Sachein ♥️
36.5K posts

Sabitlenmiş Tweet
Sachein ♥️ retweetledi

This is highly condemnable. At nos cost the public should suffer and made to walk like this. Take action action irresponsible planning of officers .@CMOTamilnadu
English

Inimel aachum konjam responsible ah pesu yaa 😮💨 Attacking DMK won't help us anymore
.@MJWayne_
I got it 🤣🤣🤣
English
Sachein ♥️ retweetledi

தென் மாவட்டங்களில் தொடரும் சாதிய வன்கொடுமைகளை தவெக தலைமையிலான அரசு
@TVKVijayHQ @CMOTamilnadu
இரும்புக்கரம் கொண்டு தடுத்திட வேண்டும். தொடர் சாதிய வன்முறைகளுக்கெதிரான தீர்மானகரமான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாபாசாகேப் அம்பேத்கர், ஐயா இமானுவேல் சேகரன், திரு பசுபதி பாண்டியன் ஆகியோரின் திருவுருவப் படங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டதால் பட்டியல் சமூகத்தினர் மீது தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறுபேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் இப்பகுதியில் நடப்பது புதிதல்ல.
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இதற்கான தகுந்த நீதியாக கைது நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் கொடுப்பது மட்டுமே இதை முற்றிலும் தடுத்துவிட முடியுமெனக் கருதிவிட முடியாது. மேலும், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான பின்னணி என்ன? இதைத் தடுத்து நிறுத்துவதற்கான அரசினுடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நேர்மையான விசாரணைக் குழு ஒன்றை அமைத்து, இதுபோன்று தொடர்ந்து சாதிவெறி தலைவிரித்தாடுகின்ற பகுதிகளில் நியமித்திடவும் தற்போதைய தவெக தலைமையிலான அரசு ஆவண செய்திட வேண்டும்.
தொடர் சாதிய வன்முறைகள் கடந்த ஆட்சியைப் போல தற்போதைய புதிய ஆட்சியிலும் தொடர்வது ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்க விரும்புகிற ஓர் அரசிற்கு அழகல்ல. இதை தவெக தலைமையிலான அரசு சரியாகப் புரிந்துகொண்டு தகுந்த நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வலியுறுத்துவதோடு, அதற்குச் சில பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைக்க விரும்புகிறோம்.
குறிப்பாக, தென்தமிழக இளைஞர்களில் குறிப்பிட்ட சில சமூகப் பிரிவினரிடையே வன்முறைப் போக்கு அதிகரித்து வருகிறது. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இந்த வன்முறைகள், பொதுவான குற்றங்களோடு ஒப்பிட்டுக் கடந்து போகக்கூடியவை அல்ல. இதன் பின்னாலிருக்கும் காரணங்கள், சமூக உளவியல் உட்பட பல நிலைகளில் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கைது செய்தல், வழக்கு தொடுத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளோடு இதனை நிறுத்திக்கொள்ளாமல், கீழ்க்கண்ட சில பரிந்துரைகளையும் அரசு அமல்படுத்த வேண்டும் பட வேண்டும்.
1. தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை அதிகம் நிகழும் பகுதிகளை அடையாளங்கண்டு, மாவட்ட அளவில் சாதிய மோதல் தடுப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். இதில் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகள் இடம்பெற வேண்டும்.
2. பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதைத் தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
3. கடந்த திமுக ஆட்சியில், பள்ளிகளில் அதிகரித்த சாதியப் பாகுபாடுகளைக் களைய ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் கமிஷனின் பரிந்துரைகளின் தற்போதைய நிலை கண்டறியப்பட வேண்டும். அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உத்தரவாதத்தை உறுதி செய்ய வேண்டும்.
4. பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இந்திய அரசியலமைப்பு, சமூகநீதி, சாதி எதிர்ப்பு வரலாறு, பாபாசாகேப் அம்பேத்கர் சிந்தனைகள் போன்றவை கட்டாயமான குடியுரிமைக் கல்வியின் ஒரு பகுதியாக வலுப்படுத்தப்பட வேண்டும்.
5. சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் வகுப்புகள், நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். சமூக அறிவு, விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பொதுப் புழங்கு வெளிகளை அரசு அதிகப்படுத்த வேண்டும். சாதிய வன்முறைகள் அதிகம் நிகழும் பகுதிகளில் இளைஞர்களுக்கான விளையாட்டு மையங்கள், நூலகங்கள், கலை மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
6. தென்மாவட்ட காவல் நிலையங்களில், ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்களையும் காவல் அதிகாரிகளையும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
7. தென் தமிழகம் முழுக்க சாதியக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பாலானோர், சமூக வலைதளங்களில் சாதியப் பெருமிதத்தைக் கொண்டாடும் கலாச்சாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். சமூகவலைதளங்களில் சாதி வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்க மாநில அளவில் சிறப்பு இணையக் கண்காணிப்புப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
தமிழ்
Sachein ♥️ retweetledi

