G.K.Mani

15.2K posts

G.K.Mani banner
G.K.Mani

G.K.Mani

@PmkGkm

President - Pattali Makkal Katchi, MLA From Pennagaram constituency. Assembly committee Former Chairman

Katılım Mayıs 2014
1 Takip Edilen77.8K Takipçiler
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
ஏப்ரல் -7 உலகச் சுகாதார தினம்- ஜி.கே.மணி "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" "நோய் வருமுன் காப்போம் " உடல் நலம், மனநலம், சமூகநலம் ஆகிய மூன்றும் அடங்கியதே ஆரோக்கிய வாழ்வு. தற்போது சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளைகள் பாதிக்கும் நோய், புற்றுநோய் போன்றவை அதிகரித்து வருகிறது. முறையற்ற- ஒவ்வாத உணவு முறை, உடல் உழைப்பின்மை, உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், அதிக மன உளைச்சல், அவசரம், கோபம் போன்றவற்றால் நோய் பாதிப்பு அதிகம். இதில் விழிப்புணர்வும் அக்கரையும் தேவை. இது உலகச் சுகாதார நிறுவனத்தால் 1948ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 1950 முதல் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகச் சுகாதார தினத்தில் நாம் ஒவ்வொருவரும் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது. கருவறையிலிருந்து கல்லறை செல்லும் வரை மனித உயிர்காக்க சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கிறது. குடியரசுத் தலைவருக்கு கிடைக்கின்ற சுகாதார வசதி சாதாரண கிராமத்தில் வாழும் ஏழைக்கும் தரமான சுகாதார வசதி இலவசமாக செய்ய வேண்டும். பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்துடன் நோயற்று வாழ வேண்டும். நோய் வரும் முன் காக்க தக்க நடவடிக்கை வேண்டும். தரமான மருத்துவ வசதியை அரசு அனைவருக்கும் இலவசமாக வழங்க உறுதிசெய்ய வேண்டும்.
G.K.Mani tweet media
தமிழ்
0
0
3
204
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
பாட்டாளி மக்கள் கட்சியின் 2026 சட்டமன்ற பேரவை பொது தேர்தல் அறிக்கை 26.3.2026 இன்று திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வெளியிட்டபோது...
G.K.Mani tweet media
தமிழ்
1
5
23
907
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
திருப்பூர் பா.ம.க வி.எஸ்.கோவிந்தராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் - ஜி.கே.மணி திருப்பூர் பாட்டாளி மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.கோவிந்தராஜ் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் வன்னியர் சங்க காலத்திலிருந்து சங்கத்திலும் கட்சியிலும் கொள்கை பிடிப்போடு இருந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள் மீதும், என் மீதும் மிகுந்த மரியாதையுடன் இருப்பார். என்னுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவார். அவரை இழந்து மீளா துயரில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.கவினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.... அவர் மகன் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் தொலைபேசியில் ஆறுதல் கூறினேன்...
G.K.Mani tweet media
தமிழ்
0
2
9
744
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
மார்ச் 23 உலக வானிலை தினம் -ஜி.கே.மணி உலக வெப்ப மயமாதலால் தட்பவெப்ப நிலை மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள் அதிகரிப்பு, பேரிடர்களால் பாதிப்பு அதிகமாகும் நிலை உள்ளது. இயற்கை மாசுபடுவதை கட்டுப்படுத்தல் வேண்டும் அதற்கான விழிப்புணர்வும் தேவை. மரங்கள் நடுவோம், சுற்றுசூழல் பாதுகாப்போம். நிலம், நீர் காற்று மாசுபடாமல் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு அப்படியே விட்டுச் செல்வோம். அனைவரும் உறுதி ஏற்போம் .
