DIRECTOR VA. GOWTHAMAN
773 posts


ஆஷா
மறைந்துற்றாரா!
பறந்து விட்டாரா
பாதி லதா?
மூச்சை நிறுத்திக்கொண்டதா
மும்பைக் குயில்?
வயதைத்
தீர்மானிக்க முடியாத
தீங்குரல்
சொற்களுக்கு வலிக்குமென்று
வருடிவிடும் மயிலிறகு மனசு
இந்திய மொழிகளையெல்லாம்
உள்வாங்கி உச்சரித்த உதடு
இனி இல்லையா?
நனைந்த துணியாய்க்
கனக்கிறது இதயம்
“வெண்ணிலா
வெண்ணிலா
வெண்ணிலாவே
வந்ததே முதற்காதல்”
அந்தக் குரல் வசீகரத்தால்
முதல் மீசை முளைத்தது
என் வார்த்தைகளுக்கு
போய்வா பாட்டரசி!
உன் குரல்
பாடிக்கொண்டே இருக்கும்
இந்தியக் காற்றில்
என்றென்றும்

தமிழ்

இயக்குநர் வ.கௌதமன் கெள.பரஞ்ஜோதி B.Com.,MBA
தொழிலதிபர்
க.கண்ணன் அன்பு மகன்
க.குணாநிதி B.Arch
திருமண நிச்சயதார்த்த விழா.
சான்றோர்களும் பேராளுமைகளும்
நேரில் வந்து நெஞ்சம் நெகிழ வாழ்த்திய காணொளி.
D26044 - Guna & Jothi Celebrity Teaser - FINAL-HD.mp4
தமிழ்
DIRECTOR VA. GOWTHAMAN retweetet

இயக்குநர் வ.கௌதமன் மகள் பரஞ்ஜோதி B.Com.,MBA - தொழிலதிபர் க.கண்ணன் மகன் க.குணாநிதி B.Arch, திருமண நிச்சயதார்த்த விழா.
#வகெளதமன் @VaDirector
தமிழ்

இப்படியே நீடிக்கட்டும்
தற்காலிகப் போர்நிறுத்தம்
நிரந்தரமாகட்டும்
ஹோர்முஸ் நீரிணையும்
அகந்தையால் அடைக்கப்பட்ட
இதயங்களும்
திறந்தே இருக்கட்டும்
நாகரிகத்தின்
பிறப்பிடமாகிய ஈரான்
அநாகரிகத்தால்
அழிந்துபடக் கூடாது
உலகத்தின் எந்தவிளிம்பில்
போர் நிகழ்ந்தாலும்
இன்னொரு விளிம்பில்
எதிர்வினை இருக்கும்
டென்மார்க்கில் ஒரு பசு
பூச்சி மருந்தடித்த
புல்லைத் தின்றால்
ஆஸ்திரேலியாவில்
சாக்லேட் தின்னும் குழந்தை
சாகக் கிடக்கும்
முடிவுக்கு வரட்டும்
யுத்தம்
ஏவுகணைகளையும்
ட்ரோன்களையும்விடவும்
பேச்சுவார்த்தைகள்
வலிமையானவை
தோட்டாக்களில்
தொடங்கிய போர்
சொற்களில் முடியட்டும்
கல்லெறிந்து விரட்டுங்கள்
கழுகுகளை;
தானியமிட்டுக் கூப்பிடுங்கள்
புறாக்களை

தமிழ்

@Vairamuthu நீங்கள் வந்ததும்
உளமகிழ்ந்து
வாழ்த்தியதும்
பெருமழைபோல்
இருந்தது.
இயற்கையின் வரமாக
உடனொரு பெரு
மழையும் வந்தது.
இருமன
இல்லத்தின் சார்பில்
நெகிழ்ந்த
நன்றிகள் ஐயா
அன்றும் இன்றும்
என் மீது
நீங்கள் காட்டும்
அளவற்ற அன்புக்கும்
அளவில்லா பாசத்திற்கும்
நானென்ன
கைமாறு செய்வேன்
❤️🙏
தமிழ்

சென்னை
இயக்குநர் வ.கெளதமன்
இல்லத் திருமண
உறுதி ஏற்பு விழா
மணமக்கள்:
பரஞ்ஜோதி - குணாநிதி
மணமக்களை வாழ்த்தினேன்
நடிகர்கள்
சந்தானம், ரெடின் கிங்ஸ்லி
தமிழழகன் உடனிருந்தனர்
மணமகள் பாட்டு:
"காதல் கணவா - உந்தன்
கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம் - இது
சத்தியமே
தாய் வழி வந்த - எங்கள்
தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போலே
தூய்மையான என்சத்தியம்
புனிதமானது
வாழை மரம் போல்
என்னை வாரி வழங்குவேன்
ஏழைகண்ட புதையல்போல
ரகசியம் காப்பேன்
கணவன் என்ற
சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்
உனது உலகை
எனது கண்ணில்
பார்த்திடச் செய்வேன்
மழை நாளில்
உன்மார்பில் கம்பளி ஆவேன்
வெயில்நாளில் தென்றலாகி
வேர்வை துடைப்பேன்"

தமிழ்









