AMMK IT Wing Official

12.8K posts

AMMK IT Wing Official banner
AMMK IT Wing Official

AMMK IT Wing Official

@AMMKITWINGoffcl

Official Twitter handle of AMMK IT Wing. https://t.co/9ID7roPAhL | https://t.co/LfRGBf5gbg Join AMMK IT Wing https://t.co/1KyugoNACi

Katılım Aralık 2019
63 Takip Edilen6K Takipçiler
AMMK IT Wing Official
AMMK IT Wing Official@AMMKITWINGoffcl·
#AMMKcaresTN திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் தொடரும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. திரு. #TTVDhinakaran அவர்கள்
AMMK IT Wing Official tweet media
தமிழ்
0
1
2
37
AMMK IT Wing Official retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது – அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான அம்மா உணவகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், தேவையான சமையல் உபகரணங்களை உடனடியாக கொள்முதல் செய்து தரமான உணவு தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிடவும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனமார வரவேற்கிறேன். மனிதர்கள் உயிர்வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உணவு அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமானதாக கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பசியைப் போக்கும் அட்சயப்பாத்திரமாக விளங்கியதை எவராலும் மறுக்க முடியாது. ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்ந்த அம்மா உணவகங்கள், இதயதெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறையாலும், உபகரணங்கள் தட்டுப்பாட்டாலும் சந்திக்காத சிரமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அவை தொடங்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் புதியதாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருக்கும் முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அதனை மேம்படுத்த பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கும் இந்நேரத்தில், தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா உணவகங்களை திறந்து ஏழைத் தொழிலாளர்களின் பசியைப் போக்கிட உதவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.@CMOTamilnadu
தமிழ்
95
362
2.6K
164.2K
AMMK IT Wing Official retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழ்
12
63
376
14K
AMMK IT Wing Official retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு - பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெகவும் தோல்வியடையக் கூடாது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர கானா பாடல் பாடும் தொழிலில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொலை, தூத்துக்குடி அருகே மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டு இளைஞர் கொலை, கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே இளைஞர் ஒருவர் கொலை, சேலம் அருகே மதுபோதையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களால் அடித்துக் கொலை என புதிய அரசு பொறுப்பேற்ற நாட்களின் எண்ணிக்கைக்கு போட்டியாக அரங்கேறும் கொலைகளின் எண்ணிக்கை பொதுமக்களின் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததே சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்பும் அதே நிலை தான் நீடிக்கிறதோ என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது. எனவே, தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பது தான் அரசு நிர்வாகத்தின் முதன் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என தவெக அரசையும் அதன் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
தமிழ்
77
553
1.5K
71.2K
AMMK IT Wing Official retweetledi
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
``நீங்க மட்டும் அமைச்சர் பதவி கொடுங்க.. அப்புறம் என்ன பண்றேனு பாருங்க..'' CM விஜய்க்கு TTV ஓபன் சவால் #cmvijay #ttvdhinakaran #tv #admk #jayalalitha #thanthitv
தமிழ்
15
58
192
6.2K
AMMK IT Wing Official retweetledi
Muthukumar
Muthukumar@AmmkITMuthu·
#தினகரனிசம்_வெல்லும் அமமுகவில் இருந்து காமராஜை நீக்கிய பிறகு, அவரை பற்றி டிடிவி ஏன் விமர்சிக்கிறார் என சிலபேர் கேட்கிறீங்க ... டிடிவியும் வேணாம், அமமுகவும் வேணாம் என்றால், அவரால் கிடைத்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டியது தானே, செய்வாரா காமராஜ்? இல்லை, இல்லை காமராஜ் அவரது சொந்த செல்வாக்கால் தான் ஜெயித்தார்னு சொன்னீங்கனா, வெற்றி பெறும் அளவுக்கு சொந்த செல்வாக்கு வைத்திருப்பவர் எதற்காக இத்தனை முறை தோற்றார்? அதுக்காக டிடிவியால் மட்டும் தான் வெற்றி பெற்றாரா என கேட்டால், அப்படி எங்கேயும் டிடிவி சொல்லவே இல்லை. அதிமுக, அமமுக, பாஜக என கூட்டணி கட்சி தொண்டர்களின் உழைப்பால் தான் அவர் வெற்றி பெற்றதாக சொல்லி இருக்கிறார், உண்மையும் அதுவே. காமராஜ் தொகுதியில் அறிமுகமான முகம், ஏற்கனவே தோற்று இருக்கிறார் என்கிற அனுதாபம் என்பதெல்லாம் காமராஜ் வெற்றி பெற காரணமான பல காரணிகளில் ஒன்று தானே தவிர, அதுமட்டும் காரணமில்லை என்பது குழந்தைக்கும் தெரியும். சொந்த செல்வாக்கில் மன்னார்குடியில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளவர் சுயேட்சையாக