செந்தமிழன் சீமான்

3.7K posts

செந்தமிழன் சீமான் banner
செந்தமிழன் சீமான்

செந்தமிழன் சீமான்

@Seeman4TN

செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg

தமிழ்நாடு Katılım Haziran 2023
8 Takip Edilen103.7K Takipçiler
செந்தமிழன் சீமான்
விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்தே கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் எனும் மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே மரணித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கைதுசெய்யப்பட்டபோது எவ்வித உடல்நலக்குறைபாடுமில்லாது, முழு நலத்தோடு இருந்த சபரிவர்மன் விசாரணைக்குப் பிறகு, இறந்துபோகிறாரென்றால், இது காவல்துறை செய்திருக்கும் பச்சைப்படுகொலையாகும். எந்தக் குற்றமிழைத்தவராக இருந்தாலும், அவரைச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்வது என்பதை எதன்பொருட்டும் ஏற்க முடியாது. முந்தைய திமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய் அவர்கள், தற்போதைய தவெகவின் ஆட்சியில் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார்? தார்மீகப் பொறுப்பேற்று, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து, சிறைப்படுத்தப் போகிறாரா? இல்லை! முந்தைய திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலங்களைப் போலவே, சிறைவாசிக் உடல்நலக் குறைபாட்டால் இறந்ததாகக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு காவல்துறையினரைக் காப்பாற்றிச் சிக்கலைக் கடத்திவிடப் போகிறாரா? திமுக, அதிமுக செய்த நிர்வாக அணுகுமுறைகளைத்தான் முதல்வர் விஜய்யும் கடைப்பிடிப்பாரென்றால் இதிலென்ன மாற்று இருக்கிறது? இதிலென்ன எளிய மக்களுக்கான அரசியல் இருக்கிறது? சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்களைப் பாதுகாத்து, முதல்வர் விஜய் இதுவரை வாய்திறக்க மறுத்து வருவது அதிகாரத்திமிர் இல்லையா? திமுகவின் ஆட்சியில் நடந்த காவல் மரணங்களுக்கும் நீதியைப் பெற்றுத் தருவோம் எனத் தேர்தல் களத்தில் வாக்குறுதி அளித்துவிட்டு, தம்பி ஆகாஷ் டெலிசன் மரணத்துக்கான நீதியைப் பெற்றுத் தராது தவெக அரசு வஞ்சித்த நிலையில், தற்போதைய சபரிவர்மன் மரணத்துக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, விசாரணை சிறைவாசி சபரிவர்மனை அடித்துக் கொன்ற காவலர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்து, சிறைப்படுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
தமிழ்
33
531
1.1K
35.7K
செந்தமிழன் சீமான்
மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை! @CMOTamilnadu @TVKVijayHQ அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின் கையைக் கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனிதப் பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா? பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது? தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக்கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது. போதைப்பொருள் ஒழிப்பு நாளில் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே ஒழிந்துவிடாது முதல்வர் அவர்களே! டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்? சட்டம் ஒழுங்கை சீரழித்து, சமூகத்தின் அனைத்து குற்றச்செயலுக்கும் காரணமான மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும். ஆகவே, அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். தவெக அரசின் காவல்துறை தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்பு பிள்ளைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன். கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராகச் சிறிய வயதிலும் சமூகப் பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
46
492
947
