Syed

21.3K posts

Syed banner
Syed

Syed

@Maduracaran

🔥Social butterfly 🔥 அனிருத் 🔥 எலான் மஸ்க் 🔥 AR ரஹ்மான் 🔥lyricist தாமரை 🔥மகள் Tweets are personal 💐

Katılım Ekim 2014
882 Takip Edilen316 Takipçiler
Syed retweetledi
Vijayaragavan
Vijayaragavan@vijaytalks9164·
யோவ் தந்தி டிவி காரன் என்னயா இப்படி மெரட்டி விட்ருக்க 🔥🔥🔥🔥
தமிழ்
2
164
749
12.5K
Syed retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர். ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை. எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன். நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்
1.5K
9.3K
23.1K
226.6K
Syed retweetledi
Taurus
Taurus@itz_chillax·
எடுத்த உடனே நேரா இவர முதல்வர் ஆக்கிடனுமாம் ஆமாடா ங்கோத்தா எடுத்த உடனே நேரா முதல்வர் தான்டா
Taurus tweet media
தமிழ்
11
562
2.3K
14.9K
Syed
Syed@Maduracaran·
@GopisTroll_Back @TVKVijayHQ சாதி வெறி அதிகமா இருக்கும் போல... என்னனு பாக்கணும் @TVKVijayHQ
தமிழ்
0
0
0
75
Gopi's Troll 2.0
Gopi's Troll 2.0@GopisTroll_Back·
எங்க மாவட்டம் விழுப்புரத்துல 7 தொகுதிகள் இருக்கு.. ஒண்ணுல கூட tvk ஜெயிக்கல.. எங்க மாவட்டத்துல தற்குறிகள் கொஞ்சம் கம்மியா இருக்காங்க போல..😁 நல்லது 🙌🙏🙏🙏 @TVKVijayHQ
தமிழ்
104
308
1.8K
19.7K
Syed retweetledi
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
Thank you, Hon'ble @PMOIndia, for your greetings. The well-being of our people remains our only goal. ​Transcending politics, we shall focus on the State's progress and the welfare of people of Tamil Nadu. We look forward to the Union Government’s support in this endeavor.
Narendra Modi@narendramodi

Gratitude to the voters of Tamil Nadu who supported the NDA in the Tamil Nadu Assembly Elections. We will always remain at the forefront in addressing people’s issues and improving their lives. Congratulations to TVK on their impressive performance. The Centre will leave no stone unturned in furthering the progress of Tamil Nadu and the well-being of their people.

