் கூடாது என்று உறுதியேற்போம்."
தோழர் சிவக்குமார் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், மே 17 இயக்கத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மொழி உரிமைப் போராளி தோழர் சிவக்குமார் அவர்களுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!
தமிழ்

JUST IN: திமுகவைச் சேர்ந்தவர் மீது பாலியல் புகார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டல்.
x.com/NewsTamilTV24x…
தமிழ்
Actor Vijay Team أُعيد تغريده
Actor Vijay Team أُعيد تغريده

ஒரு மாதம் முழுவதும் நோன்பிருக்கும் கடமையை நிறைவேற்றி, உணவு, செல்வம், உயர்ந்த எண்ணங்கள் ஆகிய அனைத்தையும் பகிர்ந்து ரமலானை போற்றுகிறார்கள் இஸ்லாமிய உறவுகள். அவர்களின் உரிமைக் குரலாய் என்றும் களத்தில் ஒலிக்கும் கழகத் தலைவர் அவர்கள் பங்கேற்ற, நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பிலான 'இஃப்தார் நோன்புத் திறக்கும் நிகழ்ச்சி', மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், இஸ்லாமிய உறவுகளுடன் இணைந்து கழகத் தலைவர் அவர்கள் நோன்பு திறந்து, நல்லிணக்க உரை வழங்கினார். நம் கழகத்தின் மீது பல்வேறு தரப்பினர் பேசிவந்த அவதூறுகளுக்குப் பதில் சொல்லும் விதமாக, "தமிழக வெற்றிக் கழகம் மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று மீண்டும் ஒருமுறை உரக்கக் கூறியிருக்கிறார் நம் வெற்றித் தலைவர் அவர்கள்.
கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், ஆதிக்கத்திற்கு எதிரான அனைத்து மக்களுக்கான ஆட்சியை, மக்கள் துணையுடன் வென்றெடுப்போம்.
1/2




தமிழ்
Actor Vijay Team أُعيد تغريده

டியர் TVK விர்சுவல் வாரியர்ஸ்..
"எங்கோ அடித்தால் யாருக்கோ வலிக்கும்" என்பார்கள். இன்று தமிழகத்தில் நடப்பதும் அதுதான். திமுகவின் சட்டவிரோதச் செயல்களையும், மக்கள் விரோதப் போக்குகளையும் நாம் தகுந்த ஆதாரங்களோடு கேள்வி கேட்கும் போது, ஆளுங்கட்சியின் அடிமட்டம் முதல் மேலிடம் வரை அதிர்ந்து போகிறார்கள்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்கள், உண்மையை மறைக்கப் பல்வேறு "அரசியல் தரகர்களை" ஏவி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அந்தத் தரகர்கள் இன்று களத்தில் குதித்துச் செய்யும் நகைச்சுவைகளைப் பார்க்கும்போது நமக்குப் பரிதாபம்தான் ஏற்படுகிறது.
திசைத்திருப்பும் நோக்கில் அவர்கள் எத்தனை அவதூறுகளைப் பரப்பினாலும், தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது.
ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பும் இந்த வாட்சப் யூனிவர்சிட்டி கோமாளிகளை மக்கள் நன்றாகவே அடையாளம் கண்டு வைத்துள்ளார்கள். மக்கள் சந்திக்கும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
யார் குரைத்தாலும், யார் நம்மை வம்புக்கு இழுத்தாலும் நாம் சலனப்படப் போவதில்லை. அவர்களின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு நாமும் அதே பாணியில் பதில் அளிப்பது நமது நேரத்தை வீணடிக்கும் செயல்.
"யானை வரும் பின்னே,
மணி ஓசை வரும் முன்னே" - தமிழக அரசியல் மாற்றத்திற்கான மணியோசை.. இல்லையில்லை விசிலோசை ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது சிலருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் செய்ய வேண்டியது.. இதில் கவனம் சிதறவேண்டாம். வாடகை வாய்களின் வன்ம பொய்ப் பிரச்சாரங்களை ஒதுக்கித் தள்ளுங்கள். மக்கள் விரோத திமுக அரசின் தோல்விகளையும், மக்களின் வலிகளையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்வோம். களத்தில் இறங்கி மக்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.
எத்தனை தரகர்கள் பொய்பிரச்சாரங்களுடன் ஏவப்பட்டு குறுக்கே நின்றாலும், நீதியின் பாதையில் நமது பயணம் தொடரும். தமிழக மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நண்பா நண்பிஸ்.. பொய் பிரச்சார ஊடகச் செய்திகளை, வன்ம வாடகை வாய்களை, சகல கட்சி அரசியல் தரகர்களை புறந்தள்ளுங்கள். மக்களுக்கான பிரச்சினைகளை மட்டுமே கவனம் செலுத்தி களமாடுவோம்!.
தமிழ்
Actor Vijay Team أُعيد تغريده
Actor Vijay Team أُعيد تغريده
Actor Vijay Team أُعيد تغريده
Actor Vijay Team أُعيد تغريده

BREAKING: We are LIVE from the TVK Iftar event.
x.com/i/broadcasts/1…
English