23.6K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்றத் தொகுதி, அரிமளம் நடுவண் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி வெ.முருகேசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா கரு.வெள்ளைச்சாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
3
30
110
6.4K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி – திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி, பாலூர் கிராமத்தைச் சார்ந்த, செந்தமிழர் பாசறை வளைகுடாவின், வணிகர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தம்பி சுல்தான் அவர்களின் தாயாரும், செந்தமிழர் பாசறை வளைகுடா துணைத் தலைவர் தங்கை ஆயிஷா சுல்தான் அவர்களின் மாமியாருமான அம்மா ஜம்ரூத் பீவி அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பேரன்புகொண்டு நேசித்த அம்மாவை இழந்து வாடும் தம்பி சுல்தான் மற்றும் சகோதரி ஆயிசா சுல்தான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா ஜம்ரூத் பீவி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
4
54
166
12.7K
செந்தமிழன் சீமான்
இயற்றமிழ் மூலம் இசைத் தமிழ் தந்த தமிழ்ப் பெருங்கவி! சங்கத்தமிழ் சாறெடுத்து தங்கத்திரை தட்டில் வைத்து கவித்தமிழ் அமுதூட்டிய ஆண் அன்னை! செந்தமிழ் சொல்லெடுத்து தேன்மொழி வார்த்த தென்மொழிப் பாவலன்! காலம் கடந்து தழைக்கும் தன் தமிழால், ஞாலம் உள்ள வரை நிலைக்கும் தன் மொழியால், இறவா இலக்கியம் படைத்து சிகரங்களைத் தொட்டு கள்ளிக்காட்டு இதிகாசம் கண்டு, கருவாச்சி காவியம் வடித்து, மூன்றாம் உலகப்போர் தொடுத்து, தண்ணீர் தேசம் நிறைத்து, தமிழாற்றுப்படை கண்ட எங்கள் கவியாற்றுப்படை! கவி உலகின் தமிழ் அடையாளம்! மகாகவிதையாய் வீசி மனங்களை வருடிய வடுகப்பட்டியின் தமிழ்த் தென்றல்! வையம் உள்ளவரை ஐயா வைரமுத்துவின் வைரத் தமிழ் உலகில் உலவும்! ஞாலத்து விருதுகளையெல்லாம் தம் ஞானத்துச் செறிவால் தமிழ் அன்னையின் காலடியில் சேர்ப்பித்த ஈடு இணையற்ற என் மண்ணின் கவிஞன்! முத்தமிழ்ப்பேரறிஞர் கவிப்பேரரசு ஐயா வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! @Vairamuthu
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
5
113
483
10.2K
செந்தமிழன் சீமான்
சாகித்திய அகாடமி விருது பெற்ற தமிழ் இலக்கியத்தின் முதுபெரும் எழுத்தாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பூமணி (எ) பூ.மாணிக்கவாசகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். வெக்கை, அஞ்ஞாடி வரப்புகள், வாய்க்கால், நூறென் உள்ளிட்ட நாவல்களையும், வயிறுகள், ரீதி, நொறுங்கல் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் படைத்தளித்து ஈரம் உறைந்த கரிசல் மண்ணின் வீரம் நிறைந்த மனிதர்களின் மகத்தான வாழ்வியலை தரிசிக்கத் தந்த ஆகச்சிறந்த தமிழ் இலக்கிய முன்னோடி ஐயா பூமணி அவர்களின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். ஐயா பூமணி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இலக்கிய நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன். தம் எழுத்தின் வல்லமையால் மனித மனங்களை உழுது மகத்தான சமூக மாற்றத்தை மண்ணில் விதைத்த போற்றுதற்குரிய முதுபெரும் தமிழ் எழுத்தாளர் ஐயா பூமணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
4
120
300
12.1K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி ஜென்கின்ஸ் அவர்களின் தாயார் அம்மா லீலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அன்னையை இழந்து வாடும் தம்பி ஜென்கின்ஸ் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா லீலா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
2
54
170
22.7K
செந்தமிழன் சீமான்
