Rajesh Kumar

1.6K posts

Rajesh Kumar banner
Rajesh Kumar

Rajesh Kumar

@RajeshKumarSMLA

Leader - Congress Legislative Party- Tamil Nadu, MLA Killiyoor Assembly Constituency,Ex- DCC President - Kanyakumari West.

Kanyakumari Katılım Mayıs 2024
83 Takip Edilen264 Takipçiler
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
அனைவருக்கும் குருத்தோலை தின வாழ்த்துக்கள். இந்த புனித வாரம் உங்களுக்கு சமாதானமும் ஆசீர்வாதமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
Rajesh Kumar tweet media
தமிழ்
0
0
2
21
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான தீரர். எஸ்.சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு நாளான இன்று அவர்களுக்கு எங்களது நினைவஞ்சலி.
Rajesh Kumar tweet media
தமிழ்
0
2
5
77
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
பாசமிகு காங்கிரஸ் உறவுகளே, நம் காங்கிரஸ் பேரியக்கம் சவால்களை சந்தித்த நேரங்களில் தன்னலமின்றி தலைமை ஏற்று வழிநடத்திய தியாகத் தலைவி, அன்னை சோனியா காந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது நம் அனைவரையும் கவலையடையச் செய்கிறது. அவர்கள் விரைவில் முழு நலத்துடன் குணமடைந்து, நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட இறைவனை நாம் அனைவரும் மனமார்ந்த பிரார்த்தனை செய்வோம். பேரியக்கத் தோழர்கள், நம் அருகிலுள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தி, அவர்கள் பூரணநலம் பெற்றிட வேண்டிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், S. ராஜேஷ்குமார் MLA தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி , தமிழ்நாடு
தமிழ்
1
8
28
2.5K
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையம் குறித்து பலமுறை கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் இந்த கடிதம் உள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில் பாஜக கட்சியின் முத்திரை.
Rajesh Kumar tweet media
தமிழ்
0
2
4
71
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
இரங்கல் செய்தி ரோமன் கத்தோலிக்க குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயரான மேதகு ஆயர் ஜெறோம்தாஸ் வறுவேல் SDB, அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். மேதகு ஆயர் ஜெறோம்தாஸ் வறுவேல் SDB, அவர்கள் 21 -10- 1951 ஆண்டு கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலப்பள்ளம் பேரூராட்சி, படுவூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் இறை பணியில் ஆர்வம் கொண்டு குருத்துவம் பயின்று, திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அவர்களால் 1985 - ம் ஆண்டு, ஜூன் 2 - ம் நாள் குருத்துவத் திருநிலைப்பாடுத்தப்பட்டு சலேசிய சபைக் குருவாகத் பணியாற்றினார். பின்னர் 1986 - ல் இந்தியா திரும்பிய அருட்பணி.ஜெரோம் தாஸ் அவர்கள் பல நிலைகளிலும் இடங்களிலும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக அவர் பழங்குடி மக்களின் கல்வி, அவர்களின் முன்னேற்றம் மற்றும் இறைபணிகளிலும் தீவிரமாக பணிபுரிந்தார். கடந்த 22-12-2014 அன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக ஜெரோம் தாஸ் வறுவேல் அவர்களை நியமித்தார். இவர் குழித்துறை மறைமாவட்டத்தின் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு முழு மூச்சாக பாடுபட்டார். அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடிய இனிய பண்பாளர், மனிதநேயர். அவரது மறைவு குழித்துறை மறைமாவட்டத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், குழித்துறை மறைமாவட்டத்தின் இறை மக்கள், குழித்துறை மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் ஆகியோருக்கு எனது அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் துயரத்தில் பங்கேற்கும் செ. ராஜேஷ் குமார் MLA கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி & தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
1
2
39
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
இன்று சென்னை, சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, MLA அவர்களின் தலைமையில், எனத முன்னிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. Er. ராஜா அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். திரு. Er. ராஜா அவர்கள் ஒரு சமூக செயற்பாட்டாளர் மற்றும் பொறியாளர் ஆவார். 2001 முதல் 2015 வரை அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியுள்ளார். Intel மற்றும் Dell போன்ற நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். NASA திட்டங்களிலும் பணிபுரிந்துள்ளார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஊர்வசி செ. அமிர்தராஜ், துணைத் தலைவர் திரு. சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் திரு. ராம் மோகன், மாநில நிர்வாகி திரு. டி. என். அசோகன் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு. சூரிய பிரகாஷ், இலக்கியப் பிரிவு தலைவர் திரு. பி. எஸ். புத்தன், மாவட்ட தலைவர் திரு. டில்லி பாபு, ஆகியோர் கலந்து கொண்டனர்.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
