🙏🪷 *சிவாய நம. கடந்த வாரம் ஞாயிறு அன்று ஶ்ரீவில்லிபுத்தூரில் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் நடைபெற்ற திருப்பணி பற்றி Behindwoods Channel இல் செய்தி வெளிவந்துள்ளது.*
facebook.com/share/r/2a94dd…
நாகைப்பட்டினம்,திருகண்ணபுரம் - திருப்புகலூர் தலத்திற்கு அருகில் உள்ள திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருப்பதிகம் அருளிய இராமநந்தீச்சரம் திருத்தலத்தில் திருச்சுற்று பிரகாரத்தில் கருங்கல் தளம் அமைக்கும் வாய்ப்பினை பெருமான் நமது கோவை அரன் பணி அறக்கட்டளைக்கு நல்கியுள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், வயலூர் கிராம சிவாலயத்தில் நமது அரன் பணி அறக்கட்டளை மூலம் முன் மகா மண்டபம் மற்றும் அதன் சுதை பணிகள் செய்து கொடுக்க திருவருள் கூட்டியது.
01-02-2023 அன்று திருக்கோயில் குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது.
01-02-2023 அன்று திருவாரூர் கமலை ஞானப்பிரகாசர் திருக்கோயில் குடமுழுக்கு, திருக்கயிலாய பரம்பரை தருமையாதீன குருமகா சன்னிதானம் மற்றும் வேளாக்குறிச்சி ஆதீனம் குருமகா சன்னிதானங்கள் முன்னர் நடைபெற்றது.
உடன் வேளாக்குறிச்சி மற்றும் திருப்பனந்தாள் ஆதீன இளவரசு சாமிகள் கலந்துக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிக்காடு என்ற இடத்தில் உள்ள
திருகற்றளிவக்கீஸ்வரமுடையார் ஆடிப்பூரம்மை திருக்கோயிலில் நமது அரன்பணி அறக்கட்டளை மூலம் அறுபத்து மூவர் திருமேனிகள் வாங்கிக்கொடுக்கப்பட்டது. instagram.com/p/Cliu03_SGbU/…