Mohan Samikkannu

50.7K posts

Mohan Samikkannu banner
Mohan Samikkannu

Mohan Samikkannu

@MohanSamikkannu

தமிழன்,நடுநாட்டு அரசன், Mechanical Engineer, Software Profession by accident, விவசாயியாக வளர்ந்தவன், விவசாயியாக வாழ ஆசைபடுபவன்,சித்த மருத்துவத்தை பின்பற்றுபவன்

Neyveli 가입일 Şubat 2016
731 팔로잉3.5K 팔로워
고정된 트윗
Mohan Samikkannu
Mohan Samikkannu@MohanSamikkannu·
எங்கள் நிலம் எங்கள் வாழ்க்கை NLC நிர்வாகமே வெளியேறு... நாங்க வாழ எங்கள் நிலம் வேண்டும்.. #PMKAgainstNLCLandGrab #NoNewCoalMines #PMK
தமிழ்
0
95
118
0
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், வெங்கூர் கிராமத்தைச் சார்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஆரம்பகால தொண்டரான து.மூர்த்தி நாயக்கர் - கலாவதி தம்பதியரின் மகன் மூ.சரவணன் மற்றும் கோ.சிட்டிபாபு நாயக்கர் - ஹேமலதா தம்பதியரின் மகள் சி.அனிதா இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
0
27
153
3K
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பா.குமார் - சித்ரா தம்பதியரின் மகன் கு.ரஞ்சித்குமார் மற்றும் வீ.சீனிவாசன் - லலிதா தம்பதியரின் மகள் சீ.ஜஸ்வந்தி இணையரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
0
30
227
5.8K
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
செங்கல்பட்டு மத்திய மாவட்டம், காட்டாங்குளத்தூர் பாமக கிழக்கு ஒன்றிய அமைப்பு செயலாளர் காயரம்பேடு சண்முகம் நாயக்கர் - தேவகி தம்பதியரின் மகனும், பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட மாணவர் சங்க செயலாளருமான ச.அஜித்குமார் மற்றும் மோ.கோவிந்தராஜ் நாயக்கர் - பத்மா தம்பதியரின் மகள் கோ.கலைச்செல்வி இணையரின் திருமண வரவேற்பு விழா, கூடுவாஞ்சேரியில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
1
35
146
2.8K
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
ரூ.36,585 கோடி எங்கே, ரூ.2044 கோடி எங்கே? மராட்டிய அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
32
288
716
16.7K
Mohan Samikkannu 리트윗함
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || மராட்டிய அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? - அன்புமணி #PMK | #Anbumani | #TVK | #Farmers | #PolimerNews
தமிழ்
8
229
603
9.4K
Mohan Samikkannu
Mohan Samikkannu@MohanSamikkannu·
ரூ.36,585 கோடி எங்கே, ரூ.2044 கோடி எங்கே? மராட்டிய அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? ----- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை #FarmersLoanWaiver #PMK #AnbumaniRamadoss #tnfarmers
Mohan Samikkannu tweet media
தமிழ்
0
7
19
128
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
பென்னாகரம் தொகுதியில் மனமகிழ் மன்றம் திறப்பு: மக்களின் எதிர்ப்பையும் மீறி மது வணிகம் செய்ய ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினரே துணை போவதா? தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி நல்லாம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளையும் மீறி மது வணிகம் செய்வதற்கான மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சிகளை பாமக முறியடித்து வந்த நிலையில் அங்கு மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டிருப்பதும், அதற்கு ஆளும்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் துணை போயிருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. நல்லாம்பட்டி கிராமத்தில் நீண்ட காலமாகவே டாஸ்மாக் மதுக்கடைகள் இல்லாத நிலையில், அங்கு புதிய மதுக்கடையை திறக்க கடந்த ஐந்தாண்டுகளாக பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சியின் தீவிர எதிர்ப்புகளாலும், போராட்டங்களாலும் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இத்தகைய சூழலில் தான் நரியை பரியாக்குவதைப் போல நேரடியாக மதுக்கடையை திறப்பதற்கு பதிலாக மனமகிழ் மன்றம் அமைத்து அதன் மூலம் மது வணிகம் செய்யலாம் என்று திட்டமிட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், முந்தைய ஆட்சியாளர்களின் உதவியுடன் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி உரிமம் பெற்றார். ஆனாலும் பாமக மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் மனமகிழ் மன்றத்தையும் திறக்க முடியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு த.வெ.க. ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த மே 28-ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் யூனியன் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அங்கு மதுக்கடை திறக்கப்பட்டு மதுவணிகம் செய்யப்பட்டு வருகிறது. மனமகிழ் மன்றம் திறக்கப்பட்டதைக் கண்டித்து கடந்த 30-ஆம் தேதி ஊர்மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், மக்களின் உணர்வுகளை மதித்து மனமகிழ்மன்றத்தை மூட வேண்டிய அதிகாரிகள், மனமகிழ் மன்றத்தை நடத்துவோருக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி, விவேகானந்தர் இளைஞர் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் 6 பேர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். நல்லாம்பட்டி கிராமத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாத நிலையில், யூனியன் மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வாங்கியும் கடந்த 3 மாதங்களாக திறக்கப்படாத நிலையில், இப்போது அது திறக்கப்பட்டதன் பின்னணியில் பென்னாகரம் தொகுதி ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரின் மறைமுக ஆதரவு இருப்பதாகவும், அவர் தான் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து மனமகிழ் மன்றத்தைத் திறக்கச் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மனமகிழ் மன்றத்திற்கான உரிமத்தைப் பெற்றுள்ள பிரகாஷ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் சந்துக்கடைகள் மூலமாக சட்டவிரோதமாக மதுவணிகம் செய்து வந்தவர் என்றும், நல்லாம்பட்டி பகுதியில் மதுக்கடைத் திறக்க பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மனமகிழ் மன்றம் அமைப்பதற்கான உரிமத்தை வாங்கினால், அதைக் கொண்டு நேரடியாக மது வணிகம் செய்யலாம் என்று டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் யோசனைத் தெரிவித்த நிலையில், அவர்களையும், தமது சகோதரர் முருகவேலையும் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டு இந்த மனமகிழ் மன்றத்தை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்டத்தை மீற டாஸ்மாக் ஊழியர்களே துணை போயிருப்பதை அனுமதிக்க முடியாது. முதலமைச்சராக இருக்கும் விஜய் அவர்கள் தமிழ்நாட்டில் மதுப்புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக ஆட்சிக்கு வந்த இரு நாள்களில் 717 மதுக்கடைகளை மூட ஆணையிட்டார். ஆனால், அவரது கொள்கையை பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஆளும்கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மது வணிகத்திற்கு துணை போயிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மனமகிழ்மன்றங்கள் என்ற பெயரில் மது வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது தான் தமிழத்தில் இன்று நிலவும் குழப்பங்களுக்கு காரணமாகும். ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாகக் கூறிக் கொண்டு இன்னொருபுறம் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது. இது அரசின் இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒரே ஒரு மதுக்கடை கூட திறக்கப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்கு எதிரான வகையில் நல்லாம்பட்டியில் திறக்கப்பட்டுள்ள மனமகிழ்மன்றத்தை உடனடியாக மூட அரசு ஆணையிட வேண்டும்; மனமகிழ் மன்றத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால், பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.! @CMOTamilnadu
தமிழ்
15
178
417
23.6K
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
மேகதாது இல்லை, பாசனத் திட்டம் இல்லை, கொள்முதல் விலை இல்லை: முதலமைச்சர் விஜயின் திருச்சி பேச்சு ஏமாற்றமளிக்கிறது! @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
12
124
287
4K
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும்: நூறாண்டுகள் வாழ வேண்டும்! எங்களின் இசை மருத்துவரும், உலகின் தலைசிறந்த இசையமைப்பாளருமான இசைஞானி இளையராஜா அவர்கள் 84-ஆம் பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைஞானியின் தனிச்சிறப்பு என்னவென்றால், தாய், தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரையும் விட, இசையாய் மிக அதிக நேரம் ஒவ்வொருவருடனும் இணைந்திருப்பது தான். இளையராஜா படைப்புகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன சஞ்சலங்கள், மன அழுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து சிக்கல்களுக்கும் இலவச மருத்துவமாக அமைவது அவரது இசை தான். இசைஞானியின் இசைத் தொண்டு காலங்களைக் கடந்து தொடர வேண்டும். இசைஞானி நூறாண்டுகளைக் கடந்து வாழ்ந்து இசையால் இனிவரும் தலைமுறைகளையும் மகிழ்விக்க வேண்டும். @ilaiyaraaja
தமிழ்
4
101
392
6.1K
Mohan Samikkannu 리트윗함
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
சென்னை - வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மஹாலில் நடைபெற்ற, திருவள்ளூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் M.K.சந்திரமூர்த்தி நாயக்கர் - மாலதி தம்பதியரின் மகன் C.பிரவீன் குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மதுரவாயல் வடக்கு பகுதி தலைவர் S.குமார் நாயக்கர் - சகிலா தம்பதியரின் மகள் K.தீபிகா இணையரின் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று வாழ்த்திய போது.!
