Sabitlenmiş Tweet
PT IT Wing
4.4K posts

PT IT Wing
@PTITWing
Official Twitter Page of Puthiya Tamilagam Party IT Wing புதிய தமிழகம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்
Tamil Nadu - India Katılım Ağustos 2020
12 Takip Edilen3.7K Takipçiler
PT IT Wing retweetledi

ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி,60 வருடங்களுக்கு பிறகு நடந்துள்ள அரசியல் மாற்றம்!
ஆட்சி அமைந்த 6 நாளில் 60 அழுத்தங்கள்!
விஜய் அவர்களின் அரசை, ‘பலகீனமான அரசு’ என்று உலகிற்கு காட்ட
பலர் தப்புக் கணக்குப் போட்டு காத்து கொண்டிருக்கிறார்கள்!
தமிழக முதல்வர் விஜய் அவர்கள் அதற்கு எவ்விதத்திலும்
வாய்ப்பளித்து விடக் கூடாது!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.05.2026
@CMOTamilnadu @TVKVijayHQ




தமிழ்
PT IT Wing retweetledi

717 மதுக்கடைகளை மட்டும் மூடினால் போதாது;
’மது வருமானத்தைக் கொண்டுதான் தமிழ்நாடு அரசு இயங்குகிறது’ என்கிற அவல நிலையை அடியோடு மாற்றிட வேண்டும்!
தனியார்களால் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் மதுபானக்கடைகளும், அரசு நடத்தும் 4765 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை திரு. விஜய் அவர்களின் அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும்!
.............................................
கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் புதிய ஆட்சி அமையும்போது, இதுபோல 500 முதல் 1000 கடைகளை மூட உத்தரவிடுவதும், சில மாதங்களிலேயே அவை வேறு வேறு வடிவங்களில் அதைவிட பன்மடங்கு கடைகள் பெருகுவதும் வாடிக்கையாகிவிட்டது.
அதுமட்டுமல்லாமல், டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விற்பனை அதிகரித்து, அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித் தரும் ”பகாசுர” நிறுவனமாக அது வளர்ந்துவிட்டது. கடந்த கால ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற அல்லது அவர்களின் பினாமிகளாகச் செயல்படும் 19 மதுபான உற்பத்தி ஆலை அதிபர்கள் கோடி கோடியாகக் கொள்ளையடித்து வருகின்றனர். பாட்டிலுக்குக் கூடுதலாகப் பத்து ரூபாய் வசூல், காலி பாட்டில் விற்பனை, வாகனங்கள் இயக்குதல், பார் டெண்டர்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி என ஆண்டுக்குக் குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் அரங்கேறி வருகிறது.
இதையெல்லாம் வெறும் ஊழலாக மட்டும் பார்க்கக் கூடாது; தமிழகத்தின் ஏழை எளிய உழைப்பாளி வர்க்க மக்களின் உழைப்பும், உதிரமும், உயிரும் இதில் அடங்கியுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தற்போது இயங்கி வரும் 4,765 கடைகளில் வெறும் 717 கடைகளை மூடுவதால் என்ன அடிப்படை மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது? பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூடுவதால் மட்டும் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.
ஏனெனில், ஏற்கனவே ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்குள்ளும், அருகிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய எண்ணற்ற மனமகிழ் மன்றங்கள் எனும் பெயரில் நவீன பார்களும் பெருகிவிட்டன. "மதுக்கடைகள் இங்கே இருக்கக் கூடாது, அங்கே இருக்கக் கூடாது என்பதல்ல; "தமிழகத்தில் எங்குமே மதுக்கடைகள் இருக்கக் கூடாது" என்பதே நமது வேண்டுகோள். அதுவே ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் விருப்பமுமாகும்.
மதுப் பழக்கத்திற்கு அடிமையாகிப் பெரியோர்கள் முதல் பள்ளி மாணவர்கள் வரை சீரழிந்து வருகின்றனர். இளைஞர்களின் உயிரிழப்புகளால் விதவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதும், சாதி-மத ரீதியான மோதல்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் மதுப் பழக்கத்தினால் தான் பெருமளவில் நடைபெறுகின்றன. எனவே, பெயரளவிற்காகவோ அல்லது ஒரு சடங்காகவோ 717 மதுக் கடைகளை மூடுவது எவ்விதப் பலனையும் தராது.
"மது வருமானம் இன்றித் தமிழ்நாடு அரசு இயங்காது" என்ற அவல நிலையை ஒழித்துக் கட்ட வேண்டும். உழைப்பாளி மக்களின் உழைப்பும், உயிரும் பறிக்கப்படுவதை தடுத்திட வேண்டும். நாகரிகமான, அமைதியான ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்க, காலம் தாழ்த்தாமல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமலாக்கிட முதல்வர் விஜய் அவர்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2026
@CMOTamilnadu

