Raju Narayanan 🇮🇳
14.4K posts

Raju Narayanan 🇮🇳
@TweeetzR
பொய்யான உலகில் மெய்யான இன்பம் தேடும் மூடன் நான்|நமாம்யஹம் த்ராவிடவேத சாகரம்|ஶ்ரீவைஷ்ணவம்| Watching through Third Eye| Proud Bharathiya🇮🇳| Proud Sanathani🔥












நமது பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணன் திரு @annamalai_k அவர்கள் மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்தார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் இப்போது அவர் எடுத்திருப்பதாக கூறப்படும் தனிப்பட்ட முடிவுகள் கட்சியின் உண்மை தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் மன வருத்தத்தையும் தந்துள்ளது ஏனென்றால் பாஜக என்பது தனி நபர்களை நம்பி இருக்கும் கட்சி அல்ல இது தூய்மையான கொள்கைகளையும் தேசபக்தியையும் அடித்தளமாக கொண்ட ஒரு இயக்கம் எந்த காலத்திலும் இங்கே தனி மனிதர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது கிடையாது கட்சியில் பதவிகளும் பொறுப்புகளும் தற்காலிகமானவை. ஆனால் கட்சியின் சித்தாந்தமும் தேசப்பணியும் மட்டுமே நிரந்தரமானது டெல்லி தேசிய தலைமை அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரிய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்திருந்தது அப்படி இருக்கும்போது கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கூட அதை தலைவர்களிடம் பேசி தீர்த்துக் கொண்டு கட்சி கொள்கையே தொடர்வது தான் தர்மம் அதை விடுத்து தனியாக புதிய பாதை தேடுவது பாஜக உண்மையான தொண்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது தமிழகத்தில் பாஜக இன்று வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு பின்னால் லட்சக்கணக்கான சாதாரண தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறந்து விடக்கூடாது நம் பாரத பிரதமர் @narendramodi அவர்களின் நேர்மையான தலைமையை பார்த்து பாஜகவிற்கு வந்த எந்த ஒரு உண்மையான தேசபக்தனும் தனிநபர் அரசியலின் பின்னால் போகமாட்டான் நம் நாடு உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பின்னால் இரும்பு அறனாக உறுதியோடு நிற்க வேண்டும். எனவே பாஜகவின் தேசிய தலைமை காட்டும் பாதையில் ஒன்றிணைந்து கட்டுக்கோப்பாக அணிவகுத்து நிற்க வேண்டி அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளின் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.. AP இராஜசிம்மன் மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் மாவட்ட தலைவர் மதுரை கிழக்கு மாவட்டம்.












