Mahi

42.6K posts

Mahi banner
Mahi

Mahi

@daarkhand

கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !

Coimbatore 가입일 Temmuz 2011
821 팔로잉1.1K 팔로워
Mahi 리트윗함
Maria Jennifer NTK
Maria Jennifer NTK@jennifer_ntk·
மக்களைத் தேடி  பரப்புரை பயணத்தில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி,  மணக்குடி பகுதியில் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கியதோடு திண்ணை பரப்புரைகளையும் மேற்கொண்டோம். அப்பகுதி மக்களின் குறைகள் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.  கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கான நமது திட்டங்களையும், கனவு கன்னியாகுமரி செயல்திட்ட வரைவையும், நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவையும் மக்களுக்கு விளக்கி கூறினோம். நிகழ்வை ஒருங்கிணைத்த பொறுப்பாளர்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் மணக்குடி பகுதி பொதுமக்களுக்கும் நன்றிகள்  @NaamTamilarOrg #கனவு_கன்னியாகுமரி #மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer#Manidhi  #NaamTamilar
Maria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet mediaMaria Jennifer NTK tweet media
தமிழ்
0
59
130
552
Mahi 리트윗함
பிரவீன் அபிஜித்
வேடசந்தூர் தொகுதி, குஜிலியம்பாறை பகுதியில் 2031 தேர்தலில் ஓட்டுக்கேட்டு வரவேண்டிய அவசியமே இருக்காது.. ஏன் என்றால் இங்கு யாரும் இருக்கமாட்டார்கள்.. உயிர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக குஜிலியம்பாறை பகுதி மாறிவருகிறது.. இப்போதே பல கிராமங்களில் உள்ள இளைஞர்கள் வாழ்வாதாரம் தேடி திருச்சி, கரூர், பகுதிகளிக்கு சென்று விட்டனர்.. வயதானவர்கள் மட்டுமே கிராமங்களில் வசிக்கிறார்கள்.. இன்னும் சில ஆண்டுகளில் இவர்களுக்கு வேறு பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள்.. இந்த புகைப்படத்தில் இருப்பது பாலைவனம் இல்லை.. இது ஒரு குளம் .. இங்கு இதுபோல் பல குளங்கள் உள்ளதாம்.. 40 ஆண்டுகளுக்கு முன்பு கோடை காலத்திலும் இந்த குளத்தில் நீர் வற்றாதாம்.. இதில் மீன் பிடிப்பார்களாம்.. இங்கு இருந்த ஒரு பெரியவர் சொன்னார்.. இந்த வற்றாத குளம் பாலைவனம் மாற காரணம் இங்குள்ள அந்த சிமெண்ட் தொழிற்சாலை தான்.. இது இங்குள்ள திமுக, அதிமுக அரசியல்வாதிகளுக்கும் தெரியும்.. ஆனால் அதுகுறித்து பேசமாட்டார்கள்.. (நாம் தமிழர் பிள்ளைகள் மட்டுமே தெரு தெருவாக கத்துக் கொண்டிருக்கிறோம்) நாம் வாழும் நிலம்.. நம் கண்முன்னே நாசமாய் போவதை கண்டும் காணாமல் உள்ளது.. இந்த தமிழ்ச் சமூகம்.. ( நான் எப்போதும் வெயிலில் சுற்றித்திரிபவன்தான் ஆனால் என்னலையே இந்த பகுதியின் வெயிலை தாங்கமுடியவில்லை)
பிரவீன் அபிஜித் tweet media
தமிழ்
1
33
54
631
Mahi 리트윗함
பிரவீன் அபிஜித்
மக்களே எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. #நாம்தமிழர்
தமிழ்
0
41
96
496
Mahi 리트윗함
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா
GenZ இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற நாம் தமிழர் கட்சி.! நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிற தீவிர பரப்புரையின் காரணமாகவும், தாய்மாமன் சீமான் அவர்களின் மீது கொண்ட பெரும் நம்பிக்கையின் அடையாளமாகவும், நாம் தமிழர் கட்சியில் புதிதாக தங்களை இணைத்துக்கொண்ட இளைஞர் படை.!! #FathimaFarhana #FathimaFarhanaForNagapattinam #NTKRevolution #NTKForTamilNadu || #NTKWave #NTKWins2026 #வெல்லப்போறான்_விவசாயி #வெல்வான்_விவசாயி
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா tweet media
தமிழ்
2
128
332
1.8K
Mahi 리트윗함
R.Jayalakshmi
R.Jayalakshmi@jayalakshmi2026·
அடிப்படையான குடிநீர் வசதி கூட இல்லாமல் தவிக்கும் கண்ணகி நகர் மக்கள்!
தமிழ்
0
52
95
391
Mahi 리트윗함
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
"யார் சொன்னது சின்னம் தெரியாது என்று? ஊர் அறிந்தது... உலகம் அறிந்தது... சீமான் சின்னம் 'ஏர்க்கலப்பை விவசாயி' என்பது எமது பாமர மக்களுக்கும் புரிந்தது! செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
0
166
429
3.1K
Mahi 리트윗함
பிரபாகரன் !
எங்கெல்லாம் நாம்தமிழர் வீரியமாக வாக்கு பெரும் என்பதை விஜய்க்கு கிடைக்கும் அனுமதியை வைத்து புரிந்துகொள்ளலாம் ! திருநெல்வேலி தூத்துக்குடி கடலூர் கன்னியாகுமரி காரைக்குடி இதுவரை விஜய் தரப்பில் கேட்க்கப்பட்டு அனுமதி கிடைத்திருக்கும் இடங்கள் சரியாண சல்லிபயடா நீ @TVKVijayHQ
News18 Tamil Nadu@News18TamilNadu