தமிழ்
PT IT Wing retweetledi

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
............................................................
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், துணைத் தலைவர் மு.ரவி சங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் எனது நீண்டகால நண்பர். 2011 முதல் 2016 வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், அவரும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மிகவும் இனிய நண்பரான அவர், இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2026

தமிழ்
PT IT Wing retweetledi

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர், துணைத் தலைவர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!
...............................................................
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், துணைத் தலைவர் மு.ரவி சங்கர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் எனது நீண்டகால நண்பர். 2011 முதல் 2016 வரை நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், அவரும் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மிகவும் இனிய நண்பரான அவர், இப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். அவரது தலைமையின் கீழ் தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.05.2026

தமிழ்

59 ஆண்டுகால திராவிட சாம்ராஜ்யத்தை வீழ்த்தி முதல்வராகப் பதவியேற்றுள்ள @CMOTamilnadu விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!
நீங்கள் பதவியேற்றதுமே, சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுப்பேன் என்று பேசியுள்ளது வரவேற்கத்தக்கது.
பெரும்பாலும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டின் பிறப்பிடமாக தென் தமிழகம் தொடர்வதையும், அதற்கு காரணம் தென் தமிழக காவல் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் முதல் காண்ஸ்டபிள்கள் வரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களாகவே இருப்பதுவுமே என்பதை புதிய தமிழகம் கட்சி கடந்த காலங்களில் சுட்டிக்காட்டி பேசியுள்ளதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
எனவே, தென் தமிழகத்தில் தொடர் கதையாகவே இருக்கும் ஜாதிய படுகொலைகள், ஆணவ கொலைகளைத் தடுத்து உங்கள் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படும் பொருட்டு, பெரும்பாலான தென் தமிழக காவல் நிலையங்கள் ஜாதிச் சங்கங்கள் போன்று செயல்படுவதை உடனடியாகக் கண்டறிந்து அவைகளைக் களையும் வேலையை துவங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி

தமிழ்
PT IT Wing retweetledi

ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவை அமைக்க முதல் கையெழுத்திட்ட தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், டாஸ்மாக் கடைகளையும் முழுமையாக மூடுவதற்கும் கையெழுத்திட்டிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.
அவருடைய அடுத்த உத்தரவு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
@TVKVijayHQ @CMOTamilnadu
தமிழ்
PT IT Wing retweetledi

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு.விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றதும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப் படை மற்றும் மகளிர் பாதுகாப்பிற்காகச் 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப் படையை உருவாக்கி முதல் கையெழுத்திட்டுள்ளார். இதனை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மனப்பூர்வமாக வரவேற்கிறோம்!
மேலும், தமிழ்நாட்டில் நெடுங்காலமாகப் புரையோடிப் போயிருக்கும் ஊழலைத் தடுக்கும் நடவடிக்கையாக, "நானும் தவறு செய்யமாட்டேன்; என்னோடு இருப்பவர்களையும் தவறு செய்யவிட மாட்டேன்" என வெளிப்படையாக பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியது பாராட்டுக்குரியது.
இந்த அரசு எப்படிப்பட்ட அரசாக இருக்கும் என்பதை தனது முதல் உரையிலேயே தெளிவுபடுத்திவிட்டார். அவருக்கு எமது பாராட்டுகள்; இவை அனைத்தும் நடைமுறைக்கு வர ஒவ்வொரு நாளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@TVKVijayHQ
தமிழ்
PT IT Wing retweetledi

