ClapboardCritic retweetledi

#Karuppu | Just GOD things
காசுக்காக நீதியை நாதியில்லாத நிலைக்கு தள்ளும் தீய வக்கீலா பேபி கண்ணன்.
இந்நிலையில் தொலைந்து போய் திரும்ப கிடைத்த நகைகளை நீதிமன்றம் மூலம் பெற வரும் தந்தையும், மகளும் இவரிடம் சிக்கி சின்னாபின்னப்பட்டு நகைகளை மீட்டாங்களா இல்லையான்னு படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க..
முதல் பாதி நல்லாவே போச்சு, சென்டிமென்ட் சீன்ஸ்லாம் ஒர்க் ஆச்சு, கிட்டத்தட்ட நெறைய ரெஃபரன்ஸ் ஒரு சில நல்ல வசனங்கள் வெச்சு பாலாஜியன் துணையா இருந்தது..
இடைவெளி நெருங்கையில தான் நம்ம கருப்பு சாமி என்ட்ரி, சும்மா bgm லாம் போட்டு goosebumps ஆக்கி விட்டாங்க..
இரண்டாம் பாதியில அடுத்தடுத்து வந்த பாடல்கள் தான் ரொம்ப சோதனையே, சூரியா சூப்பரா இருக்காப்பல இன்னும் நல்லா யோசிச்சு நாலு நல்ல சீன்ஸ் வச்சுருயிருக்கலாம்..
இங்க தான் RJB வில்லன் ஆயிட்டார்..
சாய் இசை தான் படத்துக்கு பலமும், பலவீனமும்..
சென்டிமென்ட் காட்சி வரப்போ பெருசா செல்ஃப் எடுக்க மாட்டிங்குது அவரோட இசை, அதுவே மாஸ் சீன்னா அடிச்சு நொறுக்கி விடுது..
சூரியா சாமி உருவத்துல பேயாட்டம் 🔥🔥 கிளைமாக்ஸ்லா வேற மாதிரி இருந்தாப்ல.. காந்தாரக்கு முன்னாடியே இப்படி பண்ணிருந்தா அடிபொலி தான்..
த்ரிஷா- சொல்லப்போனா சூரியாவை விட அதிக ஸ்க்ரீன் டைம், ஆனா டப்பிங் பன்றதுல என்னதான் பிரச்சனை 👿 சின்மயி வாய்ஸ் ஒரு பக்கம் போகுது இவங்க க்ளோஸ்அப் எல்லாம் wasted..
இந்திரன்ஸ், அனகா மாயா, நட்டி சிறப்பு 👏🏻
தப்பை எல்லாம் தாண்டி கருப்பு ஜெய்க்கிறான் ❣️
#Surya2026 3️⃣5️⃣

தமிழ்