Election Breaking News | கன்னியாகுமரியில் 12ம் தேதி விஜய் பரப்புரைக்கு அனுமதி 👉For More Updates WATCH LIVE - youtube.com/live/E4ndYFfdl… #Election2026 #ElectionsWithNews18 #TNElection2026 #TamilNaduElection2026 #News18TamilNadu

தமிழ்
0
9
26
271
Mahi 리트윗함
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
தேர்தல் நேரத்திலும் போரட்ட களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி 💥
தமிழ்
0
26
71
485
Mahi 리트윗함
Riparian
Riparian@Riparian_1·
கடந்த தேர்தல்களில், நமது சின்னம் பெரும்பாலும் 5th to 9th இடங்களை பெற்று வந்தது. ஆனால், இம்முறை, 234 தொகுதியிலும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களின் பெயருடன் கூடிய விவசாயி சின்னம் முதல் நான்கு இடங்களுக்குள் Position ஆவது Voting Process ல எப்படியான தாக்கத்தை அளிக்கும் என்பதற்கான விளக்கப் படம். 👇🏻
Riparian tweet media
தமிழ்
1
34
75
1.1K
Mahi 리트윗함
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
"வாக்களித்தவன் எஜமான், வாக்கைப் பெறுபவன் சேவகன் என்ற அறம் செத்துவிட்டது. 'பெட்ரோல் வேண்டுமானால் பாஜக-விற்கு வாக்களி' என்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிரட்டல். அருவருப்பான இந்த அரசியலை அறுத்தெறிவோம்!" செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
0
95
160
1.2K
Mahi 리트윗함
GK ツ
GK ツ@GK_official2·
விஜய் வருகையால் @Seeman4TN அவர்களின் வாக்கு குறையும் என நினைப்பவர்களுக்காக இந்த பதிவு அண்ணனுக்கு வாக்குச் செலுத்தியவர்கள் கொள்கை, கோட்பாடு, அடுத்த தலைமுறை என அரசியலைப் பார்ப்பவர்கள் திரைக் கவர்ச்சியும், Troll களும், மீம்ஸ் களும் அவர்களிடம் எடுபடாது #நாம்தமிழர்
தமிழ்
0
34
109
628
Mahi 리트윗함
Dr. தீபக்
Dr. தீபக்@nikaran_tn·
அன்று ~ சிறுபான்மையினர் என்று ஒருபோதும் பேசமாட்டோம் இன்று ~ ஜோசப் விஜய் ஒரு சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவர் இப்படிக்கு லாட்டரி திருடன் என்று அழைக்கப்படும் சிறுபான்மை ஆதவ் ரெட்டி
தமிழ்
1
6
16
222
Mahi 리트윗함
GenZ_Thamizhan
GenZ_Thamizhan@GenZ_Thamizhan·
விருந்தோம்பல் னு பேசிக்கிட்டு,‌‌ முதல்ல அந்த நிருபர் அக்காவுக்கு குடை கொடுத்தானா இந்த பன்னையார், இவனுக்கெல்லாம் சீமான் அண்ணனை பத்தி பேச தகுதி இருக்கா முதல்ல..💦
தமிழ்
4
172
423
7.3K
Mahi 리트윗함
TNMedia 24x7 Tamil
TNMedia 24x7 Tamil@tnmediatamil·
திட்டமிட்டு செய்த SI இசக்கி! சாதியைப் பற்றி இழிவாக பேசி தாக்குதல்! தானாக விழுந்து நாடகம்! பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி #Panaiyeri #aalankulam #Manikandan #MuthuRameshNadar #ntk #naamtamilarkatchi #seeman #PalmToddy #tnelections2026 #DMK #MKStalin #கள் #பனை #KuyililNachiyar
தமிழ்
8
278
510
9.7K
Mahi 리트윗함
இடும்பாவனம் கார்த்திக்
மரக்காணம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி என திமுகவின் ஐந்தாண்டு ஆட்சியில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 100 பேர். கள் இறக்கும் பனையேறிகள் மீது பாய்கிற கேடுகெட்ட திமுக அரசின் காவல்துறை, கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் மீது பாயுமா?
தமிழ்
16
256
536
5K
Mahi 리트윗함
செந்தமிழன் சீமான்
