இதய நிலா

10.5K posts

இதய நிலா banner
இதய நிலா

இதய நிலா

@SNaffiya77100

கவிதை எழுத பிடிக்கும். சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்று ஆசை.

Katılım Ekim 2025
462 Takip Edilen555 Takipçiler
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
தொலைந்து விட்ட இதயத்துக்கு தூது சொன்ன காதல் தடம் மாறி போனதால் வாழ்க்கை நிலை மாறி போனது.
இதய நிலா tweet media
தமிழ்
0
0
2
44
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
பரிந்துரை செய்யப்பட்ட உன் காதலுக்கு முன்மொழிவு செய்த விழிகள் வழிமொழிவதற்கு காலம் இல்லை.
இதய நிலா tweet media
தமிழ்
0
0
2
48
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
நீ பேசும் போது நான் மௌனமானேன். நான் பேச நினைக்கும் போது நீ..... ஊமையானாய். நடப்பது நடக்கட்டும் என்றே...... நான் விலகி சென்றேன். உன்னை நினைத்து உள்ளத்தில் ஆசை வளர்த்த நாட்கள் மனதில் இற்றுப்போனது. சமாதானம் செய்ய அழுவதா உன் மேல் நான் கொண்ட அன்பு உண்மையானது
இதய நிலா tweet media
தமிழ்
2
4
7
240
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
இதயமே........ நீ விரியாத l சிறகுகளைக்கொண்டு பறக்க நினைக்காதே : சிறகுகள் இடம் பெயர்வதில்லை..... இரவல் கால்கள் எதற்கு? உன்னை நீ இழக்கும் அபாயம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உதவாத உறவுக்கு ஊழியம் எதற்கு உன்னக்குள் அது உதவாமல் போகலாம். !
இதய நிலா tweet media
தமிழ்
0
1
1
79
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
மாலை சூட மணவறைக்கு போனேன். மணமகனை காணவில்லை. மந்திரம் ஓதும் குருக்கள் மாயமானான் தட்டோடு. மயக்கம் போட்ட தாயும் மயக்கத்துடனே போய் சேர்ந்தாள். பாடையில் உடலை வைக்க மாரடைப்பால் அப்பன் சாவு. மணமேடையே மாறி துக்க மேடையானது. நெற்றியில் பொட்டு ஏறுமுன்னே தாயவள் பொட்டிழந்தாள். நான் சாகவா
இதய நிலா tweet media
தமிழ்
0
1
2
101
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
இறைவன் படைத்தான் என்னை பிழையாக.. நான் படைத்தேன் கவிதைகள் பிழையாக. ... உறவுபிழையானதால் உலகம் பிழையானது. ஜனனமும் பிழையானதால் மரணமும் பிழையானது. மனதில் எண்ணோட்டம் வாழ்க்கையே போராட்டம். நிலையில்லா வாழ்க்கையில் துன்பமே தேரோட்டம். கண்ணீரை விலை பேசி கயவனின் காலோட்டம்
இதய நிலா tweet media
தமிழ்
0
3
4
287
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
இரவின் மடியில் உறங்கிய உலகம், கதிரவன் வரவால் விழித்தெழுந்தது! நேற்று நடந்தவை கனவாய் கரைய, இன்று மலர்ந்தது புதியதோர் வாய்ப்பு! முன்னேறிச் செல்வோம் நம்பிக்கையுடன், முயற்சியால் வெல்வோம் இந்த நாளை! மலர்ந்த முகத்தோடு தொடங்குங்கள்
இதய நிலா tweet media
தமிழ்
0
1
2
120
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
நிச்சயமாக... சரியான சொற்களைத் தேடி நானும் தான் தோற்றுப் போகிறேன்! அகராதியில் இல்லாத ஆயிரம் அர்த்தங்கள் உன் உளறல் கவிதைக்குள் ஒளிந்திருக்கின்றன. உலகப் பேரழகுகளை எல்லாம் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிடு... என் விழிகளுக்கு உன் அன்பைத் தவிர வேறெந்த அழகும் பிடிப்பதில்லை!
இதய நிலா tweet media
தமிழ்
0
1
2
115
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
உருகும் நெஞ்சம் எனது? உன் கற்பனைக்கு எட்டாத மலர். வானில் நிலவு வலம் வரலாம். அது வானுக்கு சொந்தம் ஆகாதே! உன் கவிதை அழகு தான். கற்பனையும் அதிகம் தான். மலை இடை பிறகும் அருவி மலைக்கு சொந்தம் இல்லை. நீ சங்கத் தமிழில் கவி படைப்பது இலக்கியத்தில் சிறப்பு தான்.
இதய நிலா tweet media
தமிழ்
0
1
5
169
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
தவிர்க்கிறேன் நான் ரசிக்கிறாய் நீ ஓவ்வொரு தடவையும் சந்திக்கிற போதும் ஒத்திகை பார்க்கிறாய். புரிந்து கொள்ள ஏன் மாட்டேன்கிறாய்?
