Mohan Samikkannu

50.7K posts

Mohan Samikkannu banner
Mohan Samikkannu

Mohan Samikkannu

@MohanSamikkannu

தமிழன்,நடுநாட்டு அரசன், Mechanical Engineer, Software Profession by accident, விவசாயியாக வளர்ந்தவன், விவசாயியாக வாழ ஆசைபடுபவன்,சித்த மருத்துவத்தை பின்பற்றுபவன்

Neyveli Se unió Şubat 2016
731 Siguiendo3.5K Seguidores
Tweet fijado
Mohan Samikkannu
Mohan Samikkannu@MohanSamikkannu·
எங்கள் நிலம் எங்கள் வாழ்க்கை NLC நிர்வாகமே வெளியேறு... நாங்க வாழ எங்கள் நிலம் வேண்டும்.. #PMKAgainstNLCLandGrab #NoNewCoalMines #PMK
தமிழ்
0
95
118
0
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது.!
தமிழ்
0
46
127
2.1K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக, சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்த போது.! #CasteCensus #PMK
தமிழ்
5
56
151
1.3K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும்! மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12&ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில், இன்றைய நிலவரப்படி வெறும் 41.60 டி.எம்.சி, அதாவது 79 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாக உயர்வதுடன், அணைக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்தால் தான் குறுவை சாகுபடி காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியும். அதற்கு இன்னும் குறைந்தது 12 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதுடன், வினாடிக்கு குறைந்தது 18 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டியது கட்டாயமாகும். ஆனால், இன்றைய நிலையில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 11.49 டி.எம்.சி, கபினி அணையில் 4.47 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 2.97 டி.எம்.சி, ஹேமாவதி அணையில் 11.41 டி.எம்.சி என மொத்தம் 33.45 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 29.08 % மட்டுமே என்பதால் இருக்கும் நீரை கர்நாடகம் திறந்து விட வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு குறுவை பருவத்தின் போது தான், அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். இதனால் உழவர்களுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும். இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலத்தடி நீரை பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக உழவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை ஆகும். இதற்காக காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உச்சவரம்பின்றி அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும். அத்துடன் 24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், இடுபொருள் மானியமாக ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
தமிழ்
2
38
94
2.1K
Mohan Samikkannu retuiteado
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
இன்று - உலக சுற்றுச்சூழல் தினத்தை (World Environment Day) முன்னிட்டு, பசுமைத்தாயகம் சார்பில், பல்லாவரம் கண்டோன்மென்ட் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்த போது.! #GenerationRestoration #WorldEnvironmentDay #Pasumaithayagam #PMK
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
1
24
69
622
Mohan Samikkannu retuiteado
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
இன்று - உலக சுற்றுச்சூழல் தினத்தை (World Environment Day) முன்னிட்டு, பசுமைத்தாயகம் சார்பில், பல்லாவரம் கண்டோன்மென்ட் உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்த போது.! #GenerationRestoration #WorldEnvironmentDay #Pasumaithayagam #PMK
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
2
40
88
692
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போது.! #CasteCensus #PMK
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
5
97
326
5.4K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போது.! #CasteCensus #PMK
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
6
64
209
3.7K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போது.! #CasteCensus #PMK
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
2
83
262
4.7K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 131-ஆம் பிறந்தநாளில் தமிழை வளர்க்கவும் மதநல்லிணக்கம் காக்கவும் உறுதியேற்போம்! இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் 131-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் மொழிக்கும், சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. அன்னைத் தமிழை தேசிய ஆட்சிமொழியாக அரியணை ஏற்றவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அவர் ஆற்றிய பணிகளை இந்த நாளில் நினைவு கூர்வோம். அவர் விரும்பியவாறு அன்னைத் தமிழுக்கு அரியணை பெற்றுத் தரவும், மக்கள் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் உறுதியேற்போம்.
தமிழ்
1
27
104
1.5K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
இன்று உலக சுற்றுச்சூழல் நாள்! #WorldEnvironmentDay உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் #NowForClimate என்பதை இவ்வாண்டின் முழக்கமாக ஐநா அவை முன்வைத்துள்ளது. காலநிலையில் மாற்றத்தின் காரணமாக அளவுக்கதிக மழை, பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன! இயற்கை பேரிடர்கள் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும். இதனை எதிர்கொள்ள போர்க்கால வேகத்தில் தமிழ்நாடு அரசு தகவமைப்பு (Adaptation) நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் ஒரு அங்கமாக, சென்னை பெருநகருக்காக ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு 2023ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் அளிக்கப்பட்ட திருப்புகழ் குழு அறிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும். (The Advisory Committee for Mitigation and Management of Flood Risk in the Chennai Metropolitan Area, led by V. Thiruppugazh IAS) சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுபாடு தடுப்பு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளுதல், நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சி, நீடித்திருக்கும் போக்குவரத்து என அனைத்திலும் தமிழ்நாடு முழுமை அடைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும். அதன் ஒரு இன்றியமையாத பகுதியாக தமிழ்நாட்டின் சதுப்புநிலங்கள் அனைத்தையும் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின் படி, இஸ்ரோ SAC Wetlands Atlas 2021 பட்டியலில் உள்ள தமிழகத்தின் 26,883 நீர்நிலைகளின் எல்லைகளை வரையறை செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை (Notification) வெளியிட வேண்டும். சென்னை கொடுங்கையூர், பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் திட்டமிடப்பட்டுள்ள மிக ஆபத்தான குப்பை எரிஉலை (Incinerator) திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இந்த சுற்றுச்சூழல் நாளில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். #WorldEnvironmentDay #NowForClimate