English
1.2K
11.8K
70.1K
2M
Syed retweetledi
Sonia Arunkumar
Sonia Arunkumar@rajakumaari·
🥳😂😂
QME
3
124
762
7.1K
Syed retweetledi
TD....❥
TD....❥@MiniiGirl__·
2011 Stalin Ennoda MLA Padhavi Eduthukittaaru 2026 Naan Avaroda MLA Padhavi Eduthukitten Dhurandhar Revenge>> Vs Babu Revenge 😹 🔥
Indonesia
17
2.5K
13K
195.3K
Syed
Syed@Maduracaran·
@dp_karthik குபீர் 😂😂😂😂😂😂😂
தமிழ்
0
0
0
280
Syed retweetledi
KARTHIK DP
KARTHIK DP@dp_karthik·
🤣🤣🤣Kita thata oru 1000 tharava patbrupan… innoru 2000 vati papan.
Indonesia
20
671
5.3K
95.6K
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
அன்புள்ள எங்கள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி என்பது உங்களுக்கு புதிது இல்லை என்பதே எனக்கும் தெரியும் . ஆனால் தொடர்ந்து எத்தனையோ ஆண்டுகள் அரசியல களத்தில் இருக்கக்கூடிய நீங்கள் இன்று அரசியலில் சற்றும் அறிவு இல்லாத, அடிமை வேலை செய்த முகம் தெரியாத ஒரு புண்ணாக்கிடம் தோற்றது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது . உங்களது தொடர் பயணத்தை நான் அறிவேன் எமர்ஜென்சி காலங்களில் நீங்கள் போராடிய போராட்டங்களின் கனிகளை இன்று இவர்கள் எல்லோருமே -தமிழ் சமூகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றாலும் -அவர்கள் உங்களை முதலமைச்சர் ஆக அறிந்து கொண்டது இந்த ஐந்து வருடங்களில் தான் . இந்த ஐந்து வருடங்களுக்கு முன்பான உங்களது நெடிய பயணத்தை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் . நீங்கள் சந்தித்த துயர்கள் ,இடர்கள் அதிலிருந்து நீங்கள் மறுபடியும் ஃபினிக்சாக எழுந்து வந்த சம்பவங்கள் எதையும் இந்த ஜென்சி தலைமுறை அறிந்திருக்க மாட்டார்கள் . அறிந்தில்லாதது போல பேசக்கூடிய முந்தைய தலைமுறை நிச்சயமாக பிஜேபியுடன் ஒட்டுறவு கொண்டவர்களாக இருப்பார்கள் தமிழ் சமூகத்தில் அதன் கண்ணுக்கு தெரியாத ஒரு வேலியை நீங்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் போட்டபடியே தான் இருந்தீர்கள் .அதற்கு எங்களுடைய நன்றி . இந்த திடீர் மாற்றங்களால் நாங்கள் மாறப்போவதில்லை .உங்கள் மேல் கொண்ட எங்களுடைய நேசம் மாறப்போவதில்லை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று நீங்கள் பதவிப்பிரமாணம் எடுக்கும் பொழுது கண்களில் கண்ணீரோடு தலை குனிந்து கொண்டது உங்கள் மனைவி மட்டுமல்ல -இங்க இருக்கக்கூடிய தமிழ் சமூகமும் உளமாற உவப்பு கொண்டது . அதற்குப் பின்னிருக்க கூடிய ஏராளமான அரசியல் பின்புலங்களை இந்த தமிழ் சமூகம் அறிந்து தான் உள்ளது நீங்கள் செய்த நலன்களை தமிழகம் ஒவ்வொரு கணமும் உணர்ந்தபடி தான் இருக்கும் .ஒரு வேளை - அங்கீகாரம் என்ற இடத்தில் உங்கள் பெயரை சேர்க்காமல் அவர்கள் இருக்கலாம் . ஆனால் காலம் அதை வரைந்து செல்லும் . ஒருபோதும் எங்களுக்காக இந்த தமிழ் சமூகத்துக்காக நீங்கள் இந்த தோல்வியின் பொருட்டு தளர்ந்து விட வேண்டாம் . தமிழ் சமூகத்திற்கான உங்களுடைய பதிவை நாங்களும் சமூக ஊடகங்களில் வாசித்தோம் . அதில் இருந்த பலம் நிச்சயமாக உங்களை விட்டு அகன்று விடக் கூடாது வரக்கூடிய அரசாங்கத்திற்கு வாழ்த்து சொல்லும் மனநிலையை நீங்கள் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது . ஏனெனில் உங்களுடைய பிரச்சாரங்களில் எங்குமே ஒரு தவறான வார்த்தை நீங்கள் பேசி நான் பார்த்ததே இல்லை ஒருவேளை இந்த புதிய தலைமுறைக்கு மாற்றம் வேண்டும் என்ற சினிமா மோகத்தில் இந்த வெற்றி நிகழ்ந்திருக்க கூடும் அல்லது உங்களுக்கு அடுத்த வட்டத்தில் இருக்கக்கூடிய அலுவலர்களின் கவனமின்மையால் கூட இந்த தோல்வி நிகழ்ந்திருக்கக்கூடும் தொலைக்காட்சி வரலாற்றில் கைலாசத்தை போல வேறு யாரும் முன்னோக்கி சிந்திக்க இயலாது . அவர் இந்த தமிழ் தொலைக்காட்சிக்கு கொடுத்த நற்பலன்கள் என்னென்ன என்பதை இன்று தொலைக்காட்சியில் பணிபுரிய வரும் புதிய நபருக்கு தெரியாமல் கூட இருக்கலாம் . அவரும் ஒரு சில வேளைகளில் - அவருக்கு அடுத்த கட்டங்களில் வேலை பார்த்தவர்களின் அலுவலக இயலாமைகளை அறிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார். அவை போன்றவற்றை நாம் சரி செய்து விடலாம் . அவ்வளவே மற்றபடி எப்போதும் உங்களுடன் உண்மையுள்ள தமிழ் சமூகம் நாங்கள் இருக்கிறோம்.
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 tweet media
தமிழ்
4
3
22
665
Syed retweetledi
Anshitha🫶💖🍉
Anshitha🫶💖🍉@Anshithaprincey·
முதல் அமைச்சர் தளபதி விஜயின் வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய மும்பை தாராவி தமிழ் சொந்தங்கள் 🎆🎇🇪🇸💃😍
தமிழ்
5
1.1K
5.1K
28.2K
Syed retweetledi
Kerala Trends
Kerala Trends@KeralaTrends2·
Whatever VIJAY tweets next will definitely become the most-liked tweet in India 😉
English
2
335
3K
24.2K
Syed retweetledi
ᴀꜱᴛʀᴏ🐦‍🔥
Criticism built him🔥🔥🔥..He demolished every shits
English
5
744
4.2K
54.6K
Syed retweetledi
T.N. Raghu @ TNR
T.N. Raghu @ TNR@tnrags·
தமிழ்நாட்டு மக்களில் மூன்றில் ஒருவர் வாக்களித்த ஒரு கட்சியின் பெயரை சொல்ல மறுப்பது அவர்களை அவமதிக்கும் செயல். This is feudalism. திமுக, அதிமுக மட்டும்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? நியாயமில்லை @mkstalin சார்
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!

தமிழ்
158
801
2.7K
120.7K
Syed retweetledi
Variety
Variety@Variety·
Indian Film Star Vijay Stakes Claim to Form Government After Historic Tamil Nadu Election Win variety.com/2026/politics/…
English
76
2.9K
8.9K
132K