@eddamone Velachery la saapten na perusa illa 😮💨 Japan chicken nu onnu nalla Irunthuchu na anga
Suomi
Sachein ♥️ retweetledi

Kolgai ethiri nu sollitu irukuravana PM Venum nu sollitu irukaanunga 😒
ஜமுனா@jamunah_velu
The CM & PM I want for my state & country.
Indonesia

@eddamone Chennai la enga Seeraga samba briyani kedaikum? Other than Thirunelveli Parotta kadai
Eesti
Sachein ♥️ retweetledi

Sachein ♥️ retweetledi

மாண்புமிகு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்களே (உங்களை போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரை பின்பற்றுவர்களுக்கு கிடையாது) மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
பக்தர்களிடம் சட்டத்துக்கு புறம்பாக பணம் பெற்றுதான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படி செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் செய்ய சொல்லவும் இல்லை.
நேற்று வரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்து விட்டதாக பேசுகிறீர்கள்.
தவறு செய்தவர்களை தண்டித்தால் தங்களுக்கு எதற்காக திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்பது தெரியவில்லை.
இன்னும் பல முறைகேடுகள் திருச்செந்தூர் திருக்கோயிலில் நடந்து வருவதை விரைவில் வெளிக்கொணர்வேன், அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்!
Anitha R Radhakrishnan@ARROffice
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுப்படுத்திய அறநிலையத்துறை அமைச்சருக்கு கண்டனம்.
தமிழ்

Ennada nejamave inba ku elevation pottutu irukinga 🫣

Pragash Nandhan ⭐@PragashNandhan
எனக்கு தெரிஞ்சு GenZ புரிஞ்சுக்கணும்..அவங்க வோட்ட வாங்கணும்னா அவர் ஒருத்தர் தான் வரணும்.. ஹம்ம் அதே தான் கொம்பன் எறங்குற நேரம் வந்திருச்சு …🔥🖤♥️🔥
Eesti
Sachein ♥️ retweetledi

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்றிருந்த நமது துறையின் பெயரை, மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் 'சமூக நீதித்துறை' என்று மாற்றம் செய்யப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இடதுசாரி சனநாயக சக்திகளின் பல்லாண்டு கால கோரிக்கையின் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த பாராட்டத்தக்க மாற்றத்தை மேற்கொண்டார்.
கடந்த 22.05.26 அன்று அமைச்சரவை ஒதுக்கீடு குறித்து ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பழங்குடியினர் என்பதற்கு பதிலாக 'Hill Tribes' என்று குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
முன்னர் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் 'ஹரிஜன் மற்றும் பழங்குடி மக்கள் நல இயக்குநர் அலுவலகம்' என்ற பெயரில் நமது துறை செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், 13.12.1980 அன்று சமூக நலத்துறை வெளியிட்ட ஆணையின்படி
(G.O. MS. NO. 953) 'ஹரிஜன்' எனும் சொல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நல இயக்குநர் அலுவலகம்' என்று தமிழில் பெயர் திருத்தப்பட்டது.
மேலும், 21.3.1981 அன்று சமூக நலத்துறை வெளியிட்ட மற்றொரு ஆணையின்படி (G.O. MS. NO. 198) ஆங்கில பயன்பாட்டிலும் 'ஹரிஜன்' என்ற சொல் நீக்கப்பட்டு, ஆதிதிராவிடர் என்று திருத்தப்பட்டது.
1988ஆம் ஆண்டு தான் சமூக நலத்துறையிலிருந்து தனியே பிரித்து 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை' என்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டின்படி 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை' என்பதே துறையின் பெயராக இதுவரை இருந்து வந்துள்ளது. தற்போது 'சமூக நீதித்துறை' என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூக நீதித்துறை
தமிழ்நாடு அரசு
30.05.26
@CMOTamilnadu
@thirumaofficial
@tncpim




தமிழ்






