Raama Sreenivasan
4.7K posts

Raama Sreenivasan
@ProfessorBJP
State General Secretary - BJP Tamil Nadu
Madurai, Tamilnadu Katılım Eylül 2019
482 Takip Edilen104.5K Takipçiler
Raama Sreenivasan retweetledi

23.4.2026 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாரதிய ஜனதா கட்சிக்கு, கீழ்க்கண்ட 27 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்குவது என, இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
- மாநில தலைவர் திரு.@NainarBJP அவர்கள்

தமிழ்
Raama Sreenivasan retweetledi
Raama Sreenivasan retweetledi
Raama Sreenivasan retweetledi

"நடிகர்களுக்காகவே குரலை மாற்றிய TMS... சரித்திரத்தை சொன்ன பேராசிரியர் வியக்க வைக்கும் ரகசியம்..!"
#raamasreenivasan | @ProfessorBJP | #TMSoundararajan | #Bjp | #madurai | #Viralvideo | #SivajiGanesan | #voting | #bookdiscussion | #murugansongs | #tnnews24digital
தமிழ்

நேற்று மதுரையில் பிரிட்டிஷ் உயர் ஆணையம் சார்ந்த அதனுடைய பொறுப்பு துணை உயர் ஆணையர் Shalini Medelalli மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் Kripa Ramachandra அவர்களை மதுரையில் சந்தித்தேன்.
நீண்ட நேரம் அவர்கள் என்னுடன் கலந்துரையாடினார்கள்
தமிழக அரசியல் சூழல் பற்றியும் பாரதிய ஜனதா கட்சியின் அணுகுமுறைகள் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்ள விரும்பினார்கள்...
நாம் பொது வெளியில் பேசுகிற பல விஷயங்கள் அவர்களுக்கு தெரியவில்லை அதையெல்லாம் நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்....
இது தவிர வேறு சில விஷயங்கள் அவர்களுக்கு கூறினேன்...
மிகச் சிறந்த காந்திய அறிஞர் டாக்டர் தரம் பால் அவர்கள் எழுதிய ஒரு புத்தகம் Beautiful Tree ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வரும் முன்பே எப்படி இந்தியாவில் கல்வி சிறந்தது என்பதைப் பற்றிய உலக தரமான ஆய்வு புத்தகம். அந்த புத்தகத்தை நான் அவர்களுக்கு அனுப்பி வைப்பதாக சொன்னேன்...
காமன்வெல்த் என்கிற அமைப்பு இன்னமும் கூட பிரிட்டிஷ்காரர்கள் உலகத்தில் பல நாடுகளை குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளை காலனியாக வைத்து ஆட்சி செய்ததை நினைவு படுத்தும் வார்த்தையாக உள்ளது என்பதை சொன்னேன்...
எல்லாவற்றிற்கும் மேலாக என் மனதில் இருக்கும் நீண்ட நாள் விருப்பத்தை எடுத்துச் சொன்னேன்
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி தமிழ்நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் போது தான் அவர்களை எதிர்த்து களம் கண்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் மாமன்னர்கள் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள்.
இது போன்ற மாவீரர்களுக்கு லண்டனில் சிலை வைக்க வேண்டும்
எந்த ஏகாதிபத்தியம். இது போன்ற விடுதலை வேட்கையை அழித்ததோ அந்த தேசம் தான் தன் தவறை உணர வேண்டும் என்றும் சொன்னேன்....
இவை எல்லாம் என் மனதில் இருந்த கருத்துக்கள்...
இவையெல்லாம் நடக்குமா என்று எனக்குத் தெரியாது
எங்கோ எப்போதோ சில கருத்துக்களை விதைத்து வைத்தால்...
எப்போதாவது நடந்து விடும் என்ற நம்பிக்கை தான்..!
இராம ஸ்ரீ நிவாசன்
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பாஜக



தமிழ்
Raama Sreenivasan retweetledi

மார்ச் 22 ஆம் தேதி அன்று கோவை சூலூரில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் நடைபெற்ற அற்புதமான கூட்டம்.
இது தொடர்ந்து 50 மாதங்களாக மாதம் ஒரு சிறப்பு சொற்பொழிவு ஏற்பாடு செய்து தேச பக்தியையும் தெய்வ பக்தியையும் மக்களிடையே ஊட்டி வருகிறார் அந்த மாவட்டத்தினுடைய ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ சம்பத் ஜி அவர்கள்!!!