தமிழ்
2
49
107
1.8K
Mohan Samikkannu
Mohan Samikkannu@MohanSamikkannu·
பாமக, தவெக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர், கொங்குநாடு மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தவாக, ஐஜெகே, புதிய தமிழகம், பார்வார்ட் பிளாக், மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாய பிரதிகள் பங்கேற்று ஆதரவளித்தனர். திமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்க இயலாத நிலையிலும் கூட்டத்தின் தீர்மானத்தை ஆதரிப்பதாக தெர்வித்தனர். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம். #CasteCensus #PMK #AnbumaniRamadoss #cmvijay
Mohan Samikkannu tweet mediaMohan Samikkannu tweet mediaMohan Samikkannu tweet media
தமிழ்
1
2
10
331
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
125 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 4.1% ஆக குறைப்பு: உரிமைகள் பறிக்கப்படுவதை தமிழக அரசு ஏற்கக் கூடாது!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
6
74
222
3.8K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் வாழ்விலும் கோடை முடிந்து வசந்தம் பிறக்கட்டும்; கல்வி சிறக்கட்டும்! தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்து அரசு பள்ளிகளும் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. விடுமுறையை முடித்து கல்வி பயிலும் ஆர்வத்துடனும், ஆசிரியர்களையும், நண்பர்களையும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சியுடனும் மீண்டும் பள்ளி திரும்பும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி மட்டும் தான். அந்த செல்வம் ஊற்றெடுக்கும் மணற்கேணி பள்ளிகள் தான். கல்விக் கோயில்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து திரும்பும் மாணவர்களின் வாழ்க்கையில் வசந்தம் பிறக்கட்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கிடைக்கட்டும்; அதன் மூலம் அனைவருக்கும் கல்வி கிடைக்கட்டும்; தமிழகத்தில் கல்வி சிறக்கட்டும்!
தமிழ்
6
72
223
5.1K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது: குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! திருச்சி காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது. சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற அவல நிலை நிலவுகிறது. அதனால் தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. அதன் பிறகும் அதே நிலை தொடரக் கூடாது. பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த சிங்கப்பெண் சிறப்புப் படை உள்ளிட்ட திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். @CMOTamilnadu @tnpoliceoffl
தமிழ்
4
112
257
7.9K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
மின்வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து 18 ஹார்டு டிஸ்குகளில் தரவுகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கணினிகளில் மிக முக்கியமான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த 18 ஹார்டி டிஸ்க்குகள் திருடப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுத்துறை அலுவலகத்திலிருந்து மிக முக்கியமான தரவுகள் திருடப்பட்டிருப்பதும், அதற்கு சாதகமான சூழல் நீண்டகாலமாக உருவாக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை. திருடப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள், ஏற்கனவே நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பதால், மின்சார வாரியத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காக நடந்த சதியாக இருக்கக்கூடும் என்று ஐயங்கள் எழுந்துள்ளன. மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டதாக கூறப்படும் போதிலும், இதுவரை 8 ஹார்டு டிஸ்குகள் காணாமல் போனதாக மட்டுமே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில் 18-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்குகள் காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மின்வாரிய தலைமை அலுவலகத்திற்குள் வெளியாள்கள் நுழைய வாய்ப்பில்லை. எனவே, மின்வாரிய அதிகாரிகளின் துணையில்லாமல் இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான 10 அரசு அலுவலகங்களை பட்டியலிட்டால் அதில் மின்சார வாரியத் தலைமை அலுவலகமும் கண்டிப்பாக இடம் பெறும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாகவே கண்காணிப்பு காமிராக்கள் வேலை செய்யவில்லை என்றும், தரகர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டே இவ்வாறு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் அதிக ஊழல் நடைபெறும் துறைகளில் மின் துறை மிகவும் முக்கியமானது. அதனால் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் இவ்வாறு செய்யப்பட்டதா? ஐந்தாண்டுகளுக்கு மேலாக கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாதது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். @CMOTamilnadu
தமிழ்
14
220
582
38K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், எனது இனிய நண்பருமான @annamalai_k அவர்கள் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வுப் பயணம் தொடரவும், நூறாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்.
தமிழ்
12
511
2.7K
60.2K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வெங்கூர் கிராமத்தைச் சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஆரம்பகால தொண்டரான து.மூர்த்தி நாயக்கர் - கலாவதி தம்பதியரின் மகன் மூ.சரவணன் மற்றும் கோ.சிட்டிபாபு நாயக்கர் - ஹேமலதா தம்பதியரின் மகள் சி.அனிதா இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
0
37
190
3.6K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பா.குமார் - சித்ரா தம்பதியரின் மகன் கு.ரஞ்சித்குமார் மற்றும் வீ.சீனிவாசன் - லலிதா தம்பதியரின் மகள் சீ.ஜஸ்வந்தி இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
1
41
292
7K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
செங்கல்பட்டு மத்திய மாவட்டம், காட்டாங்குளத்தூர் பாமக கிழக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் காயரம்பேடு சண்முகம் நாயக்கர் - தேவகி தம்பதியரின் மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட மாணவர் சங்க செயலாளருமான ச.அஜித்குமார் மற்றும் மோ.கோவிந்தராஜ் நாயக்கர் - பத்மா தம்பதியரின் மகள் கோ.கலைச்செல்வி இணையரின் திருமண வரவேற்பு விழா, கூடுவாஞ்சேரியில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
1
42
182
3.3K
Mohan Samikkannu retuiteado
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
ரூ.36,585 கோடி எங்கே, ரூ.2044 கோடி எங்கே? மராட்டிய அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
32
302
743
17.8K