
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் எனக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொண்டு, நமது தொகுதியின் தேவைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டு, அவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம் என உறுதி அளித்த மாண்புமிகு துணை முதலமைச்சர், அன்புச் சகோதரர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமை வழங்கிய அந்த வாக்குறுதிகளை சிரமேற்கொண்டு நிறைவேற்ற, உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் முன்னின்று உழைப்பேன் என உறுதி அளிக்கிறேன். நமது 'திராவிட மாடல்' அரசின் திட்டங்கள் ஒரத்தநாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடையத் துணை நிற்பேன்.
ஒரத்தநாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக, உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்திற்கு வழங்கி, மாபெரும் வெற்றியைத் தேடித் தருமாறு அன்புடன் கோருகிறேன்!
சொன்னதைச் செய்வோம்.. செய்வதைச் சொல்வோம்! ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்