1
8
52
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
2026 - ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K .செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில தேர்தல் குழு (Pradesh Election Committee) கூட்டத்தில் பங்கேற்றேன். இக்கூட்டமானது அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு Ex MP, திரு. கிருஷ்ணசாமி Ex MP, திரு. திருநாவுக்கரசர் Ex MP ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
1
5
59
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளே, தியாகமும் தன்னடக்கமும் நிறைந்த நோன்பு வழிபாட்டின் முடிவில் வரும் இந்த புனித நாளில், உங்கள் இல்லங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாலும், நலன்களாலும், வளங்களாலும் நிரம்பிட என் இதயம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்கள்.
Rajesh Kumar tweet media
தமிழ்
1
1
6
161
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளே, தியாகமும் தன்னடக்கமும் நிறைந்த நோன்பு வழிபாட்டின் முடிவில் வரும் இந்த புனித நாளில், உங்கள் இல்லங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாலும், நலன்களாலும், வளங்களாலும் நிரம்பிட என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
Rajesh Kumar tweet media
தமிழ்
0
1
5
48
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
சென்னை, சத்தியமூர்த்திபவனில் வரக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் தேர்தல் வாக்குறுதி குறித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் திரு.கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி., அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இதில் நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன். Indian National Congress Rahul Gandhi Priyanka Gandhi Vadra K.C. Venugopal Girish Chodankar Suraj Hegde Nivedith Alva Congress Sandesh
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
1
1
4
32
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
மறைந்த இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன் அவர்களின் 94-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகைMLA அவர்கள் தலைமையில் இன்று (19.3.2026)சென்னை, சத்தியமூர்த்தி பவனில், அவரது திருவுருவப் படத்திற்கு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
1
1
3
36
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
வாழ்த்துச் செய்தி: தமிழ்மொழியின் பெருமையையும், மக்கள் அரசியலின் உயரிய பண்புகளையும் தன் வாழ்நாளில் நடைமுறையாகக் காட்டிய தலைசிறந்த அரசியல் மற்றும் இலக்கியப் போராளி குமரி அனந்தன் அவர்களின் 94வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை ஆழ்ந்த மரியாதையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். அவர் இன்று உடலால் நம்மிடையே இல்லாவிட்டாலும், அவர் நடந்த பாதை இன்னும் அரசியலுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது. தமிழுக்காகவும், சமூக நீதி மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் அவர் மேற்கொண்ட நடைபயணங்கள்—அவை வெறும் பயணங்கள் அல்ல; மக்கள் மனங்களில் விழிப்புணர்வு விதைத்த வரலாற்றுச் சுவடுகள்.குமரியில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போன்று, குமரி அனந்தன் அவர்களின் புகழும் தமிழர் இதயங்களில் என்றென்றும் உயர்ந்து நிலைத்திருக்க வேண்டும். காமராஜர் அவர்களுடன் இணைந்து காங்கிரஸ் இயக்கத்தில் பணியாற்றிய அவர், அதிகார அரசியலை விட மக்கள் சேவையையே அரசியலின் மையமாகக் கொண்டார். எளிமை, நேர்மை, தன்னலமற்ற அர்ப்பணிப்பு—இவை அனைத்தையும் தனது வாழ்வால் உணர்த்திய முன்னோடி. இன்றைய அரசியல் சூழலில், அவரது சிந்தனைகளும் செயல்பாடுகளும் நமக்கு வழிகாட்டும் ஒளிக்கோப்பையாகத் திகழ்கின்றன. அரசியல் என்பது பதவிக்கான போட்டியல்ல; அது மக்களின் நலனுக்கான புனிதப் பொறுப்பு என்பதை அவர் தனது வாழ்க்கையால் நிரூபித்தார். அவரது பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளல்ல; அது அரசியல் பொறுப்புணர்வையும், தமிழ் பற்றையும் மீண்டும் நம் உள்ளங்களில் எழுப்பும் ஒரு நினைவு நாள். அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.
Rajesh Kumar tweet media
தமிழ்
0
1
5
25
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