வியட்நாம் நாட்டின் ஃபூ குவோக் தீவு அருகே சுற்றுலா பயணிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உட்பட மொத்தம் 36 பேர் உயிரிழந்த பெருந்துயரச் செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு விரைந்து அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறேன்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
7
166
327
15.9K
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலவாசல் பகுதியைச் சேர்ந்த அன்புத்தம்பி அரிகிருஷ்ணன் (எ) குவிரன் அவர்களின் தந்தை ஐயா நாடிமுத்து சுப்ரமணியம் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பி குவிரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா நாடிமுத்து சுப்ரமணியம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
6
54
166
10.5K
செந்தமிழன் சீமான்
தம் இனிய குரலால் பல்லாயிரம் பாடல்கள் பாடி கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்ட பின்னணி பாடகி, இசையரசி அம்மா ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். இசையமைக்கும் வல்லமையும் பெற்ற அம்மா ஜானகி அவர்கள், ஏறத்தாழ 17 மொழிகளில் பல்லாயிரம் பாடல்கள் பாடி, சிறந்த பாடகிக்கான இந்திய அரசின் விருதை 4 முறையும், நந்தி விருதினை 10 முறையும், பல்வேறு மாநில அரசுகளின் விருதை 33 முறையும் பெற்ற பெருமைக்குரியவராவார். தாமதமாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணித்த அம்மா ஜானகி அவர்களின் போர்க்குணம் போற்றத்தக்கது. காற்றில் மிதந்து காதுகளில் நிறைந்து காலத்தை வென்ற இசையரசியின் மறைவு, ஈடு செய்யவியலாத பேரிழப்பாகும். அம்மா ஜானகி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அவருடைய இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன். இனிய குரலால் இதயங்களை வென்ற இசையரசி அம்மா ஜானகி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
9
264
811
13.6K
செந்தமிழன் சீமான்
அசல் மனிதர்களின் வாழ்வியலை திரைமொழியில் மிகையில்லாது காட்சிப்படுத்தி, உயிரோட்டமானப் பாத்திரங்களைப் படைத்து, மாந்த உணர்வுகளை வலிமையாகக் கடத்தி, காலங்கடந்து நிற்கும் மகத்தானப் படைப்புகளைத் தரும் மாபெரும் படைப்பாளி! அப்பா பாலுமகேந்திராவின் பட்டறையில் பயின்று, நடிப்பு, திரைமொழி எல்லாவற்றுக்குமானப் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்து, வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டும் தன்னிகரற்ற கலை ஆளுமை! தனது திரைப்படங்களின் மூலம் அளப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தலைசிறந்த படைப்புகளின் மூலம் தமிழ்த்திரையுலகைத் தலைநிமிரச் செய்யும் பெருமைக்குரிய திரைக்கலைஞர்! தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் பெருமித அடையாளங்களை ஏற்று, தாய் நிலத்தின் மீது பற்றோடும், தமிழ்த்தேசிய இன உணர்வோடும் திகழும் மண்ணின் மகன்! தமிழ்த்திரையுலகின் பெருமிதத்திற்குரிய கலை அடையாளங்களுள் ஒருவராகத் திகழும் எனது ஆருயிர் இளவல் பாலா அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
11
242
938
11.1K
செந்தமிழன் சீமான்
வீரம் விளைந்த கட்டாலங்குளம் மண்ணைக் கட்டி ஆண்ட மாமன்னர்..! ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மறப்போர் புரிந்த மாவீரன்..! வெள்ளையர் பீரங்கிகளுக்கு எதிர் நின்றபோதும் வெள்ளைக்கொடி ஏந்த மறுத்த மண்ணுரிமை போராளி..! அடிமை வாழ்விலும், உரிமைச்சாவு மேலானது என்ற உயரிய இலட்சிய உறுதியுடன் தாயகம் காக்க தன்னுடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களுடன் நடுக்காட்டூரில் இன்னுயிர் ஈந்து வீரகாவியமாய் ஆன வரலாற்று நாயகன்..! விடுதலைப்பேரொளி, வீரத்திருமகன், நம்முடைய பாட்டன் மாமன்னர் அழகுமுத்துகோன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
7
282
751
11.9K
செந்தமிழன் சீமான்