G.K.Mani tweet media
தமிழ்
0
1
2
293
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
மார்ச் - 23 பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாள் வீரத் தியாகிகளுக்கு வீரவணக்கம்- ஜி.கே.மணி நமது நாட்டின் விடுதலைக்காக காந்தியடிகளின் சத்தியாக்கிரக போராட்டத்தில் இளம் வயதிலேயே தன்னை இணைத்துக்கொண்டவர் பகத்சிங், பின்னர் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறும் போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். இளைஞர்கள் மத்தியில் போராட்டவேட்கையை தூண்டிவிட்டு களம் காணச் செய்த மாபெரும் புரட்சியாளர் பகத்சிங். விவேகானந்தரைப் போல இளைஞர்களுக்கு அவர் ஊட்டிய கருத்துக்கள், புரட்சி சிந்தனைகள் இன்றும் பொருந்துவதாக உள்ளது. தனது இளம் வயதிலேயே நாட்டுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் ஆங்கிலேயர் சிறையில் தூக்கிலிட்டபோது தூக்குக் கயிற்றையும் வீர நடைப்போட்டு "இன்குலாப் ஜிந்தாபத் " (புரட்சி வெல்லட்டும்) என்று வீர முழக்கம் மிட்டு தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிகொண்டு தன் இன்னுயிர் நீத்த தளராத மனம் படைத்த புரட்சியாளர். சிறையில் பகத்சிங் இருந்த 2 ஆண்டுகளில் 56 நூல்களை வாசித்து, சுமார் 404 பக்கங்களுக்கு குறிப்புகள் எடுத்துள்ளார். பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு சுமார் 45 நாட்களுக்கு முன்பு இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில், “நான் ஒரு பயங்கரவாதியல்ல. நான் ஒரு புரட்சியாளன். நீண்ட திட்டத்தை, தீர்மானகரமான சிந்தனைகளைப் பெற்றிருக்கும் ஒரு புரட்சியாளன். எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கர வாதியாக இருந்ததில்லை” என்று பிரகடனம் செய்தார். ‘இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியப்போவதும் இல்லை. மனிதனை, மனிதன் சுரண்டும் சமுக அமைப்பு மாறும் வரை இப் போராட்டம் தொடரும்’ என்பதே அவர்களின் போராட்ட பார்வை. பகத்சிங், சுகதேவ், ராஜகுருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்! அவர் விதைத்து சென்ற கருத்தை மனதில் நிலைநிறுத்துவோம் நாட்டுப்பற்றை வளர்ப்போம்.
G.K.Mani tweet media
தமிழ்
0
1
6
288
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
மார்ச் - 22, இன்று உலக தண்ணீர் தினம் - ஜி.கே.மணி நீர் இன்றி அமையாது உலகு, வான் நோக்கு வாழும் உலகு, தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டும். உயிர் வாழ தண்ணீர் வேண்டும். விவசாயம், கால்நடைகள், தொழில் உள்ளிட்ட அனைத்திற்கும் தண்ணீர் வேண்டும். 1993 மார்ச் 22 முதல் உலகம் முழுவதும் தண்ணீர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. கால் நூற்றாண்டு கடைப்பிடித்தும் தமிழ் நாட்டில் நீர் வளத்தை காப்பது, நீரை சேமித்து பெருக்குவது, முறையாக பயன்படுத்துவது குறித்து திட்டம் வேண்டும். அப்பா காலத்தில் கிணற்றில் பார்த்தோம் தண்ணீரை, மகன் காலத்தில் விற்பனை பாட்டிலில் பார்க்கிறோம் தண்ணீரை. கங்கை- காவிரி இணைப்புத் திட்டம் கானல் நீராகிப்போனது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேறவில்லை. ஆந்திர மாநிலத்தில் 5 ஆண்டில் ரூபாய் ஒரு இலட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம் நிறை வேற்றப்பட்டது. கர்நாடகாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் "காவிரி ஜல நிகாம்" என்ற பெருந்திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட அணைத்து மாநிலங்களும் நீர் வளத்தை பெருக்கும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தமிழ் நாட்டில் பாசனத் திட்டங்களுக்கு நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு முன்னுரிமை திட்டம் வேண்டும். பெரிய பாசன அணைகள் 17, நீர்த்தேக்கங்கள் 59, ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் 39,629, பாசனக் கால்வாய்கள் 2219 எல்லாம் உள்ளன.. மேட்டூர் அணை, பஞ்சப்பள்ளி அணை, வைகை அணை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகள், சிறு நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும். வறட்சி பாதித்துள்ள நேரத்தில் வறட்சி நிவாரண நிதி, தூர் வாற தேவையான அளவு நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும். தமிழக ஆறுகளில், ஓடைகளில் தடுப்பணைகள் கட்டுவோம் ஏரி, குளம், கண்மாய், ஊரணி, கால்வாய் ஆழப்படுத்துவோம். புதிதாய் உருவாக்குவோம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம், நீர் மாசுபடாமல் பாதுகாப்போம், பாதுகாக்கப்பட்ட குடிநீர்க்கு வழிவகை செய்வோம். பாசனத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையை நிறைவு செய்வோம். தண்ணீர் விழிப்புணர்வு தேவை. மழைநீர் ஒரு சொட்டு வீணாகாமல் சேமிப்போம்.பாதுகாப்போம்! பயன்படுத்துவோம்! அனைவரும் உறுதி ஏற்போம்.