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
1
37
214
17K
Mohan Samikkannu 리트윗함
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``தடுக்க தவறிய அரசு’’ ``தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சமூகப் பதற்றம் நிறைந்த தென் மாவட்டங்களில் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அரசு தவறியது கண்டிக்கத்தக்கது. ’’ - பாமக தலைவர் அன்புமணி #tvk #cmvijay #anbumani #thanthitv
Thanthi TV tweet media
தமிழ்
6
96
257
3.5K
Mohan Samikkannu
Mohan Samikkannu@MohanSamikkannu·
பரந்தூர் விமான நிலையம் நிறுத்தம் என்றால், கையகப்படுத்திய நிலங்களை விவசயிகளிடம் தமிழக அரசு திரும்ப ஒப்படைக்க வேண்டும்... #பரந்தூர் #tnfarmers #Airport
Mohan Samikkannu tweet media
தமிழ்
1
0
4
61
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்! @CMOTamilnadu
Dr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet mediaDr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
6
100
240
4K
Mohan Samikkannu 리트윗함
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களின் 136-ஆம் பிறந்தநாளில் வீரவணக்கம் செலுத்தி வணங்குகிறேன்.!
தமிழ்
1
36
106
1.1K
Mohan Samikkannu 리트윗함
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் கிராமத்தைச் சார்ந்த, பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாநில துணைச் செயலாளர் கே.தியாகராஜன் - இராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு மகள் தி.பூர்ணிகா மஞ்சள் நீராட்டு விழா சமீபத்தில் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு சென்று வாழ்த்திய போது.!
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
0
20
116
1.4K
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
1800 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை; 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்கள் காலி - பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலை மாற்றப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது. திமுக ஆட்சி செய்த கடந்த ஐந்தாண்டுகளில் அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களை நியமித்து, அவற்றின் கட்டமைப்பையும், மனிதவளத்தையும் மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தலைமை ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டும். கல்வியாண்டு முடிவுக்கு வந்த மே 31-ஆம் நாளான நேற்று மட்டும் 30 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை உயர்நிலைப்பள்ளிகளில் 700 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலைப் பள்ளிகளில் 300 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்த்து 800 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதை மன்னிக்கவே முடியாது. மாணவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலம் இந்தப் பள்ளிகளில் தான் தீர்மானிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவது இந்தப் பள்ளிகள் தான். இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் அவற்றின் கல்வித்தரம் வீழ்ச்சியடைவதையும், மாணவர்களின் எதிர்காலம் சீரழிவதையும் தடுக்க முடியாது. அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நேற்றோ, இன்றோ உருவானவை அல்ல. பல பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. தமிழக அரசு நினைத்தால் ஒற்றை அரசாணை மூலம் இந்த பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப முடியும் ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் காலியாக இருப்பதைக் காரணம் காட்டியே தலைமை ஆசிரியர்களை நியமிப்பதை அரசு தவிர்த்து வந்திருக்கிறது. இதில் வேதனையான உண்மை என்னவென்றால், தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தொடர்பான வழக்குகளில் பெரும்பாலானவை அரசாலோ அல்லது அரசின் தூண்டுதலால் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்களாலோ கடந்த காலங்களில் தொடரப்பட்டவை தான். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு செய்யப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி உள்ளிட்ட ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்த அவலத்தை பாட்டாளி மக்கள் கட்சி பல முறை சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனாலும் முந்தைய திமுக ஆட்சியில் இந்தக் குறையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது என்பதை சொல்லித் தர வேண்டிய பள்ளிகளில், சுவர்களுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட தலைமை ஆசிரியர்கள் இல்லாதது எவ்வளவு கொடுமையான முரண்பாடு? அந்த சுவர்கள் இல்லாமல் கல்வி எனும் சித்திரத்தை எவ்வாறு வரையமுடியும் என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்தும் பள்ளிக்கல்வித்துறையின் அவலத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களை நியமிக்கவும், அனைத்துக் கல்வி மாவட்டங்களுக்கும் மாவட்டக் கல்வி அதிகாரிகள், அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu
தமிழ்
4
118
277
8.2K
Mohan Samikkannu 리트윗함
Dr ANBUMANI RAMADOSS
Dr ANBUMANI RAMADOSS@draramadoss·
கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள்: வீர வரலாற்றை பாடமாக கற்பிக்க வேண்டும்! தென்னாட்டு ஜான்சிராணி மகாத்மா காந்தியடிகளால் போற்றப்பட்ட கடலூர் அஞ்சலையம்மாளின் 136-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரை போற்றி வணங்குகிறேன். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை அஞ்சலை அம்மாள் அவர்களை புறக்கணித்து விட்டு எழுத முடியாது. அவரது போராட்டங்களைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவர் ஒரு போதும் ஆங்கிலேயர்களைக் கண்டு அஞ்சவில்லை. கொடுங்கோலன் நீலன் சிலையை அகற்றக்கோரி அவர் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. வயிற்றில் மகவைச் சுமந்த நிலையில் போராடி சிறை சென்ற அஞ்சலையம்மாள், விடுப்பில் வெளிவந்து மகப்பேற்றை முடித்துக் கொண்டு மீண்டும் போராட்டம் நடத்தி கைக்குழந்தையுடன் சிறைக்கு சென்றவர். அவரது துணிச்சலைக் கண்டு காந்தியடிகளே வியந்தார். அவருக்கு தென்னாட்டு ஜான்சி ராணி என்று பட்டம் வழங்கினார். அவருடைய வீரமும், தியாகமும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். எனவே, தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தின் வரலாற்று பாடநூலில் கடலூர் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக சேர்க்க வேண்டும்.
Dr ANBUMANI RAMADOSS tweet media
தமிழ்
4
170
505
6.7K
Mohan Samikkannu 리트윗함
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசியதன் விளைவாக, தருமபுரி நகரத்தில் மூன்று அரசு மதுபான கடைகள் மூடப்பட்டன. அதனையொட்டி அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அப்பகுதி வாழ் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.! #dharmapuri #PMK
தமிழ்
1
48
133
1.3K
Mohan Samikkannu 리트윗함
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசியதன் விளைவாக, தருமபுரி நகரத்தில் மூன்று அரசு மதுபான கடைகள் மூடப்பட்டன. அதனையொட்டி இன்று மாலை அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அப்பகுதி வாழ் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.! #dharmapuri #PMK
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
0
22
64
627
Mohan Samikkannu 리트윗함
Sowmiya Anbumani
Sowmiya Anbumani@Sowmiyanbumani·
பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசியதன் விளைவாக, தருமபுரி நகரத்தில் மூன்று அரசு மதுபான கடைகள் மூடப்பட்டன. அதனையொட்டி இன்று மாலை அப்பகுதியில் ஆய்வு செய்தபோது, அப்பகுதி வாழ் பொதுமக்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.! #dharmapuri #PMK
Sowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet mediaSowmiya Anbumani tweet media
தமிழ்
1
32
108
974