BW
245 posts





திருப்பூர் தெற்கு தொகுதி சிறுபான்மையின மக்கள் (குறிப்பாக இஸ்லாமிய மக்கள்) அதிகம் வசிக்கும் பகுதி. கிட்டத்தட்ட 35000 - 40,000 ஓட்டுகள் சிறுபான்மையினர் ஓட்டுகள். இன்னும் சொல்லப்போனால் இந்த தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய ஓட்டுகள் இவைதான். அதிமுக ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதியாக இருந்த போதும் இந்த தொகுதியில் NDA கூட்டணி சார்பில் #பிஜேபி களமிறக்கப்பட்டதால் #திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் தினேஷ்குமார் சுலபமாக வெற்றி பெற வாய்ப்பு உண்டு. பிஜேபி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள காடேஸ்வரா தங்கராஜ்-க்கு அவர் சார்ந்த அமைப்பான இந்து முன்னணியின் கடந்த கால அராஜக செயல்பாடுகளே அதிமுக பிஜேபியின் வாக்கு வங்கிக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும். இந்நிலையில் தோல்வியை தவிர்க்க அதேசமயம் திமுகவின் வெற்றியை தடுக்க எல்லா வகைகளிலும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது பிஜேபி தரப்பு. அதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணிக்கு உறுதியாக சென்று சேரும் என்று நம்பப்படுகிற இஸ்லாமிய மக்களின் வாக்குகளை குறிவைத்து அதனை நடிகர் விஜயின் தவெக-விற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். "எங்களுக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை, திமுகவிற்கு போட்டு விடாதீர்கள் அதற்கு பதிலாக நடிகர் விஜய்க்கு ஓட்டளியுங்கள்.." என்பது தான் அந்தப் பகுதியில் பிஜேபியினர் மறைமுகமாக செய்து கொண்டிருக்கும் பிரச்சாரம். #தவெக-வின் தற்போதைய தெற்கு தொகுதி வேட்பாளர் பாலமுருகன் ஏற்கனவே இந்து முன்னணி அமைப்போடும் பாஜகவோடும் நெருங்கிய தொடர்புடையவர் (பேரலையில் புகைப்பட ஆதாரத்துடன் பேசி இருக்கிறோம்) என்பதால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தவெக-வினர் மூலமாகவே பெட்டியை இறக்கி இஸ்லாமிய மக்களின் வாக்குகளை மடைமாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது பிஜேபி தரப்பு. என்ன நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள் தற்குறி ரசிகர்கள்.


