நின்றிருக்கலாம், வெற்றி பெற்ற பிறகு எந்த முடிவையும் எடுத்திருக்கலாம், யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. NDA கூட்டணியில் மன்னார்குடி தொகுதியை கேட்டு வாங்கியது டிடிவி, காமராஜ் இல்லை. மன்னார்குடி வேட்பாளராக காமராஜை அறிவித்தது டிடிவி, காமராஜ் தன்னைத்தானே அறிவித்துக் கொள்ளவில்லை. அமமுகவிற்காக பதவியை இழந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களில் பலருக்கு போட்டியிட கேட்ட தொகுதிகள் கிடைக்காத சூழ்நிலையில், காமராஜ் அவர்களுக்கு மன்னார்குடி தொகுதியை வாங்கி கொடுத்தவர் டிடிவி. அந்த நன்றி கொஞ்சமாவது இருக்கனும் . இப்படியொரு பதிவேட்டை வச்சிக்கிட்டு, அடுத்தவர்களை துரோகினு சொல்ற தகுதியெல்லாம் உங்களுக்கு இல்லை.
Muthukumar tweet media
தமிழ்
0
1
11
200
AMMK IT Wing Official
AMMK IT Wing Official@AMMKITWINGoffcl·
#AMMKcaresTN #அம்மாஉணவகம் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் பிறப்பித்திருக்கும் உத்தரவு வரவேற்புக்குரியது – அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து அத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும். கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.
AMMK IT Wing Official tweet media
தமிழ்
0
0
1
29
AMMK IT Wing Official
AMMK IT Wing Official@AMMKITWINGoffcl·
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் திரு கே.ராஜன் அவர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
AMMK IT Wing Official tweet media
தமிழ்
0
0
1
58
AMMK IT Wing Official
AMMK IT Wing Official@AMMKITWINGoffcl·
#AMMKcaresTN தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் கொலைச் சம்பவங்களால் கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு - பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாப்பதில் திமுகவைப் போல தவெகவும் தோல்வியடையக் கூடாது. கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
AMMK IT Wing Official tweet media
தமிழ்
0
0
0
32
AMMK IT Wing Official retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும். உலகளவிலான சந்தையில் கச்சா எண்ணெயின் தொடர் விலையேற்றத்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், இயற்கை எரிவாயு விலை 2 ரூபாயும் நேற்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டு புதிய விலை அமலுக்கு வந்துள்ளன. வளைகுடா நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் கொண்டுவருவதில் ஏற்பட்ட தடங்கலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி இழப்பாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழை, எளிய மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுப் போக்குவரத்திற்கான செலவோடு, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்து அவர்களுக்கு பல்வேறு விதமான பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்
52
122
611
49.9K
AMMK IT Wing Official
AMMK IT Wing Official@AMMKITWINGoffcl·
#Petrol_pricehike பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் - ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும். கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.
AMMK IT Wing Official tweet media
தமிழ்
0
0
1
41
AMMK IT Wing Official
AMMK IT Wing Official@AMMKITWINGoffcl·
@TTVDhinakaran @AmmkITMuthu இந்த தறிகெட்ட கூட்டத்தின் ஆட்டம் விரைவில் முடிக்கப்படும்.
தமிழ்
0
0
1
52
AMMK IT Wing Official retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன். த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்! @TVKVijayHQ @TVKPartyHQ @EPSTamilNadu @Udhaystalin @mkstalin @PremallathaDmdk
தமிழ்
816
3.4K
9.9K
488.3K
AMMK IT Wing Official retweetledi
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | தவெக கொண்டு வந்திருப்பது சகிக்க முடியாத துர்நாற்றம் - டிடிவி தினகரன் #SunNes | #TTVDhinakaran | #Kamaraj | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
44
801
2.2K
35.7K
AMMK IT Wing Official
AMMK IT Wing Official@AMMKITWINGoffcl·
#TVKfails த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்! கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்.
AMMK IT Wing Official tweet media
தமிழ்
0
5
8
59
AMMK IT Wing Official retweetledi
AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM
AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM@ammkofficial·
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM tweet media
தமிழ்
7
79
537
13.4K
AMMK IT Wing Official retweetledi
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
மருத்துவமனையின் இன்றியமையாத பணியாளர்களாகவும், மனிதநேயத்தின் உயிர்நாடியாகவும் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பு, தியாகம், பொறுப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் தன்னலமற்ற பணியில் ஈடுபட்டுவரும் செவிலியர்களின் சேவை மனப்பான்மையை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
தமிழ்
8
54
358
18.5K