திசை புத்தக நிலையம்

1.2K posts

திசை புத்தக நிலையம் banner
திசை புத்தக நிலையம்

திசை புத்தக நிலையம்

@ThisaiBookStore

அனைத்து தரப்பினருக்குமான தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை கொண்டுள்ளோம். We have rare collection of books in Tamil & English.

Chennai 参加日 Ekim 2022
12 フォロー中1.9K フォロワー
திசை புத்தக நிலையம்
நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக 04-05 ஏப்ரல்2026 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் திசை புத்தக நிலையம் விற்பனைக்கு திறக்கப்படாது. சிரமத்திற்கு வருந்துகிறோம். Thisai Book Store will not operate on 04April2026 and 05April2026 (Saturday and Sunday) for administration and maintenance work. Sorry for the inconvenience.
தமிழ்
0
2
1
70
திசை புத்தக நிலையம்
தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அறிவை கருவியாய் கைப்பிடிக்க இம்மாநாடு பேருதவியாய் விளங்கும். தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டோர், தமிழினத்தின் மீது பற்றுகொண்டோரை அன்புடன் அழைக்கிறோம். மே பதினேழு இயக்கத்தினரின் ஆறுமாத கால உழைப்பின் விளைச்சல், 17 ஆண்டுகால போராட்டத்தின் விதை இம்மாநாடு. அறிவாயுதம் ஏந்த வாரீர். திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் 01-03-2026
தமிழ்
0
2
1
47
திசை புத்தக நிலையம்
2025ம் ஆண்டும் இரண்டாம் அறிவர் மாநாட்டை நடத்தினோம். இம்மாநாட்டில் 'தமிழரின் அரசியல் வரலாறு' கருப்பொருளாக முன்னிலைப்படுத்தப்பட்டது. சங்க காலம் முதல், மூவேந்தர் ஆட்சிகள், பிற்கால ஆட்சிகள், காலனிய காலம் என வரலாறை பேசியது இம்மாநாடு. அரசர்களின் வரலாறாக மட்டுமல்லாமல் வெகுமக்கள் வரலாறு பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது. சமூக-அரசியலோடு பின்னிப்பிணைந்த சமயங்கள் வரலாறும் பேசப்பட்டது. ஆரிய வைதீகத்தின் மீதான தமிழர்களின் எதிர்வினைகளை கோடிட்டுக் காட்டியது. வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலும், சங்ககாலம் முதல் பெரியார் வரையிலான வைதீக எதிர்ப்பு போராட்ட வரலாறு விளக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் மிக விரிவான உரை நிகழ்த்தினார்கள். தமிழ்த்தேசிய அரசியலின் தவிர்க்க இயலா தேவையை இம்மாநாடுகள் மூலமாக மே17 இயக்கம் எடுத்துரைக்கிறது.
தமிழ்
1
2
2
68
திசை புத்தக நிலையம்
'தமிழ்த்தேசியப்பெருவிழா 2026' மாரியம்மனோ, முருகனோ, அய்யனாரோ, ஆசிவகமோ, சேயோன்-மாயோன் என எந்த நம்பிக்கையாக இருந்தாலும், பெளத்தமோ, சமணமோ, வைதீகமோ, சைவமோ, வைணவமோ, இசுலாமோ, கிருத்துவமோ என எம்மதமாக அல்லது மார்க்கமாக இருந்தாலும் அவை தமிழர் மீது உருவாக்கிய தாக்கங்கள் இன்றளவும் நம்முடைய சமகால அரசியல்-சமூக வாழ்வை பாதிக்கின்றன. இவற்றில் எது வாழ்ந்தது? எது வீழ்ந்தது? என நாம் அறிய வேண்டும். எது உதவியது? எது சுரண்டியது? என நாம் அறிந்தாக வேண்டும். இன்று எது வருகிறது? எது விரட்டப்படுகிறது? என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.