தென்காசியில் பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது சிறிதும் மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயல்! தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பனைத் தொழிலாளி தம்பி மணிகண்டன் மீது காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலை வழக்கின் தீர்ப்பை பார்த்த பிறகும் தமிழ்நாடு காவல்துறையினர் எந்த பாடமும் கற்றுக்கொள்ளாது, மனச்சான்று இன்றி அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது வெட்கக்கேடானது. கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையையும், அதன் காரணமாகத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைப் பிடிக்கவோ திறனற்ற காவல்துறை, கள் இறக்கும் எளிய மனிதர்களைக் கொடிய குற்றம் புரிந்த பயங்கரவாதிகள்போல தேடித்தேடி வேட்டையாடுவது கொடுங்கோன்மையாகும். அப்பாவிகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்வதில் காட்டும் வேகத்தையும், ஆர்வத்தையும், குற்றங்களைத் தடுப்பதிலும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்துவதிலும் காட்டியிருந்தால், சட்டம் - ஒழுங்கு எப்போதோ சீரடைந்திருக்கும். உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத ‘கள்ளை’ போதைப்பொருள் என்று தடை செய்துள்ள தமிழ்நாடு அரசு, தன்னுடைய நேரடி நிர்வாகத்தில் டாஸ்மாக்கில் விற்பதற்குப் பெயர் என்ன? புனிதத் தீர்த்தமா? அரசு நடத்தும் மதுக்கடைகளில் மது அருந்துவோருக்குப் பாதுகாப்பாக காவலுக்கு நிற்கும் தமிழ்நாடு காவல்துறையினர், ‘கள்’ இறக்கும் எளிய தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைப்பதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். மருத்துவ குணமுடைய பொருட்களுக்கு தடை விதிக்கக்கூடாது என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படும் நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது அரசமைப்புக்கு எதிரானது. ‘தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி நிறுவனம் பனங்கள்ளை உணவாக வகைப்படுத்தி, உணவுக் குறியீடு "ரி001" வழங்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கள்ளை தங்களின் சிறப்பு உணவுப் பட்டியலில் வகைப்படுத்தியுள்ளன. உலகின் பல நாடுகளும் தங்களின் பாரம்பரிய உணவாக கள்ளை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் பல மாநிலங்களில் கள் இறக்கத் தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை எதற்கு? கள்ளின் மீதான தடையை நீக்க நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், காவல்துறையின் அதிகார அத்துமீறல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 23.01.26 அன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் பனைத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, தகாத வார்த்தைகளால் திட்டி, பொய் வழக்கு புனைந்து கைது செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 20ஆம் நாள் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட இலால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கள்’ இறக்கும் பணியில் ஈடுபட்ட பனைத் தொழிலாளர்களான அன்புச்சகோதரர்கள் சின்னையன், துரைசாமி, கணேசன் ஆகியோரை, திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான காவல்துறையினர் மிரட்டி, கடுமையாகத் தாக்கி கைது செய்ததோடு ‘ஆடைகளைக் களைந்து, அவமதித்து, உள்ளாடைகளுடன் காவல் நிலையத்தில் அமரவைத்ததோடு, பனைத் தொழிலாளர்கள் எளிதில் பிணையில் விடுதலை ஆகிவிடக்கூடாது என்பதற்காக, கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமலே உள்நோக்கத்துடன் ‘நச்சு கலந்த கள்ளை விற்பனை செய்ததாக’ பொய் வழக்கு புனைந்தனர். அதிகார மமதையோடு காவல்துறை நிகழ்த்திய அக்கொடுமைகளை அப்போதே நான் கடுமையாக கண்டித்ததோடு, திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகளும் பனைத் தொழிலாளர்களை விடுவிக்க போராட்டத்திலும் ஈடுபட்டனர். தமிழ்நாடு காவல்துறை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் பனைத் தொழிலாளர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் அதிகாரத்தை காவல்துறைக்கு கொடுத்தது யார்? யாருடைய உத்தரவின் பேரில் தமிழ்நாடு காவல்துறை பனைத் தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது? சாராய