இதய நிலா tweet media
தமிழ்
0
1
4
146
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
உன் பார்வைகள் அடிக்கடி என் மீது பட்டதால் உள்ளத்தில் உன் உருவம் பதிந்தது. நினைவுகளின் முற்றுகையால் உன் முகம் பார்க்கும் ஆசையில் தவம் இருக்க சொல்கிறது மனது. இமைகள் மூடி எவ்வளவு நேரம் இருப்பேன்.? இதழ்கள் சிந்தும் தேனில் தேனீக்கள் மொய்க்கிறதே தவிக்கிறேன்.
இதய நிலா tweet media
தமிழ்
3
2
3
194
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
ஏய்...... என்னவனே !! உன்னை நினைத்து குதூகலித்த அன்பின் மாற்றம் தான்..... நான் வியந்து எழுதும் கவிதை. உன்னை எழுத நினைத்து தேடிய வார்த்தைகள் தொலைந்து போனதால் நிறமாறத வானம் போட்டுக்கொள்ளும் வான வில்லைப்போல் நான் புனையும் இந்த கவிதைகள்.
இதய நிலா tweet media
தமிழ்
0
1
2
128
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
உன் சிரிப்பும் கபடமில்லாதபேச்சும் சிறுகோபமும் நேசமும் என்னை ஆச்சரியமூட்டும். அம்மா. இந்த உலகில் உள்ள அத்தனை சொந்தங்களும் உனக்கே உரித்தானவை.. அருள் மழை பொழியும் அன்பு தேவதைகள் இப்படித்தான் இருக்கக்கூடுமென உன் உருவத்தில் நான் பார்க்க தோன்றுகிறது.
தமிழ்
0
0
2
114
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
என் விடுதலை இறுதி நாள் வருமா என்று எண்ணத் தோன்றுகிறது அம்மா எனக்கு. இப்போது சொல்கிறேன் நான் உள்நுழைய தடைவிதிக்கப்பட்டிருந்தது காற்றுக்கு என் மூச்சுக்காற்றுக்கு கூட முன்னூறு தடவை நொடிக்கு நொடி இதயமும் உன்னை எண்ணியே துடித்துக் கொண்டிருப்பது அறிவாயா நீ அம்மா.
தமிழ்
0
0
1
69
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
உன் ஓவியத்தை வரையும் பாக்கியம் எனக்கு கிடைத்தது நான் பூரிப்படுகிறேன் அம்மா. உனக்கு எத்தனை உதாரணம் சொல்லலாம்.. ஆனால் அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக நீ இருக்கிறாய்.
தமிழ்
0
0
1
64
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
ஒவ்வொரு இரவில் விழிக்கவும்பிடிக்காது எனது ஆசைகள் எல்லாம். படர்ந்து கவிழ்ந்துகிடக்கிறது எனது இரவுகள்.. இரவுகளுக்கப்பால் தேய்ந்துக் கொண்டு இருக்கும் நிலவு நகர மறுக்கும் நினைவுகள் எல்லாம். உனக்காக நான் எழுதும் கவிதைகளோடு கவிதையாய் உறக்கத்தை இறுக்கிப்பிடித்திருக்கிறன..
இதய நிலா tweet media
தமிழ்
0
0
1
53
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
என் கனவுகள்.. உன்னைப் பற்றி தான். யோசிப்பதும் உன்னை நாளும் நேசிப்பதும் கவிதைகளாய். உன் மலர் போன்ற பாதங்களுக்கு அர்ச்சனை பூக்ககளாய் துவ தான்.
இதய நிலா tweet media
தமிழ்
0
0
0
40
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
இந்த இரவுவேறு நீண்டுகொண்டேயிருக்க என் நினைவுகள் எப்போதும் உன்னை சுற்றியே இருக்கும். எங்கள் வீட்டு ஜன்னலுக்கு வெளியே பிசுபிசுவென ஈரக்காற்று.. வீசும் போது கூட நான் உன்னை நினைத்துக் கொள்வேன் அம்மா. இது ஒரு கனவைப்போல தான் எல்லாம் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதய நிலா tweet media
தமிழ்
0
0
3
49
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
உன்னை சந்தித்த தருணங்கள்.. இல்லை இல்லை உன் வயிற்றில் பிறந்த தருணங்கள் நான்  கடந்துவிட்ட நாட்கள் உன்னை விட்டு பிரிந்து போன நாட்கள் இன்னும் என்னை தாக்கி இதயத்தை சேதப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.
இதய நிலா tweet media
தமிழ்
0
0
0
39
இதய நிலா
இதய நிலா@SNaffiya77100·
இடை மறித்து இனியா என்றேன்! இனிதாய் மணந்தேன் இனி வராதே என்றாள். இரவெல்லாம்.... இருந்து விட்டு இன்னோருவனோடு இனிக்க பேசி போகிறாள். இவள் தூரோகம் போல இந்த புவியில் இருந்தால் என்னவாகும்
இதய நிலா tweet media
தமிழ்
0
0
3
98