AIADMK

13.2K posts

AIADMK banner
AIADMK

AIADMK

@AIADMKOfficial

Official Twitter page of AIADMK

Tamilnadu Katılım Şubat 2014
1 Takip Edilen516.2K Takipçiler
Sabitlenmiş Tweet
AIADMK
AIADMK@AIADMKOfficial·
Remembering Our Puratchi Thalaivi Amma's historic quote today.
English
1.1K
4.3K
12.3K
0
AIADMK
AIADMK@AIADMKOfficial·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மறைந்த தஞ்சை கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் திரு. KAS மகேந்திரன் அவர்களின் திருவுடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, அவர்தம் குடும்பத்தாரிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்தார்கள். மேலும், அவரது குழந்தைகளுக்கான முழுக் கல்விச் செலவை @AIADMKOfficial ஏற்றுக்கொள்ளும் எனவும், மேலும் அவர்தம் குடும்பத்தாருக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளுக்கும் அஇஅதிமுக துணைநிற்கும் என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்கள். @AIADMKOfficial
AIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
19
323
855
15K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
சேலம் மாவட்டம் என்பது எப்போதுமே @AIADMKOfficial அசைக்க முடியாத கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. இன்றைக்கு நமக்கு எதிராக எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள், சவால்கள் முகாமிட்டிருந்தாலும், அத்தனையையும் தவிடுபொடியாக்கி சேலம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நாம் சாத்தியப்படுத்தியிருக்கிறோம். இதேபோல, நடப்பு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் கழகத்தின் சார்பாக நான் போட்டியிட்டேன். என் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்டுள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதியின் வாக்காளப் பெருமக்கள், சுமார் 98,200 வாக்குகள் என்ற மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு வித்தியாசத்தில் என்னை அமோகமாக வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நமக்கு வாக்களித்து, கழகத்தின் மீது பேராதரவை வெளிப்படுத்திய வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! - மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
6
356
985
14.7K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
14
361
682
12.4K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. “திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள் மீது வழக்குகள், எதிர்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்! அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது என சொல்லப் படுகிறது. டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்த போது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறிய போது கூட அதை கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர் தானே இவர்? மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம் தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது. ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளை கேட்கும் எதிர்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்து பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும். அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா? உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள். புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம். @PTTVNewsX @CMOTamilNadu
தமிழ்
32
385
753
13.5K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் பக்ரீத் திருநாள் வாழ்த்துச் செய்தி
AIADMK tweet media
தமிழ்
13
373
817
13.3K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
அம்மா உணவகங்களில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு, பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் படத்தை வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. “அம்மா உணவகம்” என்று சொன்னாலே உலகெங்கும் வாழும் தமிழர்கள் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் தோன்றுவது மாண்புமிகு அம்மா அவர்களின் திருவுருவம். அப்படி வரலாற்றில் நிற்கும் அம்மா உணவங்களில் உள்ள அம்மா அவர்களின் புகைப்படங்கள் நீக்கிவிட்டு உங்கள் புகைப்படத்தை வைத்துவிட்டால், அம்மா உணவகம் உங்கள் திட்டம் என்று மக்கள் நம்பி விடுவார்களா? எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் Parallel Universe வைத்துக்கொண்டு ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதல்வர் உணர வேண்டும்! உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படத்தை நிறுவுவதுடன், அம்மா உணவகங்களின் செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுமாறு பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.
AIADMK tweet media
தமிழ்
82
563
1.1K
108.5K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க, குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கழக சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களுமான திரு. தளவாய் சுந்தரம், திரு. ஓ.எஸ். மணியன், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @IInbadurai ஆகியோர் உடன் இருந்தனர்.
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
24
433
1.2K
49.8K
AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
“எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை! எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல். ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன? தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர். 2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று! மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை! சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள் @CMOTamilNadu! @AIADMKOfficial
தமிழ்
249
1.5K
3.9K
162.3K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
2/2
AIADMK tweet media
1
84
260
9.4K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்களான, ஆற்காடு தொகுதி திரு. S.M. சுகுமார், காங்கயம் தொகுதி திரு. N.S.N. நடராஜ், அந்தியூர் தொகுதி திரு. P. ஹரிபாஸ்கர், பண்ருட்டி தொகுதி திரு. K. மோகன், சங்கரன்கோவில் தொகுதி டாக்டர் திலீபன் ஜெய்சங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றனர் 1/2
AIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
18
372
1.4K
60K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
கீழ்தளத்தில் ராஜினாமா! மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு! தமிழ் நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை அறிமுகப்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடும் கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
173
1.2K
2.7K
100.8K
AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம். சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன. அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது. முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்! “முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா? உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
தமிழ்
131
1.3K
3.1K
106.8K
AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது. இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால், “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?” சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
239
2.4K
5.9K
244.4K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுறும் தமிழக மக்கள்! போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
30
611
1.2K
20.9K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351-வது சதய விழா - மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாழ்த்து செய்தி.
AIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
9
286
712
10.8K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள், இன்று (20.05.2026), அஇஅதிமுக தலைமைக் கழகச் செய்திகள், கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிக்கைகள், கழகத்தின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் தமிழக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தொகுத்து வழங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான “#போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அறிமுகம் செய்து வெளியிட்டார்கள். இந்நிகழ்வின் போது கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
AIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
59
407
1.1K
67K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், தமிழ் நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில்; மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் முன்னிலையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
AIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
24
399
1K
33.9K
AIADMK retweetledi
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் #பொய்க்கால்_குதிரை_அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது. பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு #பொய்க்கால்_குதிரை_அரசு அமைத்துவிட்டது. நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும். @AIADMKOfficial
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet mediaEdappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK tweet media
தமிழ்
586
1.5K
4K
240.3K
AIADMK
AIADMK@AIADMKOfficial·
மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம்! மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
AIADMK tweet mediaAIADMK tweet mediaAIADMK tweet media
தமிழ்
40
457
1.1K
31.8K