வசந்த காலத்தின் முதல் நாளை “யுகாதி” எனக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையின் புதுப்பிறப்பை குறிக்கும் இந்நாள், மனித வாழ்விலும் புதிய நம்பிக்கைகள், புதிய முயற்சிகள் மற்றும் புதிய உயரங்களை நோக்கிச் செல்லும் ஒரு தொடக்கமாக திகழ்கிறது. யுகாதி திருநாள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வளமும், மகிழ்ச்சியும், முன்னேற்றமும் தரட்டும் என மனமார வாழ்த்துகிறேன். இந்தியாவின் பல்வகை மொழி, பண்பாடு, மரபுகள் அனைத்தும் நம் நாட்டின் பெருமையாகும். தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்கு 2008 ஆம் ஆண்டு ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கி கௌரவித்தது, மொழி சமத்துவத்தின் முக்கியமான முன்னுதாரணமாகும். ஆனால், அந்த மரியாதைக்கு ஏற்ப இம்மொழிகளின் வளர்ச்சிக்கான நிதி மற்றும் ஆதரவில் ஒன்றிய அரசு சமநிலை காட்டாமல் இருப்பது கவலைக்குரியது. நாம் அனைவரும் மொழி, மதம், சாதி வேறுபாடுகளைத் தாண்டி “இந்தியர்” என்ற ஒரே உணர்வில் ஒன்றுபட்டு வாழ வேண்டிய அவசியம் இன்று அதிகரித்துள்ளது. சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை நிலைநிறுத்தும் பாதையில் நாம் ஒன்றிணைந்து முன்னேறுவோம். இந்த யுகாதி திருநாளில், தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் வாழ்க்கையில் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
Rajesh Kumar tweet media
தமிழ்
0
3
6
52
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
இன்று (17.03.2026) சென்னை, சத்தியமூர்த்திபவனில் வரக்கூடிய தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகைMLA அவர்கள் தலைமையில் விளம்பரம் மற்றும் ஊடக மேலாண்மைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் திரு.விஜய வசந்த் எம்.பி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கொண்டு சிறப்பித்தேன். Indian National Congress Rahul Gandhi Priyanka Gandhi Vadra K.C. Venugopal Priyanka Gandhi Vadra Suraj Hegde Nivedith Alva Congress Sandesh
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
0
4
30
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் பிரச்சாரக் குழு (Campaign Committee) கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு . K . செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில், அக்குழுவின் தலைவர் Dr .A. செல்லக்குமார் Ex.MP , அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு K V தங்கபாலு Ex MP ஆகியோர் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தேன்.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
1
3
26
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
வாவறை ஊராட்சிக்குட்பட்ட, குளிச்யாவிளை முதல் இஞ்சிபறம்பு சாலை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து ரூ. 8.00 - லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம் அமைத்து சீரமைக்கப்பட்ட சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
1
2
29
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
இரவிப்புதூர்கடை - கருங்கல் சாலையில் எட்டணி முதல் கருங்கல் வரை சாலையை ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் இரு வழித்தடமாக விரிவாக்கம் செய்து சாலை சீரமைத்தல் பணியை தொடங்கி வைத்தேன்.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
0
3
29
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
ஏழை எளிய மக்களின் அடுப்பை அணைக்கும் மோடி அரசே... அதிகார மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்! ✊ ​சமையல் எரிவாயு விலையை விண்ணை முட்டச் செய்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, இல்லத்தரசிகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து... ​இன்று கருங்கல் சந்திப்பில் இந்திய (INDIA) கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 📢🔥 ​மக்களின் உரிமைகளை மீட்கும் வரை எமது போர்க்குரல் ஓயாது!
தமிழ்
0
2
4
16
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்குச் சேவை செய்வதே எனது மகத்தான பணியாகும். மக்கள் பணியில் நான் என்றும் அர்ப்பணிப்போடு ஈடுபடுவேன்! 🤝✨ "நிழலாய் உங்களோடு... நிஜமாய் உழைப்போடு! ✨💪" என்றும் உங்கள் சேவையில், Adv. S. ராஜேஷ்குமார், MLA
தமிழ்
0
0
2
21
Rajesh Kumar
Rajesh Kumar@RajeshKumarSMLA·
பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட தேங்காப்பட்டணம் சல்மான் வீட்டு தெரு சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்திலிருந்து ரூ. 4.50- லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இன்டர்லாக் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்.
Rajesh Kumar tweet mediaRajesh Kumar tweet mediaRajesh Kumar tweet media
தமிழ்
0
1
4
25