Raama Sreenivasan

5.3K posts

Raama Sreenivasan banner
Raama Sreenivasan

Raama Sreenivasan

@ProfessorBJP

State General Secretary - BJP Tamil Nadu

Madurai, Tamilnadu Katılım Eylül 2019
482 Takip Edilen105.5K Takipçiler
Raama Sreenivasan
Raama Sreenivasan@ProfessorBJP·
மதுரை தெற்கு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வெற்றி பெற்று நூறு நாட்களுக்குள் மதுரை தூய்மை நகரமாக மாறும் என்று வாக்குறுதி அளித்தேன்... மத்திய அமைச்சர் திரு பியூஸ் கோயல் அவர்களிடம் பேசி மதுரைக்கு என்று சிறப்பு நிதி கேட்டிருந்தேன் அவரும் டெல்லியில் பேசி அப்படி ஒரு நிதி கொடுக்க சாத்தியம் உள்ளது என்று சொல்லி இருந்தார்... ஆனால் இன்று மதுரையின் நிலை மிக மோசமாக உள்ளது... மதுரையை தூய்மைப்படுத்துவேன் என்று சொன்ன வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை... தேர்ந்தெடுத்த அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை.. என்ன சொல்லி என்ன செய்ய இராம ஸ்ரீநிவாசன்
தமிழ்
18
27
147
10.6K
Raama Sreenivasan
Raama Sreenivasan@ProfessorBJP·
கமல் மீது எனக்கு அரசியல் விமர்சனங்கள் நிறைய உண்டு பல சமயங்களில் அவர் சாமானியனுக்கு புரியாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறவர்.... அவர் பேசுவதை புரிந்து கொள்ள ஒரு தனி அகராதி வேண்டும் என்று அடிக்கடி நான் கிண்டல் செய்வேன் அவரது அரசியல் பேட்டிகளை கண்டித்து பலமுறை நான் ஊடகங்களில் பேசியிருக்கிறேன் ஆனாலும் இப்போது நான் அனுப்பி இருக்கிற இந்த வீடியோவில் அவரது கருத்துக்கள் மிகச் சிறந்தவை ஓர் இந்தியனாக பெருமை கொள்ள இந்த வீடியோ உதவும் சபாஷ் கமல்... நீங்களும் சில சமயங்களில் உண்மையைப் பேசுகிறீர்கள் என்பது மகிழ்ச்சி இராம ஸ்ரீநிவாசன் பாஜக மாநில பொதுச் செயலாளர் @ikamalhaasan
தமிழ்
47
259
1.1K
67.8K
Raama Sreenivasan
Raama Sreenivasan@ProfessorBJP·
Hello FM ரேடியோவிற்கு தொலைபேசியில் நான் கொடுத்த நேர்காணல்!!!
தமிழ்
9
9
22
1.1K
Raama Sreenivasan
Raama Sreenivasan@ProfessorBJP·
கன்னியாகுமரி மாவட்டம் திருக்கண்ணபுரம் என்கிற ஊரில் நடந்த இந்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இனிய தருணம்... ஒருங்கிணைந்த குமரி மாவட்டத்தின் முன்னாள் தலைவர் திரு தர்மராஜ் அவர்களும் தற்போதைய குமரி கிழக்கு மாவட்ட தலைவர் திரு கோபகுமார் அவர்களும் இந்நிகழ்வில் என்னுடன் கலந்து கொண்டார்கள்... குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் இந்து சமய மாநாடு நடத்துகிறார்கள் அதில் இந்து சமய மறுமலர்ச்சி பற்றியும் இந்துக்களின் ஒற்றுமை பற்றியும் எடுத்துரைக்கும் தலைவர்களை அழைத்து உரையாற்ற ஏற்பாடு செய்கிறார்கள்... கடந்த ஓராண்டில் மட்டும் இதுபோன்ற பல்வேறு சமய மாநாடுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் பாக்கியம் பெற்றவனாக நான் சென்று கொண்டிருக்கிறேன்
Raama Sreenivasan tweet mediaRaama Sreenivasan tweet mediaRaama Sreenivasan tweet mediaRaama Sreenivasan tweet media
தமிழ்
2
12
80
2.4K