திசை புத்தக நிலையம் tweet mediaதிசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
1
9
11
450
திசை புத்தக நிலையம்
இந்திய சுதந்திரம் அடைந்துக்க்கொண்டிருந்த 1945- 47 காலக்கட்டத்தில் வார்லி ஆதிவாசிகளின் புரட்சி நடைபெற்றது. ‘புதிய இந்தியாவுக்கான காந்தியடிகளின் லட்சியக் கனவுதான் அப்போது மக்கள் மனதை கவ்விப் பிடித்திருந்தது. இந்திய சமூகத்தின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு காந்தியம் போதாது என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் புரட்சி. ‘புதிய இந்தியாவுக்கான டாக்டர் அம்பேத்கரின் லட்சியக் கனவும் ‘மார்க்சியத்தின் லட்சியக் கனவும்’ மக்களின் மனங்களை வெல்வதற்காகப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், மார்க்சியத்தின் சிறப்பான எடுத்துக்காட்டாக கோதாவரியும் பாருலேகரும் உயர்ந்து நின்றார்கள். சமூக மாற்றத்துகான பரிசோதனையாகவே அவர்கள் வார்லி ஆதிவாசிகளின் புரட்சியை வழிநடத்தியிருக்கிறார்கள். அதன் வெற்றி வலிமையான வேர்களோடு இன்றும் பசுமையாக இருப்பது சமூக ஊழியர்களுக்கான பாடம். மனிதர்கள் விழிப்படையும்போது : ஆதிவாசிகள் புரட்சி : வார்லி விவசாயிகளின் போராட்டம். -ரூ 400 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
0
3
7
135
திசை புத்தக நிலையம்
நடப்பதோ சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு ( 1925 – 2024). இந்த நூற்றாண்டின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதற்கு, சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், செயல் பாடுகள், இன்றைய நிலைக்கான பொருத்தப் பாடு ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்! இதை அறிந்து கொள்ள ஒரு மிகச் சிறந்த ஆய்வாளரிடமிருந்து உருவான ஒரு மிகச் சிறந்த ஆவண நூல் பற்றிய அறிமுக வுரை தான் இது! திராவிட சிந்தனையாளர், திராவிட இயக்க ஆய்வாளர், திராவிட கணினி என்று எல்லோராலும் அறியப்படும் க.திருநாவுக் கரசு அவர்களின் பெரும் முயற்சியில், உழைப்பில், ஆர்வத்தில், தன்னலமில்லா நோக்கத்தில் உருவான மற்றுமொரு சிறந்த படைப்பு இந்த நூல்! சுயமரியாதை இயக்க வரலாறு : இரு பாகங்கள் - ரூ 1600 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai #selfrespectmovement #periyarism
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
0
4
6
167
திசை புத்தக நிலையம்
சாப்பிடுவதற்கான அவசியமே இல்லாமல் போய்விட்டால், வேண்டும் பொருட்களை அச்சிட்டுக் கொள்ள 3டி ப்ரிண்டர்கள் இருந்தால், நம் வாழ்க்கை எப்படியிருக்கும்? ரோம் நகரில் சுதந்திரமாக வாழ்ந்துவரும் ஊர்சுற்றிகள் உண்மையான சுதந்திரத்தைத் தேடிப் புறப்பட்ட கதை இது. ஊர்சுற்றிகள் - ரூ 370 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai #indusvalleycivilization
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
0
5
4
112
திசை புத்தக நிலையம்
Indus Valley Civilization : A Land of the Ancient Dravidians - Rs : 199 This book draws up on the works of the scholars to understand the Indus civilization through a Dravidian model. The book provides a brief introduction to the Indus Valley Civilization and the Indus Script. The chapters discuss the close relationship of Indus valley with the Dravidian culture across archeology, writing, religion and astronomy, based on the works of the scholar Iravatham Mahadevan. பண்டைத் தமிழர் தம் சிந்துவெளி நாகரிகம் - ரூ : 180 “திராவிடி”, “தாமிலி”, “திராமிட”, “திராவிட” என்ற இந்தச் சொற்கள் அனைத்தும் இந்தோ-ஆரியம் சாராத ஒரு சொல்லுடன் தொடர்பு கொண்டவையாக இருக்க வேண்டும் – அச்சொல் இன்று நாம் புழங்கிக் கொண்டிருக்கும் “தமிழ்” என்ற சொல்லாகவே இருக்க வேண்டும். – ஜான் ரால்ஸ்டன் மார் (John Ralston Marr) புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai #indusvalleycivilization