தமிழ்
Raama Sreenivasan retweetledi

இன்றைய தினம், இந்திய வரலாற்றில் மிக நீண்ட காலம் அரசாங்கத்தைத் தலைமை ஏற்று நடத்தி மிக நீண்ட காலம் அரசாங்கத்தை வழிநடத்திய இந்தியர் என்ற சாதனை படைத்து, பாரத மக்களுக்கு அயராது சேவை செய்து, 12 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய தேசத்தின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றோடு சுமார் 8933 நாட்களாக நாட்டை வளர்ச்சி பாதையில் முன்னேற்றி, உலக அரங்கில் இந்தியாவிற்கு தனித்துவமான இடத்தை உருவாக்கித் தந்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் இந்த மகத்தான சாதனையை முன்னிட்டு, சென்னை கமலாலயத்தில் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினோம்.
இந்த சிறப்பான நிகழ்வில், மாண்புமிகு மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் திரு. @PiyushGoyal அவர்கள், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் @DrLMurugan அவர்கள், பாஜக தேசிய செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் திரு. @MenonArvindBJP அவர்கள், தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள், தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் 2026 @BJP4TamilNadu தேர்தல் அறிக்கை குழுத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்கள், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்ததுடன், அனைவரும் இணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.


தமிழ்
Raama Sreenivasan retweetledi

தமிழ்நாட்டின் உணர்வுகளைப் புரிந்து,
தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி,
மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் நம் @AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் நம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில்,
பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும்,
பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும்,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும்
போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
“தமிழகம் வாழ வேண்டும் என்றால்
திமுக வீழ வேண்டும்”
என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி!
நமது கூட்டணி ஒப்பந்தக் கையொப்ப நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. @PiyushGoyal அவர்களுக்கும், மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுக்கும், @BJP4TamilNadu மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்தத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்களுக்கும்,
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும்,
@ammkofficial பொதுச்செயலாளர் அன்பு சகோதரர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் திரு. @PaarivendharTR அவர்களுக்கும்
இத்தருணத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும்.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்




தமிழ்
Raama Sreenivasan retweetledi

இன்று சென்னையில் நடைபெற்ற, நமது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வருகின்ற சட்டசபை தேர்தலில் கட்சிகள் போட்டியிடக் கூடிய தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. @PiyushGoyal ஜி அவர்கள் மற்றும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. @NainarBJP அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் திரு. @draramadoss அவர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் அண்ணன் திரு. @TTVDhinakaran அவர்கள், முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக தேர்தல் அறிக்கை குழுத் தலைவருமான திருமதி. @DrTamilisai4BJP அவர்கள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.




தமிழ்
Raama Sreenivasan retweetledi
Raama Sreenivasan retweetledi
Raama Sreenivasan retweetledi

'மறவர்' சமுதாய மக்களுக்கு பாஜக கை கொடுக்கும்... பேராசிரியர் கொடுத்த உத்தரவாதம் டெல்லி வரை சென்றது வைரல் வீடியோ!"
#raamasreenivasan | @ProfessorBJP | @narendramodi | #Tamilnadu | #bjp | #pmmodi | #Viralvideo | #narendramodi | #localcommunity | #socialgroup | #tnnews24digital
தமிழ்
Raama Sreenivasan retweetledi

இன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் நடைபெற்ற வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான NDA கூட்டணி சந்திப்பில் மாண்புமிகு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர் திரு. @PiyushGoyal அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
இந்த நிகழ்வில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் @DrLMurugan அவர்கள், முன்னாள் தெலுங்கானா ஆளுநர் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான @BJP4TamilNadu தேர்தல் அறிக்கை குழு தலைவர் திருமதி. @DrTamilisai4BJP அவர்கள் மற்றும் அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவில் உள்ள மாநில நிர்வாகிகள் உடன் பங்கேற்றனர்.




தமிழ்