Raama Sreenivasan
Raama Sreenivasan@ProfessorBJP·
TN election 2026 Advantage to BJP நடந்துவிட்ட சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகம் என்று நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள் அதற்கான காரணங்களை சொல்கிறேன் இந்தத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் வென்று பாஜக பெரும் தோல்வியை சந்தித்து இருப்பது உண்மைதான் தேர்தலில் தோற்று இருக்கிறோம் ஆனால் அரசியலில் வென்றிருக்கிறோம் இதுவரையும் இந்தி கூட்டணி என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த திமுக காங்கிரஸ் கூட்டணி காங்கிரஸின் துரோகத்தால் இல்லாமல் போய்விட்டது கம்யூனிஸ்டுகளும் விடுதலை சிறுத்தைகளும் காங்கிரசின் துரோகத்திற்கு துணை சென்றிருக்கிறார்கள்... துரோகத்தின் வலி என்ன என்பது திமுகவிற்கு புரிந்து இருக்கும் பாஜக நமக்கு எதிரி தான் ஆனால் ஒருபோதும் துரோகம் செய்ததில்லை என்கிற வரலாறு திமுகவின் நினைவிற்கு வந்தே தீரும்... இனிமேல் திமுகவால் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி நாயனத்திற்கு தவில் அடிக்க முடியாது.... பாராளுமன்ற செயல்பாடுகளில் முன்பு போல காங்கிரசின் நிலை எடுத்து திமுகவால் செயல்பட இயலாது.... விஜய் கட்சிக்கு கூட்டணி கட்சிகள் சென்று விட்ட நிலையில் இருக்கின்ற ஒரு சில கட்சிகளை வைத்துக்கொண்டு திமுக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க முடியாது.... அதிமுகவைப் பொறுத்தவரை மிகப் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது 10 சதவீத இடங்களுக்கும் மேலாக டெபாசிட் இழந்திருக்கிறது அதிமுக... எடப்பாடியாரால் இனி அதிமுகவை கட்டி காப்பதே மிகப் பெரும் சவாலாக இருக்கும்... தொடர்ந்து நான்கு பொதுத் தேர்தல்களில் வீழ்ச்சியுற்ற கட்சியாக மிகப் பெரும் மனச்சோர்வில் இருக்கிறது அதிமுக.... அதை மீட்டெடுக்கும் மனவலிமையும் தலைமையும் எடப்பாடியாருக்கு இருக்கிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இப்போது தமிழக பாஜகவிற்கு களமும் காலமும் உருவாகி இருக்கிறது.... திராவிடக் கட்சிகள் சோர்வடைந்து இருக்கும் இந்த நிலையில் .... ஆட்சி அதிகாரத்தில் அனுபவம் இல்லாத விஜய் கட்சி அரசமைத்திருக்கும் இத் தருணத்தில் மிகச் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட பாஜகவிற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது இந்தியப் பேரரசின் பிரதமராக வலிமைமிக்க தலைவர் நரேந்திர மோடி இருக்கிறார் அரசியல் சாணக்கியராக அமித்ஷா அவர்கள் இருக்கிறார்.... தமிழகத் தாமரைத் தொண்டர்களின் எழுச்சியும் வீரியமும் இந்த மாநிலத்தில் புதியதொரு அரசியலுக்கு வழிவகுக்கும்.... தமிழக பாஜக ஒரு வித்தியாசமான கலவை மற்ற கட்சிகளைப் போல மூத்தவர்கள் மட்டுமே இல்லாமல் செயல் துடிப்பு மிக்க இளைஞர்களையும் தலைவர்களாக கொண்ட கட்சி பாஜக... வரும் காலத்தில் அத்தகைய இளமையும் நீண்ட கால அனுபவமும் கூட்டாகச் சேர்ந்த தலைமை தமிழக பாஜகவிற்கு உத்வேகம் தரும்... இராம ஸ்ரீநிவாசன் மாநில பொதுச் செயலாளர் பாஜக
Raama Sreenivasan tweet media
தமிழ்
349
100
547
145.7K