Sabitlenmiş Tweet
AIADMK - SayYesToWomenSafety&AIADMK
13K posts

AIADMK - SayYesToWomenSafety&AIADMK
@AIADMKOfficial
Official Twitter page of AIADMK
Tamilnadu Katılım Şubat 2014
1 Takip Edilen512.4K Takipçiler

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் "யுகாதி திருநாள்" வாழ்த்துச் செய்தி

தமிழ்

#Live மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில்
நிர்வாக திறனற்ற திமுக அரசை கண்டித்து அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் twitter.com/i/broadcasts/1…
தமிழ்

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நாளை (17.3.2026), மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்


தமிழ்

தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம்; விலைவாசி உயர்வு முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, 17.3.2026 அன்று வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அன்பு வேண்டுகோள்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்




தமிழ்

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் நடைபெறும் அஇஅதிமுக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி twitter.com/i/broadcasts/1…
தமிழ்

சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான குழுக்கள்
- மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு




தமிழ்

AIADMK - SayYesToWomenSafety&AIADMK retweetledi

விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை நாட்டையே உலுக்கியுள்ளது.
பாதிக்கப்பட்டு உயிரிழந்த அச்சிறுமியின் குரலாக நீதிகேட்டு பாராளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது @AIADMKOfficial.
களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது. திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, பொம்மை முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான @KanimozhiDMK அவர்களை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி!
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம்
திரு. @mkstalin அவர்களே?
காவல்துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவிற்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?
இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
#தூத்துக்குடி_Nirbhaya -விற்கு உரிய நீதி கிடைப்பதை அஇஅதிமுக உறுதி செய்யும்!
விரைவில் அமையப்போகும் @AIADMKOfficial அரசு, எப்படி மாண்புமிகு அம்மா அவர்கள் தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்!
@NainarBJP @draramadoss @TTVDhinakaran @GK__Vasan
தமிழ்

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தினத்தந்தி நாளிதழின் அதிபர் திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்களுடைய மனைவி திருமதி மாலதி ஆதித்தனார் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானதையொட்டி, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


தமிழ்

தமிழ் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய, நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து, வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Can_SHE_LiveInTN



தமிழ்
AIADMK - SayYesToWomenSafety&AIADMK retweetledi

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
பாலியல் வன்கொடுமையும் , பெண்களுக்கான பாதுகாப்பின்மையும்,
தமிழகத்தில் தினசெய்தியாகி
விட்ட நிலையில்,
சிறுமியைக் காணவில்லை என உறவினர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தும் மெத்தனப் போக்குடன் செயல்பட்டுள்ளது காவல்துறை. இந்த வெட்கக்கேடான செயல், திமுக ஆட்சியின் லட்சணத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
பத்தாம் வகுப்பில் நன்கு படித்து மாவட்ட அளவில் பரிசு பெற்று, தற்போது 12-ம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியைக் காணவில்லை என்று புகாரளிக்க பெற்றோர் வந்தால், நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, மிகவும் அலட்சியமாகவும், காணாமல் இருந்த பெண்ணை சந்தேகிக்கும் வகையிலும் காவல்துறை செயல்பட்டதாக வரும் தகவல்கள், திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவிற்கு பெண்கள் பாதுகாப்பில் அக்கறை இன்றி சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாகவும், அவர்களிடம் காவல்துறையும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வருகின்றன.
குற்றவாளிகளை உடனே கண்டறிந்து விட்டால், உறவினர்கள் போராட்டத்தை முடித்துவிடப் போகின்றனர். இதற்கு ஏன் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினர் வந்து சமாதானம் பேச வேண்டும்? எதையாவது மறைக்கவோ, வழக்கை நீர்த்துப் போகச் செய்யவோ, குற்றவாளிகளை ஏதேனும் வகையில் காப்பாற்ற வேண்டும் என திமுகவோ, திமுக அரசோ முயற்சிக்கிறதா?
வேடநத்தம் பாலியல் கொலைக் குற்றத்திற்கான எச்சரிக்கை இருந்தும் அதைத் தடுக்காமலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமலும் இருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென @mkstalin மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
#Can_SHE_LiveInTN
@AIADMKOfficial

தமிழ்

கடந்த ஐந்தாண்டுகளில் கோவை மாவட்ட மக்களுக்கு எந்தத் திட்டங்களையும் தராமல் புறக்கணித்து, பல்வேறு வரிகளை உயர்த்தியதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி, மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, கோவை மாநகர், புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்


தமிழ்

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் எத்தனையோ கேள்விகளை இந்த பொம்மை முதல்வர் நோக்கி, இந்த விடியா திமுக அரசை நோக்கி கேட்டிருக்கிறார்கள். ஆனால், எதற்கும் இதுவரை இவர்களிடம் பதில் இல்லை.
இப்போது ஒரே ஒரு கேள்வி தான் நாங்கள் கேட்கிறோம்...
"தமிழக மக்களுக்கு, பெண்களுக்கு தமிழ்நாட்டில், எந்த ஒரு இடத்தில் பாதுகாப்பு இருக்கிறது?"
இந்த ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல தெம்பு, திராணி திரு. @mkstalin-க்கு உண்டா?
தமிழக மக்களே, பெண்களே...
திரு. ஸ்டாலினும், திமுக-வினரும் இன்னும் சில நாட்களில் உங்களை நோக்கி வரும் போது, நீங்களும் இதே கேள்வியை, #WhereAmISafe என்ற கேள்வியைக் கேளுங்கள்!
கொடூரமாக உயிரிழந்துள்ள அந்த பெண் அனுபவித்த வலியை, அவர்கள் பெற்றோர், உறவினர்கள் காலமெல்லாம் அனுபவிக்கப் போகும் வேதனையை திரு. ஸ்டாலினால் ஒரு நொடி உணர முடியுமா?
இதுவரை அப்படி உணர்ந்திருந்தால், பெண்களுக்கு எதிரான இத்தனைக் குற்றங்களை நடக்க அனுமதித்து இருப்பாரா?
இந்த கையாலாகாத திமுக ஆட்சி வீழ்ந்தால் தான், தமிழ்நாடு வாழும்!
வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழ்

#Live அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம் twitter.com/i/broadcasts/1…
தமிழ்
AIADMK - SayYesToWomenSafety&AIADMK retweetledi

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.
43 பிள்ளைகள் மருத்துவமனைப் படுக்கைகளில் சிகிச்சை பெறும் காட்சியை காண்பதற்கு நெஞ்சம் பதைக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தும், சில ஊடகங்கள் இச்செய்தியை வெளியிடாமல் இருந்தது வருத்தமளிக்கிறது.
மாணவர்கள் உயிர் விஷயத்தில், சத்துணவு போன்ற ஒரு முக்கியமான திட்டத்தில், எப்படி ஒரு அரசு தொடர்ச்சியாக அலட்சியப் போக்கு காட்ட முடியும்?
2021 முதல் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தரமற்ற அரசுப்பள்ளி உணவால் பாதிக்கப்பட்டிருக்க, அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலையோ அக்கறையோ இல்லாமல், "சாம்பார் டேஸ்ட் எப்படி?" என மேடை போட்டு வெற்று விளம்பரம் செய்த வெட்கங்கெட்ட அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு?
பள்ளி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை இந்த திமுக @mkstalin
அரசு உறுதி செய்திட வேண்டும் .
பள்ளி மாணவர்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கூட அக்கறையற்ற இந்த திமுக-வை, ஆட்சிக்கு அப்பால், அக்கரையில் மக்கள் சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!
@AIADMKOfficial
#DMKFailsTN
தமிழ்