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் சூறையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அதனை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என்ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும். கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அடமானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும். ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
134
1K
1.8K
387K
செந்தமிழன் சீமான்
முன்னணி ஒளிப்பதிவாளரும், தேசிய விருதுபெற்ற இயக்குநருமான தம்பி இரா.செழியன் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் தனது கலைப்பணிகள் மூலமாக மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். தமிழ்த்திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரும், தலைசிறந்த இயக்குநருமான என் ஆருயிர் இளவல் இரா.செழியன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தம்பியை இழந்து வாடும் அவரது மனைவி பிரேமா, உடன்பிறந்த சகோதரர்களான தம்பிகள் இளங்கோ, சரவணன் ஆகியோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன். தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மதிப்பிற்குரிய ஐயா பி.சி.ஸ்ரீராம் அவர்களின் பட்டறையில் பயின்று, கல்லூரி, தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி உள்ளிட்டத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி, தனது தனித்திறன் ஆற்றலாலும், துறை சார்ந்த நிபுணத்துவத்தாலும் பெயர் பெற்ற தம்பி செழியன் அவர்கள், தம்பி பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்திற்காக இலண்டனில் நடைபெற்ற சர்வதேசத் திருவிழாவில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார். ‘டு லெட் (To Let)’ எனும் திரைப்படத்தை இயக்கி, தேசிய விருது பெற்றதன் மூலம் ஆகச்சிறந்த இயக்குநராகவும் மிளிர்ந்தார். தனது திரைப்படங்கள் குறித்தான அறிவைப் பகிரும்பொருட்டு, ‘உலக சினிமா’ எனும் பெயரில் நூலும் எழுதியவராவார். திரைத்துறை சார்ந்த ஆழமான அறிவையும், நுட்பமான கலைத்திறனையும் கொண்டிருந்த தம்பி செழியன் அவர்களின் இழப்பு தமிழ் கலையுலகுக்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும். தனிப்பட்ட முறையில் என் மீது பேரன்பு கொண்டிருந்தவர் தம்பி செழியன். என்னுடைய ‘தம்பி’ திரைப்படத்தின் ஆக்கத்துக்கும், வெற்றிக்கும் பெரும் உழைப்பைச் செலுத்தினார். தமிழ்த்தேசியம் குறித்தும், நாம் தமிழர் கட்சி குறித்தும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்த தம்பி செழியன், நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறைக்குப் பெரும் பங்காற்றியவராவார். எப்போதும் என்னோடு அன்பொழுகப் பழகும் என்னுடைய அன்புத்தம்பி செழியன் அவர்களை இனி எப்போதும் காணவே முடியாது என்பதை உள்ளம் ஏற்க மறுக்கிறது. அவரது மறைவுச்செய்தி என்னை முற்றாக நிலைகுலையச் செய்திருக்கிறது. எனது உடன்பிறந்தவனை இழந்துவிட்டு ஆற்ற முடியாத ரணத்தோடும், வலியோடும் தவிக்கிறேன். தம்பி செழியன் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் மூலமாகக் காலங்கடந்து மக்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டுதானிருப்பார். தமிழ்த்திரையுலகின் கலை ஆளுமை என்னுடைய தம்பி செழியன் அவர்களின் நல்லுடல் கலையுலகத்தினர் மற்றும் பொதுமக்கள் இறுதி வணக்கம் செலுத்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் வைக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த கலைஞனான தம்பிக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
14
308
756
27.7K
செந்தமிழன் சீமான்
மறைந்த ‘இயக்குநர் இமயம்’ அப்பா பாரதிராஜா அவர்களின் திருவுடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அப்பாவின் பண்ணை வீட்டில் இன்று 09-07-2026 நடைபெற்ற 30ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வில் குடும்பத்தினருடன் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தினேன்.