G.K.Mani tweet media
தமிழ்
0
1
6
263
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
இனிய இரமலான் வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி புனித மாதமான இரலமான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு கடைப்பிடித்து கொண்டாடி மகிழும் நாளில் இனிய இரமலான் நல்வாழ்த்துக்கள். பசி, பட்டினியோடு இருக்கும் ஏழைகளுக்கு உணவளித்தல், தனது வருவாயில் 2% பிறருக்கு தானம் செய்தல் உள்ளிட்ட ஈகை, இரக்கம், அன்பு, பிறருக்கு கெடுதல் செய்யாமை, பொய் பேசாமை, நல்லிணக்கம், அமைதி போன்ற மனித வாழ்வின் நன்னெறிகளை போதிக்கும் நபிகள் நாயகம் வழிகளை பின்பற்றி வன்முறை, தீவிரவாதம் இல்லாமல், அமைதி, வளர்ச்சி, ஒற்றுமை, அனைவரிடத்தும் சகோதர நல்லிணக்கம், மனித நேயம் நிலைத்து மனித குலம் வளம் பெருகவும் உறுதி ஏற்போம். மகிழ்ச்சியும் இன்பமும் பெருகி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ இனிய இரமலான் வாழ்த்துக்கள்.
G.K.Mani tweet media
தமிழ்
0
1
5
193
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
மார்ச் 21 - உலக வன தினம் - ஜி.கே.மணி வனம் காக்க உறுதி ஏற்போம் வனம் செழித்தால் வளம் பெரும். மரம் வளர்ந்தால் மழை பொழியும். இயற்கையை காத்தால் இன்பம் பெருகும். காடுகளில் புல், புண்டு, செடி, கொடி, மரம், மலர்கள், காய்கள், கனிகள், பூச்சி, வண்டுகள், உயிரினங்கள் மேடு, பள்ளம், ஓடை, ஆறுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது வனம். காடுகள் அழிவதால் வெப்பம் அதிகம், சுற்றுச்சூழல், ஒசோன் படலத்தில் ஒட்டை பாதிப்பு அதிகம். வனத்தின் மரங்கள் கரியமிலவாயுவை எடுத்துக் கொண்டு, சுவாசித்து நாம் உயிர் வாழத்தேவையான ஆக்சிஜனை நமக்கு கொடுக்கிறது. மரங்களால் மழை பெய்கிறது. வனம் காத்து வளம் சேர்ப்போம் மரம் வளர்த்து மழை பெறுவோம் இயற்கைநேசித்து இன்பமாய் வாழ்வோம் காடுகள் அழியாமல் காப்போம் வனம் காக்க உறுதி ஏற்போம்.
G.K.Mani tweet media
தமிழ்
0
1
6
182
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
மார்ச் 21- உலக பொம்மலாட்ட தினம் - ஜி.கே.மணி நமது முன்னோர்கள் இராமாயணம், மகாபாரதம், நீதிக்கதைகள் போன்றவற்றை "கூத்து " நாடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தினர். கூத்தின் ஒரு பிரிவு பொம்மலாட்டம் கலை. இது கட்டை பொம்மைகள், தோல் பொம்மைகள் வாயிலாகவும் நாடகங்களை அரங்கேற்றினர். சமீபகாலம் வரை எங்கும் கிராமப்புறங்களில் பரவியிருந்தது தற்பாது அங்கொன்றும் இங்கொன்றும் ஏதாவது ஒன்றுமாக நடைபெற்று வருகிறது. இதை பொழுதுபோக்கு அம்சமாகவும் கடைபிடித்தனர். இது தமிழ்நாட்டில் வேரூன்றி வளர்ந்து பரவி தென்னிந்தியாவிலும் பின்னர் இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் பரவியது. நவீன கால வளர்ச்சிக்கேற்ப கூத்து மற்றும் பொம்மலாட்டங்களிலிருந்துதான் மேடை நாடகங்கள், திரைப்படங்கள் என வளர்ந்ன. நாமும் இந்நாளில் பொம்மலாட்டத்தை நினைவு கூர்வோம். பெருமைகொள்வோம்!
