
Voice of TVK
86 posts

Voice of TVK
@VoiceOfTVK
Empowering Tamizh Nadu’s future with Tamizhaga Vetri Kazhagam 🇮🇳 | Updates, insights & support for TVK 🇪🇸 | Join us for change ✌️
Chennai Katılım Ekim 2024
26 Takip Edilen14 Takipçiler
Sabitlenmiş Tweet

தெளிவான விளக்கம் 🔥 மாநாடு பற்றிய தொண்டரின் கருத்து 🔥 PART - 1
Follow & Support: @VoiceOfTVK
#TVKMaanadu #TVKThalaivarVijay #TVKMaanaadu #Thalapathy69 #TVK #TVKVijayMaanaadu #TVKVijay #VoiceofTVK #தமிழகவெற்றிக்கழகம்
தமிழ்

@JioCare @airtelindia I want to disconnect your JioFiber service. Can you please help me @JioCare @reliancejio
English

@JioCare Only got this bot reply. I going to file a complaint on jio and want to change @airtelindia
English

@JioCare @reliancejio
My JioFiber not working since 19th Oct (5 days) in Choolai, Chennai.
Complaint ID: SR00002QLFP1
Service ID: 299056429230 |
No technician visited yet.
Worst part - local technician talked rudely when I called. Totally unacceptable service!
English

@JioCare Still issue not addressed. Very worst service i ever faced. I want to disconnect your service. Kindly DM if any humans works in jioFiber. #JioFiber #chennai @JioCare @reliancejio
English

@VoiceOfTVK Hi, that's not the experience we aim for. Please be informed that our team is working on your service request and it is in progress. We will provide a resolution at the earliest. Also, DM us the date and time of the interaction, so that we can assist you further - (1/2)
English

@JioCare Please check DM. Kindly confirm receipt and escalate to your supervisor. This needs urgent attention today.
English

@VoiceOfTVK Appreciate your patience and understanding as we work to resolve this matter. Please DM us engineer's name, engineer's number, date and time of issue to assist you further - Shireen twitter.com/messages/compo… (2/2)
English

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் தலைவர் விஜய் ❤️
#TVK #TVKThalaivarVijay #TVKForTN #Tvkvijayhq #FengalCyclone #VoiceOfTVK @ramk8059 @balanish21 @TVKHQUpdates

தமிழ்

புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர்.
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?
மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். ஆயினும் மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா? அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்?
மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர்.
மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது.
எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு. எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும்.
இந்த இயற்கைப் பேரிடர்க் காலத்தில், தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நம் தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கடந்த பல வருடங்களாக நாம் நற்பணி மன்றமாக, மக்கள் இயக்கமாக இருந்தபோது, இயன்ற அளவில் நம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். மக்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தோம். நம் சேவை உணர்வால் அவர்களோடு உறவாகப் பழகியவர்கள் நாம்.
என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்களாகிய நீங்கள், உண்மையான மக்கள் பணி செய்யும் நேரம் இதுவே என்பதை ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தி வருகிறீர்கள். அவ்வகையில் இந்தப் பேரிடர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை, பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும் நீங்கள் களத்தில் நின்று இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். மேலும் வீடு வீடாகச் சென்று குடிநீர், பால், பிஸ்கட், உணவு, ரொட்டி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை வழங்கி வரும் உங்களின் அளப்பரிய பங்களிப்பைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்.
பல மாவட்டங்களில் வெள்ள நீர் வடியவில்லை. மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
எனவே நம் கழகத் தோழர்கள், தங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொண்ட பிறகே, பேரிடர்ப் பணிகள் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும். பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீர் முழுவதுமாக வடியும் வரை, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும். நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாம் அனைவரும் மக்களோடு மக்களாகக் கரம் கோத்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் உங்களைப் பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்


மருத்துவர் மீதான தாக்குதல்: திமுக ஆட்சிக்கு தலைவர் விஜய் கடும் கண்டனம்
Follow & Support: @VoiceOfTVK
#TVKVijay #TVKThalaivarVijay #TVK #TVKITWING #Tvkvijayhq @balanish21 @ramk8059 @TVKHQUpdates

தமிழ்
Voice of TVK retweetledi

தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்

@thamizhachi_Ani இப்ப இந்த எழுத்து பிழை தான் உனக்கு பிரச்சினையா ?? எல்லா போஸ்ட்லயும் படிங்க, படிங்கனு சொல்ரீங்களே .. நீங்க என்ன படிச்சிங்க அப்படி??
Reach வேணும்னா வேற எதன பண்ணுங்க மேடம்..
தமிழ்

@Saattaidurai திமுக கொடுத்த வேலையை சிறப்பா செய்றடா ... தவெக நண்பர்கள் இவனை கண்டுக்காதிங்க ..
தமிழ்

விஜய் கட்சியின் கேவலமான அரசியல் | சீமானை கண்டு பயப்படும் விஜய் | தவெகவில் இணைந்தவர்களின் பின்னணி |
youtu.be/zm9bLLMq_gM

YouTube
தமிழ்

@Saattaidurai @tvkvijayhq இவனுக்கு முத்திருச்சு போல .. நல்ல மனநல மருத்துவமனையில் சேர்த்து விடுங்க ..
தமிழ்

திமுகவின் ஊழல்களை பட்டியலிடும் விஜய் !
ஆமா இவரு பெரிய விஜிலென்ஸ் ஆபிசர் புதுசா வந்து கண்டுபிடிக்க போறாரு !
அந்த ஊழல் பணத்தில் பீஸ்ட் படம் வரைக்கும் சம்பளம் வாங்கும்போது தெரியலையா?
பூமர்தனமா இருக்கு ப்ரோ @tvkvijayhq
தமிழ்

மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்

சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் தலைவர் விஜய் ❤️
Follow & Support: @VoiceOfTVK
@tvkvijayhq #TVKVijay #TVK #ThalaivarVijay #TVKThalaivarVijay #Seeman #TVKchannel @apcuddalore #VoiceofTVK @sangeet29332013 @TVK_CbeNorth

தமிழ்

சுட்டாலும் சங்கு வெண்மை தரும் 🔥
#TVKVijay #Tvkvijayhq #TVK #ThalapathyVijay #TVKThalaivarVijay #Seeman #VoiveofTVK @apcuddalore @ramk8059 @TVK_CbeNorth
TVK Vijay@TVKVijayHQ
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்

இயற்கை வளப் பாதுகாப்புக் கொள்கை தீர்மானம் 🔥
Follow & Support: @VoiceOfTVK
#TVK #TVKVijayMaanaadu #TVKThalaivarVijay #ThalapathyViiay #தமிழகவெற்றிக்கழகம் @ramk8059 @TVK_CbeNorth @sangeet29332013 #VoiceofTVK

தமிழ்