முதலாளிகளின் தூண்டுதலாலேயே பனைத் தொழிலாளிகள் மீது துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட கொடுமைகள் நாளும் அரங்கேறுகின்றன. இக்கொடுமைகளை எதிர்த்து, பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆண்ட, ஆளும், ஆளத்துடிக்கும் கட்சிகள் எதுவும் குரல் கொடுக்காதது ஏன்? ஏனெனில் சாராய ஆலைகளை நடத்துவதே திமுக, அதிமுக கட்சியினர்தானே? பனைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக போராடி, அவர்களின் நியாயமான உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒற்றைப் பெரும் அரசியல் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி மட்டுமே உள்ளது. (1/2)
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
8
394
686
7K
Mahi 리트윗함
செந்தமிழன் சீமான்
கள் இறக்குவதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மட்டுமே தொடர்ச்சியாக போராடியும் வருகிறது. சங்க காலம் தொட்டுத் தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள ‘கள்’, எங்களின் பாரம்பரிய உணவு மட்டுமல்ல, அது எங்களின் உரிமையுமாகும். பனைத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், காவல்துறையும் புரிகின்ற இக்கொடுமைகள் எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள். வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். தம்பி மணிகண்டன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா மீது, கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்வதோடு, வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி (2/2)
தமிழ்
5
217
441
3.2K
Mahi 리트윗함
Malaimurasu TV
Malaimurasu TV@MalaimurasuTv·
போலீஸார் இந்த வேகத்தை கஞ்சா விற்பனையை தடுப்பதில் காட்டியிருந்தால் சட்டம் ஒழுங்கு சீரடைந்திருக்கும் - சீமான் #Malaimurasu #Newsupdate #Nellai #seeman
Malaimurasu TV tweet media
தமிழ்
1
377
930
5.5K
Mahi 리트윗함
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
"உண்மையான சாப்ளினுக்கு மூன்றாம் பரிசு... அவரைப் போல வேடமிட்ட போலிக்கு முதல் பரிசு! இன்று சமூகமும் இப்படித்தான்—உண்மையின் முகம் கசக்கிறது, அலங்கரிக்கப்பட்ட போலிகளின் வேடம் கவர்ச்சியாகத் தெரிகிறது. மக்கள் உண்மையை விட, போலிகளால் காட்டப்படும் மாயையையே அதிகம் நம்புகிறார்கள் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் கொடையளிக்க👇 donate.naamtamilar.org/election_campa… #சீமானின்_காரைக்குடி #Seeman_In_Karaikudi #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #சீமான் #ntk #ntkitwing #seeman #tamilnationalism
தமிழ்
1
30
46
266
Mahi 리트윗함
மோகன் சி | Mohan Chinnasamy
வாக்குப் பெட்டியில் வரிசை முறை👇 முதல் வகை: அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள் (BJP, INC போன்றவை). • இரண்டாம் வகை: அந்தந்த மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் (DMK, AIADMK, NTK போன்றவை). • மூன்றாம் வகை: பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள். • நான்காம் வகை: சுயேச்சை வேட்பாளர்கள். நாம் தமிழர் கட்சி இப்போது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்பதால், அது இரண்டாம் வகைக்கு முன்னேறியுள்ளது. இதனால் சுயேச்சைகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு முன்பாகவே, அதாவது வாக்குப்பெட்டியின் தொடக்கத்திலேயே முதல் மூன்று இடத்தில் இருக்கும். ஒவ்வொரு நாம் தமிழர் உறவின் உழைப்பிற்கும், உன்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த வெற்றி 🔥🔥🔥 எதிர்வரும் 2026 தேர்தல் நாம் தமிழருக்கு இன்னும் பல வெற்றிகளை பரிசளிக்க காத்திருக்கிறது ❤️🙏 #வெல்லும்_விவசாயி
மோகன் சி | Mohan Chinnasamy tweet media
தமிழ்
1
45
134
2.4K