
நான் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் பேப்பர்ல தான் நான் செய்தி படிச்சேன். அருணாச்சலம் என ஒரு படத்தை ரஜினி தாயாரிப்பதாகவும், அந்தப்படம் தயாரிக்கும் 8 பங்குதாரர்களில் நானும் ஒருத்தன்னும் நியூஸ் போட்டிருந்தாங்க. எனக்கு ஒன்னும் தெரியல. பிறகு ரஜினியே எனக்கு போன்ல விஷயத்தை சொன்னாரு. அருணாச்சலம் படத்திற்க்கு தயாரிப்பாளரா நான் ஒரு பைசா கூட கொடுக்கல. அவரும் இதப்பத்தி என் கிட்ட எதுவும் கேட்கல. படத்துல நானும் நடிச்சேன் வில்லனா. படம் முடிஞ்சி பெரிய வெற்றியும் கண்டது. ஒரு நாள் என்னை கூப்பிட்டிருந்தார் ரஜினி. ஒரு பெட்டில வச்சி ரூ25 லட்சத்தை என்னோட பங்கா கொடுத்தாரு. அந்தப் படத்துல நடிச்சதுக்காக மிகப் பெரிய தொகையை தனியா கொடுத்தார். இந்தக்காலத்துல இப்படியெல்லாம் உதவுர குணம் யாருக்கு வரும். சும்மா கொடுத்தா என் கௌரவத்துக்கு குறைச்சல்னு, ஒரு தாயாரிப்பாளராக்கி உதவினாரு ரஜினி. எனக்கு இருந்த கடன் தொல்லைகள் தீர்ந்தது ரஜினியால் தான். அவருக்கு எப்போதும் என் மறியாதைக் கூற தான் என் வீட்டு புஜை அறையில் சாமி படங்களோடு அவரின் படமும் வைத்துள்ளேன். அவரால இன்னும் பலபேர் வாழனும் - விகே ராமசாமி ஒரு பேட்டியில் கூறியது #தலைவர் #Thalaivar #Superstar #சூப்பர்ஸ்டார் #Rajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த் #RajinikanthArmy @rajinikanth @ash_rajinikanth @soundaryaarajni @RIAZtheboss