தமிழ்
18
354
1.9K
107.5K
செந்தமிழன் சீமான்
விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருகி நாசமாக விடுவதா? உணவுத் தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா? @CMOTamilnadu @TVKVijayHQ தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி அரசு நெல் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 27,000க்கும் அதிகமான நெல் மூட்டைகள் எரிந்து சேதமடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அல்லும் பகலும் அயராது உழைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, உடல்முழுவதும் உப்பு பூக்க, இரத்தத்தை வியர்வையாக்கி, விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்துக் கொண்டு வந்த நெல்மணிகளைக் கொள்முதல் செய்யாமல் மழையில் நனையச் செய்து வீணாக்கியப் பேரவலம் முந்தைய திமுக ஆட்சியில் நடந்தேறியது. ஒருவேளை, கொள்முதல் செய்யப்பட்டாலும் அதனை முறையாகப் பாதுகாத்து, நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி, தரமான அரிசியாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கியதில்லை. ஒரே வயலில் விளைந்த நெல்மணிகளில் தனியார் கடைகளுக்கு வரும் அரிசி தரமாகவும், அரசின் நியாய விலைக் கடைகளுக்கு வரும் அரிசி தரமற்றும் இருப்பதும் ஏன்? இடையில் என்ன நடக்கிறது? தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், நுகர்பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கிகளும் போதுமானக் கட்டிட வசதி இல்லாமல் திறந்தவெளியில் இயங்கி வருவதே அரிசி தரமற்றுப் போவதற்குரிய முதன்மைக்காரணமாகும். ஒரு தகரத்தாலான கூரைகளைக்கூட அரசால் ஏற்படுத்த முடியாதா? நெல் மூட்டைகளை வெட்டவெளியில் கிடத்துவதா? எனக் கேட்டு விவசாயிகள் போராடியும்கூட முந்தைய அரசுகள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்கு முன்புப் பாதுகாத்து வைக்க வேண்டிய தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு, போதுமான அளவு கட்டிடங்கள்கூட இல்லாமல் சுடுகாட்டில் நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தது எல்லாம் அரச நிர்வாகத்தின் மோசமான இழிநிலையாகும். முந்தைய ஆட்சிக்காலத்தைப் போலவே, தற்போதைய அரசும் அலட்சியத்தோடு செயல்படுவது பெரும் ஏமாற்றமளிக்கிறது. மழைக்காலங்களில் நெல் மூட்டைகள் நீரில் நனைந்து, முளைத்து வீணாகி வந்த நிலையில், கோடைக்காலத்தில் தீயில் எரிந்து சாம்பலாவதெல்லாம் அயராத உழைப்பைச் செலுத்தி, நெல்மணிகளை அறுவடை செய்த விவசாயிகளின் உழைப்பை மலினப்படுத்தும் கொடுஞ்செயலாகும். உணவுத்தானியங்களைக்கூட பாதுகாத்து ஒரு அரசால் தரமாக வழங்க முடியாதென்றால், அது அரசா? இல்லை! தரிசா? எனும் கேள்விதான் எழுகிறது. ஆகவே, விவசாயிகள் விளைவிக்கும் உணவுத்தானியங்களைப் பாதுகாத்து வைக்க, போதுமான அளவு நிரந்தரக் கட்டிடங்களை உருவாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரிசியை தரமாக நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
21
459
785
10.9K
செந்தமிழன் சீமான்
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், 50 நாட்கள்வரை கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்க எந்த முயற்சியும் எடுக்காத முதல்வர் விஜய் அவர்கள், அதிமுகவைச் சேர்ந்த சட்டமன் உறுப்பினர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததையடுத்து, உடனடியாக கரூருக்குச் செல்ல முற்படுவதும், மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கத் திட்டமிடுவதும் மலினமான வாக்கரசியலாகும். கரூரில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 35 இலட்சம்வரை துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது அரசு வேலை என அறிவிப்பது இடைத்தேர்தலுக்காகச் செய்யப்படும் அற்பத்தனமாகும். கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரைக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் மரணித்தது ஏற்கவே முடியாத பேரவலம். சமகாலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய துயரம். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி. அதில் உறவுகளை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டியது தார்மீகக் கடமை. அது முழுமையாக வழங்கப்பட்டுவிட்டப் பிறகு, கரூர் இடைத்தேர்தலுக்காக அரசு வேலை என அறிவிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும். அதனை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு, வேலைக்காக பல இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்குரிய வேலைவாய்ப்பினைத் தராது, இடைத்தேர்தல் அரசியல் இலாபத்துக்காக அரசு வேலையைத் தாரைவார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் நின்று உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கோ, சுகாதாரத்தைப் பேணிகாக்க தூய்மைப்பணியாளர்களாகப் பணிசெய்து, நச்சு வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று, சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ கிடைக்காத அரசுப்பணி, திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் கிடைக்குமென்றால், இது எந்தவிதத்தில் சரியானது? கரூரில் உயிரிழந்த 41 பேரின் மரணத்திற்கு தவெகவும், இன்றைக்கு முதல்வர் விஜய்யும்தான் முழுமுதற் காரணம் என்பதை நாடறியும். ஆனால், இந்தநொடிவரை அந்த மரணங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது, தன் மீது பழிபோடுவதாகச் சொல்லி, அரசியல் செய்து வருவது மிகக் கீழ்த்தரமானது. அதனைத் தாண்டி, கரூர் இடைத்தேர்தலுக்காக அப்பேரவலத்தைப் பயன்படுத்தி வாக்கு வேட்டையாட முனைவது குரூரத்தின் உச்சம். கரூரில் உயிரிழப்புகள் நிகழ்ந்தபோது களத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்காது, விரைந்து வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அவர்களுடைய வீட்டுக்குச் சென்று பார்க்காது, ஒரு மாதம் கழித்து மாமல்லபுரத்திலுள்ள விடுதிக்கு அழைத்துப் பார்த்தவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் மீது இப்போது கொள்ளும் பரிவெல்லாம் இடைத்தேர்தலை மனதிற்கொண்டே நடக்கும் கேலிக்கூத்து. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திப்பதிலும், அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதிலும் பொதிந்திருப்பது மனிதநேயமோ, தார்மீக உணர்வோ இல்லை; முழுக்க முழுக்க அரசியல் இலாப நட்டக்கணக்குதான்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏற்கனவே ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலத்தில் துயர்துடைப்பு நிதி வழங்கப்பட்டுவிட்ட நிலையில், கூடுதலாக அவர்களுக்கு உதவ விரும்பினால் அதனை தவெகவின் சார்பாகவோ, முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையிலோ செய்யட்டும். அதனைவிடுத்து, அரசு வேலை என்பதனை இடைத்தேர்தலுக்கான கேடயமாகப் பயன்படுத்துவது முறையானதல்ல. அரசு வேலைக்காக இரவு பகலாகப் படித்துவிட்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கின்றனர். தகுதித் தேர்வு எழுதிவிட்டு இன்றளவும் பணி ஆணை கிடைக்காமல் ஆசிரியர் பெருமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல ஆண்டுகள் பணி செய்துவிட்டு முறையான ஓய்வூதியம் கிடைக்காமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பல்லாயிரம் செவிலியர்களும், ஆசிரியர்களும், கௌரவ விரிவுரையாளர்களும், டாஸ்மாக் ஊழியர்களும், மின்துறை மற்றும் போக்குவரத்துப் பணியாளர்களும், தூய்மைப்பணியாளர்களும் பணி நிரந்தரம் கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத தவெக அரசு, இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவது மிகத் தவறானப் போக்காகும். ஆகவே, கரூர் இடைத்தேர்தலில் தன் அரசியல் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு, கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் தவறான முடிவைக் கைவிட வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
373
825
1.7K
98.6K
செந்தமிழன் சீமான்
அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? @CMOTamilnadu @TVKVijayHQ @Keerthana4VNR அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை! திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு! ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
154
1.4K
2.9K
56.7K