Shiva retweetledi

2016ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 2 மணிநேரம் கடையின் நேரத்தைக் குறைத்தார்.
2017ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, 500 மதுக்கடைகளை மூடினார். இத்தோடு, 169 பார்களையும் மூடினார்.
2023ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஸ்டாலின் 500 மதுக்கடைகளை மூடினார். குறைந்த வருமானம் தந்த மற்றும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த இடங்களில் இருந்த கடைகளை மூடினார்.
இப்போது 2026ஆம் ஆண்டு முதல்வர் விஜய், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே இருந்த 717 மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்திருக்கிறார்.
எல்லா முதல்வர்களும் தலா 500 மதுக்கடைகளை மூடுகிறார்கள். அதேசமயம், குறைந்திருக்க வேண்டிய Tasmac வருமானம் ஆண்டுக்கு 48,000 கோடியிலிருந்து 50,000 கோடியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
கடைகள் மூடப்படுகின்றன என்றால், வருமானம் குறையத்தானே வேண்டும்? மாறாக, எப்படி கூடுகிறது?

தமிழ்





