திசை புத்தக நிலையம் tweet mediaதிசை புத்தக நிலையம் tweet media
English
0
2
3
150
திசை புத்தக நிலையம்
சமூகத்தில் சமத்துவம் நிலவ சகோதரத்துவத்தை உயர்த்தி பிடிக்கும் அறிவு முதிர்ச்சி பெற்ற மக்கள் வாழும் மாநிலமாக நமது மாநிலம் விளங்குகிறது என்பதாலேயே ”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று பெருமை பெற்றது. முற்படுத்தப்பட்டதாக அடையாளப்படுத்தப்படும் ஒரு சாதியில் பிறந்ததாக கருதப்பட்டவர் தான் நற்றமிழ் ஆசிரியராக பணியாற்றிய கனக சுப்புரத்தினம் எனும் தமிழ் புலவர். அவர் சாதிக்கட்டில் இருந்து விடுபட்டு பாவேந்தராக புரட்சிக் கவிஞராக பரிணமித்து தனது கற்றல் வெளிப்பாடாக ”சாதியினும் தாழ்ந்த படி நமக்கெல்லாம் தள்ளுபடி” என்று பிரகடனப்படுத்தினார். அத்தகைய ஆசிரியர் பெருமக்கள் நிறைந்த நமது தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பிற்கான செயல் திட்டத்தை பாடத்திட்டத்தின் வாயிலாக வகுப்பறை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் சமூகத்தை ஜனநாயக படுத்த நமது முன்னோர்கள் மேற்கொண்ட பெரும் பணியை நமது காலத்தில் நாம் செய்து முடிக்க இயலும். சாதி ஒழிந்து எல்லோரும் ஒரே நிலையில் வாழும் சமத்துவ சமூகம் படைக்க முடியும். இப்பெரும் பணியை முன்னெடுத்து செல்வதின் ஒரு சிறு முயற்சியாக இந்த சமூக ஜனநாயக கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வகுப்பறை செயல்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கையேட்டில் இடம்பெற்றுள்ள பகுதிகள் அமைந்துள்ளன. சமூகத்தை ஜனநாயக படுத்த நமது உரையாடலை துவங்குவோம். சமூக ஜனநாயகக் கையேடு Manual for Social Democracy - ரூ 300 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
0
2
5
145
திசை புத்தக நிலையம்
விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் அரசியல் பக்கங்கள் ரூ 100 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
தமிழ்
0
1
6
241
திசை புத்தக நிலையம்
நம்ம கதை எல்லாம் வரலாறா ஆகுற வரைக்கும், நம்ம கதைகள நம்ம தொடர்ந்து சொல்லிக்கிட்டே இருக்கணும்!” நம்ம கதையை சொன்னதற்கு ஓர் இடதுசாரியாக எனது நன்றிகள் வெற்றிமாறன்.! - ராஜசங்கீதன் @Rajasangeethan , நூலாசிரியர்
தமிழ்
1
1
4
334
திசை புத்தக நிலையம்
விடுதலை திரைப்படத்தை வெற்றிமாறன், சினிமா விருப்பம் என்பதைத் தாண்டி, தன் தனிப்பட்ட விருப்பமாக வேட்கையாக உருவாக்கியதாக தெரிகிறது. இத்தனை பெரிய உழைப்பை போட்டு, இடதுசாரிகள் மீதான வெறுப்பை நஞ்சாக விதைத்து வரும் கருத்தாக்கங்களையும் படைப்புகளையும் உடைத்து, ஒர் ஆகச்சிறந்த இடதுசாரிய படத்தை எடுத்து அரசு, சென்சார் போன்றவற்றின் கெடுபிடிகளைக் கடந்து இந்த இடதுசாரிய அரசியலின் சிறப்பை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்கிற மாபெரும் கடப்பாடும் பொறுப்புணர்வும்தான் வெற்றிமாறன் இப்படைப்பை ஆக்கியளிக்க காரணமாக இருந்திருக்க முடியுமென்பதை உணர முடிகிறது.
