
"தேர்வு எழுதும் மாணவர்கள் தைரியத்தோடும், நம்பிகையோடும் தேர்வு எழுதுங்கள் வெற்றி நிச்சயம்"
நீட் தேர்வு எழுதும் மாணவ செல்வங்களுக்கு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்
திரு @GK__Vasan வாழ்த்து
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) இன்று இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. கடந்த தேர்வின் போது நடைபெற்ற தேர்வுதாள் கசிவு குளறுபடியால், தற்பொழுது மீண்டும் நடைபெறுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் மனத் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் தேர்வு எழுதவும்.
நீட் தேர்வை பொறுத்த வரை இந்த ஆண்டு தேர்வு எழுதி வெற்றிபெறாதவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்த ஆண்டும் தேர்வு எழுதி வெற்றி பெறலாம். அதற்கான வாய்ப்பு நிறைய இருக்கிறது. ஆகையால் தேர்வு பயத்தால் தவறான முடிவை எடுப்பது சரியல்ல. ஒரிரு நாட்களுக்கு முன்னர் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு மிகவும் வருத்தம் அளிக்கிறது. தற்கொலை பிரச்சனைக்கு என்றும் தீர்வாகாது.
தேர்வு எழுதும் மாணவர்கள் நம்பிக்கையோடு, தைரியத்துடன் தேர்வு எழுதுங்கள். வெற்றி கிடைக்கும். உங்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் இத்தேசத்தில் பரந்து விரிந்துள்ளது. இத்துறையில் இல்லையென்றாலும் எத்துறையிலும் சாதிக்கலாம். அதற்கான சூழலை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
மாணவர்களே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்சதேவையில்லை. விடா முயற்சியோடு முயன்றால் வெற்றி நிச்சயம். தங்கள் கனவுகள் நிறைவேற மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
#ஜி_கே_வாசன் #GKVasan
#தமிழ்_மாநில_காங்கிரஸ் #tmcfortn #TNPolitics #TamilNaduPolitics #tamilmaanilacongress
#NEET #neetexam #NEETStudents #NEETSuccess

தமிழ்