G.K.Mani tweet media
தமிழ்
0
2
4
195
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
உலக கவிதை தினம் இன்று மார்ச் 21 - ஜி.கே.மணி மனிதனை விரைந்து ஈர்க்கிற சக்தி கவிதைக்கு உண்டு. நமது இலக்கியங்களை பாதுகாக்க, மேலும் முன்னெடுத்துச் செல்ல கவிதை பேருதவியாக உள்ளது. நாடு சுதந்திரத்திற்கு புரட்சிகளுக்கு மனிதர்களை ஊக்கப்படுத்த, தெளிவுபடுத்த, நெறிப்படுத்த போன்ற பல்வேறு கோணங்களில் வித்தாக அமைகிறது. 1 3/4 வரி கொண்டுள்ள திருக்குறள் உலகப் பொதுமறைமனித வாழ்வியலின் பெரும் தத்துவமாக அமைந்துள்ளது. மனதை ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து சிந்தித்தால் கவிதை வெளிப்படும். அறிஞர்கள், படித்தவர், படிக்காதவர், கிராமப்புறத்து படிக்காத கூலிவேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட எல்லோருமே கவிதைமழை பொழியச் செய்ய முடியும் என்பதற்கு ஏராளமானச் சான்றுகள் நம்மிடையே . எப்பொருள் குறித்தும் கவிதை உருவாக்க முடியும் கவிதைகளை போற்றுவோம்! படிப்போம் ! கவிதை வடிப்போம்!
G.K.Mani tweet media
தமிழ்
0
2
3
150
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
திருவள்ளூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் டில்லி பாபு மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி, திருவள்ளூர் மாவட்ட முன்னாள் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் டில்லி பாபு மறைவுற்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. டெல்லி பாபு கட்சியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். அவர் எல்லோரிடத்திலும் இணக்கமாகவும், பாசத்தோடும் பழகி வரும் நல்ல பண்பாளர். மருத்துவர் அய்யா அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர். என்னை அடிக்கடி சந்தித்து பேசுபவர், தொலைபேசியில் பேசுவார், அவரது குடும்பத்தினரும் என்னிடம் தொலைபேசியில் பேசுவார்கள். அவர் மறைவு பாட்டாளி மக்கள் கட்சிக்கும், அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து மீளா துயரில் வாடும் அவரது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்....
G.K.Mani tweet media
தமிழ்
0
2
5
390
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
இன்று மார்ச் - 20 உலக மகிழ்ச்சி தினம் - ஜி.கே.மணி மனித வாழ்வின் இலட்சியம் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். மகிழ்ச்சியின் வெளித்தோற்றம் முக மலர்ச்சி, சிறிப்பு . வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொல்வதுண்டு . அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். இன்று மனிதன் பொருள் சேர்க்கவும் பதவி ஆசைக்கும் நிம்மதியை இழந்து ஓடிக்கொண்டிருக்கிற நிலை உள்ளது. மன அழுத்தம், நோய், பயம், சோகம்,வெறுப்பு, கோபம், பகை, பொறாமை போன்றவற்றால் மன அமைதி கெட்டு மகிழ்ச்சியற்ற நிலையே உள்ளது. ஒவ்வொருவரும் மனதை பண்படுத்தி அன்பு பொறுமை, சகோதர நல்லிணக்கம், மனித நேயம் வளர்ந்து மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும். வறுமையையும் நோயையும் ஒழித்தால் மகிழ்ச்சி பெருகும்! மனதை தேற்றி மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்!