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
1
23
113
5.1K
திசை புத்தக நிலையம்
செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆப்பிரிக்க வாய்மொழி கதைகளிலும் மரபுகளிலும் நின்று சினிமாவை அணுகியவர் . 9 படங்களையும் 2 ஆவணப் படங்களையும் இயக்கிய இவரை "ஆப்பிரிக்க சினிமாவின் போப் "என்றழைக்கிறார் பிரெஞ்சு சினிமா விமர்சகர் ஜீ ஹெனபல். தொல்குடித் தழும்புகள் ரூ 180 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
0
1
7
104
திசை புத்தக நிலையம்
கென்யாவில் பிறந்த கூகி வா தியாங்கோ ஆப்பிரிக்க இலக்கியம், நாடகம், அரசியல் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். மாணவப் பருவம் தொட்டே நாடகம். நாவல். கட்டுரைகள் என இலக்கியத்தில் தனியிடம் பிடித்ததோடு, பேராசிரியராக பணிபுரிய தொடங்கியது முதல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஆப்ரிக்க நாடுகளில் நிகழ்த்தி வந்த பன்பாட்டுப் படுகொலையை தோலுரித்துக் காட்டினார். “விரும்பும் போது நான் மணமுடித்துக் கொள்வேன்” என்ற இவரது நாடகம் ஒரு பெரும் மக்கள் எழுச்சி உண்டாக்கும் அபாயம் கொண்டதென உளவுத்துறை கூறியதன் பேரில் கென்யாட்டா அரசால் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் அடைக்கப்பட்டார். சிறை காவலர்கள் கண்களில் மண்ணை தூவி மலம் துடைக்கும் தாளில் இவர் எழுதிய நாவல் ”டெவில் ஆன் தி கிராஸ்” (சிலுவையில் தொங்கும் சாத்தான்) என்ற பெயரில் வெளிவந்தது. அதன் பிறகு நாடு கடத்தலுக்கு ஆளான கூகி நியூயார்க்கில் வசித்து வந்தார். பின்பு வாழ்வின் இறுதிவரை பேராசிரியராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (மாநிலத்தில்) இர்வின் எனும் இடத்தில் பணியாற்றினார். ஆங்கிலத்தில் எழுதப்படும் இலக்கியம் உள்நாட்டு எளிய மக்களுக்கு பயன்படுவதில்லை என்றுணர்ந்த கூகி இனி ஆங்கிலத்தில் எழுதுவதில்லை என்று அறிவித்து அதன்படி இறுதிவரை வாழ்ந்தார். பேனா முனையா? துப்பாக்கி முனையா? : கென்ய எழுத்தாளர் கூகி வா தியாங்கோ ஒரு சித்திரம் - அமரந்தா ரூ 80 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
0
2
6
149
திசை புத்தக நிலையம்
டாக்டர் பி ஆர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு - தனஞ்செய் கீர் ரூ 950 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில் காமராஜர் அரங்கம் எதிரில் தேனாம்பேட்டை, சென்னை - 600086 098840 82823 #thisaibookstore #THISAI #thisaibookstore #politicalbooksstore #bookrecommendations #bookstoreinchennai
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
0
1
1
58
திசை புத்தக நிலையம்
ரித்விக் கட்டக் சிறப்பிதழ் ரூ 320 புத்தகங்களைப் பெற திசை புத்தக நிலையம் ஆவின் பால் நிலையம் அருகில், காமராஜர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை, சென்னை - 600086 9884082823
தமிழ்
1
0
0
50
திசை புத்தக நிலையம்
2025 ரித்விக் கட்டக்கின் நூற்றாண்டு. இந்த ஆண்டு அவரது நினைவின் அரை நூற்றாண்டு. வங்காளமும் இந்தியாவும் உலகமும் அவரது மகத்தான பங்களிப்பை நினைவு கூர்ந்து கொண்டாடி வருகின்றன. மரணம் வரை கவனிப்பாரற்று ஒதுக்கப்பட்ட ஓர் ஆளுமை மரணமற்ற கலை வாழ்வைப் பெற்றிருக்கிறார். நூற்றாண்டை முகாந்திரமாக வைத்து அவரது படைப்புகள் மறுவாழ்வு பெற்று திரையிடப்படுகின்றன. அவரது சிந்தனைகள் மீண்டும் விவாதிக்கப்படுகின்றன. சினிமாவை மகத்தான கலை என்று கருதுபவர்ஹளின் சூழலில் இந்த புத்துயிர்ப்பு பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. அந்த மகிழ்ச்சிக்கு வலு சேர்க்கும் பங்களிப்பே இந்தச் சிறப்பிதழ். திரைப்பட கலையை பண்பாட்டின் கூறு என்று நம்பும் ஒத்த மனத்தினர் இதற்குப் பங்களித்திருக்கிறார்கள். தமிழில் மாற்று சினிமாவை குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வரும் முக்கிய ஆளுமைகளின் எழுத்துக்கள் இதில் இடம் பெறுகின்றன. அம்ஷன்குமார், எஸ். ஆன்ந்த், ஷாஜி சென், சொர்ணவேல் ஆகியோரின் ஆக்கங்களுடன் மறைந்த மொழிபெயர்ப்பாளர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கிய கட்டக்கின் கட்டுரையும் நேர்க்காணலும் சேர்க்கப்பட்டுள்ளன.
திசை புத்தக நிலையம் tweet media
தமிழ்
1
3
3
122