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சராக ஆளுநர் அவர்களால் இன்று நியமனம் செய்யப்பட்டு, நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ள அவருக்கும், சக அமைச்சர்களுக்கும் புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ
தமிழ்
PT IT Wing retweetledi

விஜய் ஆட்சி அமைப்பதற்காக உறுதித்தன்மையற்றவர்களையும், இத்தருணத்தை பயன்படுத்தி Blackmail செய்து காரியம் சாதிக்க நினைக்கும் சந்தர்ப்பவாதிகளையும் சார்ந்து இருப்பது பேராபத்தாகவும், பல சமயங்களில் அவமானகரமாகவும் மாறக்கூடும்.
ஓரிரு இடங்களின் பற்றாக்குறையால் இன்று ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், மக்களின் பன்மடங்கு பேராதரவுடன் மீண்டும் நாளை எழ முடியும் என்ற நம்பிக்கையுடன் @TVKVijayHQ செயல்பட வேண்டும்.
தமிழ்
PT IT Wing retweetledi

"மக்களின் தீர்ப்பை ஏற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தாமல் அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்."
தேவையற்ற காலதாமதம் என்பது மறைமுகமாகக் குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் செயலாக முடிந்துவிடும். எனவே, ஆளுநர் அவர்கள் சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் விஜய் அவர்களை முதல்வராகப் பொறுப்பேற்கவும், அமைச்சரவையை அமைக்கவும் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ
தமிழ்
PT IT Wing retweetledi
PT IT Wing retweetledi

புதிய தமிழகம் கட்சியின் மே தின வாழ்த்து.!
உழைப்பின்றி உலகம் இயங்குவதில்லை. ஓரறிவு உயிரினங்கள் முதல் ஐந்தறிவு உயிரினங்கள் வரை அனைத்தும் உயிர் வாழவும், உணவுக்காக மட்டுமே உழைக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதன் தன் வயிற்றுப் பசிக்காக மட்டுமின்றி, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்காகவும் உழைக்கிறான்.
இருப்பினும், எல்லாக் காலகட்டங்களிலும் மனித வாழ்க்கை அவ்வாறு அமைந்ததில்லை. மிருகங்களைக் காட்டிலும் கொடுமையான வாழ்க்கையைப் பல காலம் அனுபவிக்க நேர்ந்தது. அதிலிருந்து விடுதலை பெற உழைப்பாளிகள் - மனித குலம் விடுதலை பெற பல நூறு ஆண்டுகள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.
1886-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில், பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே, '8 மணி நேர வேலை' என்பது உலகெங்கும் சாத்தியமானது. அந்த மகத்தான நாளையே 'மே தினம்' அல்லது 'உலக உழைப்பாளர் தினம்' எனக் கொண்டாடுகிறோம்.
இந்த மே தின நன்னாளில், தமிழகம் உட்பட உலகெங்கும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி
01.05.2026
தமிழ்

இனி வரும் காலங்களில் சர்வதேச அமைப்புகளை வைத்து மட்டுமே தமிழக தேர்தல்களை நடத்தவேண்டும்.
நேற்றுவரை அரசாங்கத்தின் கீழ் தாசில்தாராக இருப்பவரைக் கொண்டுவந்து தேர்தல் சமயத்தில் நீங்கள்தான் தேர்தல் நடத்தும் அலுவலர் என்றால் அவர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டாரா?
பண விநியோகத்தை பல்வேறு முறைகள் சுட்டிக் காட்டினாலும் அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சிறு நடவடிக்கையும் கூட எடுக்கவில்லை.
இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை.
- தலைவர் டாக்டர் அய்யா அவர்கள்


தமிழ்

பணம் படைத்தவர்கள், செல்வாக்கு உடையவர்கள் தேர்தலை நடத்திக் கொள்ளுங்கள், முடிவை மட்டும் நாங்கள் அறிவிக்கிறோம் என்பது போன்று உள்ளது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள்.
பண விநியோகத்தை தடுக்க சிறு முயற்சியும் கூட எடுக்காமல், மக்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பது என்பது வெட்கக்கேடானது.
- தலைவர் டாக்டர் அய்யா அவர்கள்

தமிழ்