G.K.Mani tweet media
தமிழ்
0
1
4
176
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
யுகாதி திருநாள் வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி தெலுங்கு, கன்னட ஆண்டு பிறப்பான இன்று இதயங்கனிந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடன் வாழும் தெலுங்கு, கன்னடம் பேசும் நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அண்டை மாநிலங்களின் சகோதர, சகோதிகள் அனைவருக்கும் சகோதர நல்லிணக்கம் வளர இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
G.K.Mani tweet media
தமிழ்
1
0
5
152
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
தேசிய தடுப்பூசி நாள் - ஜி.கே.மணி குழந்தைகள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும். அதேபோல் வயதானவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.இதை அனைவரும் கடைப்பிடிப்போம். போலியோ இல்லாத நாடு போல், நிமோனியா இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்.
G.K.Mani tweet media
தமிழ்
0
2
8
187
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
காரல் மார்க்ஸ் நினைவு நாள் இன்று மார்ச் 14 - ஜி.கே.மணி காரல் மார்க்ஸ் பொதுவுடமை தத்துவத்தின் முன்னோடி. சீரிய புரட்சியாளர். தலைசிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர். பா.ம.கவின் கொள்கை முன்னோடி. காரல் மார்க்ஸ் நினைவை போற்றுவோம்....
G.K.Mani tweet media
தமிழ்
0
2
5
198
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்ற மேதகு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தேன். ஆளுநர் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பணி சிறக்க வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி
G.K.Mani tweet media
தமிழ்
0
3
8
213
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
தினத்தந்தி குழுமத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் துணைவியார் மாலதி சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தினத்தந்தி குழுமத்தினருக்கும், அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ஜி.கே.மணி தினத்தந்தி நாளேட்டை தொடங்கியவர், உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என வாழ்ந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மகன் தினத்தந்தி நாளேட்டை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றவர்,தந்தி தொலைக்காட்சியை மேலோங்கச் செய்தவர் எல்லோரிடத்திலும் உயர்ந்த பண்பையும் பாராட்டையும் பெற்ற அமரர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மனைவி மாலதி சிவந்தி ஆதித்தன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தினத்தந்தி குழுமத்தினருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
G.K.Mani tweet media
தமிழ்
0
1
2
281
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
காந்தியடிகளின் மார்ச் -12 உப்புச் சத்தியாக்கிரகப் போரட்டம் நினைவில் போற்றுவோம் - ஜி.கே.மணி இந்திய விடுதலைக்கான மகாத்மா காந்தியடிகளின் மார்ச் 12, 1930ல் உப்புச் சத்தியாக்கிரகப் போரட்டம் தண்டி கடற்கரையில் தொடங்கியதை நினைவிற் கொள்வோம். போற்றுவோம்! இந்திய விடுதலைப் போரட்டங்களை எண்ணி பார்போம். போற்றுவோம்! பெருமைகொள்வோம். ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தின் மூலம் நமது பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்குரிமை, சொத்துரிமை, இந்தியாவில் எங்கும் சென்று வாழும் உரிமை உள்ளிட்ட உரிமைகள் மூலம் நாம் உயர்ந்து நிற்பது பெருமை!
G.K.Mani tweet media
தமிழ்
1
2
4
168
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
மார்ச் - 11 இன்று 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு துவக்கம், +2 தேர்வு துவங்கிவிட்டது மாணவச் செல்வங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற வாழ்த்துக்கள் - ஜி.கே.மணி இன்று 11.3.2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி 6.4.2026 வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் நாளைய உயர்கல்விக்கும் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கும் அடித்தளமாக அமைகிறது. ஒவ்வொரு குழந்தையின் பெற்றோர்களும் ஆவலுடன் கண்கானித்து காத்து வருகிறார்கள். மாணவ - மாணவிகள் கண் விழித்து பெரும் அக்கரையுடன் படித்து வருகிறார்கள். மாணவ - மாணவிகளின் கனவு நனவாகக் கூடியவகையிலும் பெற்றோர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வகையிலும் மாணவச் செல்வங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்...
G.K.Mani tweet media
தமிழ்
0
1
9
196
G.K.Mani
G.K.Mani@PmkGkm·
பா.ம.க மூத்த நிர்வாகி பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கோடுப்பட்டி ராஜமாணிக்கம் தந்தை மாரிமுத்து மறைவுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியபோது... - ஜி.கே.மணி
G.K.Mani tweet mediaG.K.Mani tweet mediaG.K.Mani tweet media
தமிழ்
1
2
9
360