
D P T
14 posts



நான் ஒன்றும் பெரிய அரசியல் விமர்சகரோ அல்லது Psephologist இல்லை.
இந்தத் தேர்தலில் TVK மிகப்பெரிய வெற்றியைப் பெறுமா என்பது சந்தேகமே, ஆனால் கணிசமான வாக்கு சதவீதத்தை நிச்சயம் பெறும் என்பது எனது எண்ணம். ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் மூன்றாகப் பிரியும்போது, அதில் DMK கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு அமையும் என Journalist மணி அவர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடுவார், அதே நம்பிக்கை எனக்கும் இருக்கிறது.
எனது குடியிருப்பு வளாகத்தில் வசிப்பவர்கள், வீட்டிற்கு வரும் தூய்மைப் பணியாளர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எனப் பல தரப்பட்ட மக்களிடம் பேசும்போதும் அவர்கள் TVK-விற்கு வாக்களித்துள்ளதாகக் கூறுகிறார்கள். இவ்வளவு ஏன், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவிற்கு வாக்களித்து வந்த எனது அம்மா நான் சொல்லாமல், இந்த முறை TVK-விற்கு வாக்களித்துள்ளார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
உதாரணமாக ஒரு 100 பேரிடம் கேட்டிருப்பேன். அதில் 70 பேர் TVK என்று சொன்னார்கள். இது சென்னையில் கேட்டது.
ஆரம்பத்தில் TVK வெற்றி பெற வாய்ப்பில்லை என்றே நினைத்தேன். ஆனால், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களின் பதிவுகள் மற்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரங்கராஜ் பாண்டே அவர்கள் விஜயை விமர்சிப்பதையும் பார்க்கும்போது ஒரு சிறிய சந்தேகம் எழுகிறது.
தேர்தலுக்கு முன்பு இருந்த விஜய் எதிர்ப்பை விட தேர்தலுக்குப் பிறகு விஜய் எதிர்ப்பு கடுமையாகி இருக்கிறது.
இப்போதும் திமுகவே வெல்லும் என்று தோன்றினாலும், வரும் மே 4-ஆம் தேதி ஏதேனும் Surprise காத்திருக்குமா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!

தமிழ்




