உலகப்போர் நேரத்தில் ஜப்பான் மேல அமெரிக்கா குண்டு போட்டது மாதிரி, எலெக்ஷன் டயத்துல விஜய் குண்டு போடுவார் என்று ஆதவ் பேசியிருந்தார். குண்டு போட ஆரம்பிச்சுட்டாங்க! ஜனநாயகன் படம் லீக், ஹிரோஷிமா குண்டு! நாகசாகியில் குண்டு போட 4 நாட்களானது. அடுத்து வர்றது நிச்சயமாக பெரிய குண்டான்தான்
ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தாக வேண்டியிருக்கும். நிஜமான காங்கிரஸ் கட்சி என்னிடம் இருக்கிறது என்று விஜய் சொல்வது, மற்றும் பலர் என்று விமர்சிப்பதை விட மோசமானது. விஜயை கண்டித்து ராகுல் காந்தி பேசாவிட்டால்.. கஷ்டம்தான்!
புதுச்சேரியில் 90% வாக்குப்பதிவுக்கு SIR கிளீன் அப் நடைமுறை பிரதான காரணம் என்றாலும் ராகுல் காந்தி & விஜய் பிரச்சாரமும் முக்கியமான காரணங்கள்தான். தமிழ்நாட்டில் இளம் கிறிஸ்தவ சிறுபான்மையினர் வாக்குகளின் கணிசமான பகுதி விஜய் பக்கம் போய்விடாமல் இருக்க...
எடப்பாடி, ஸ்டாலின், சீமான், விஜய் என முன்னணி நாயகர்கள் அரசியல் களத்தில் அடித்து ஆடுகிறார்கள். ஆனால், ஆறு மாதங்களாக அங்குமிங்கும் பரபரப்பாக இருந்த கூட்டணிக்கட்சிகளை பற்றி யாரும் பேசுவது இல்லை. நேற்றும், இன்றும் 'நேர்ப்படப்பேசு'வில் பேசியிருக்கிறோம். அவசியம் பார்த்து ரசிக்கவும்!
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை தட்சிண பிரதேசம் என்று மாற்றிவிடுவார்கள் என்று முதல்வர் பேசியிருந்தார். 1956ல் தட்சிண பிரதேசம் கோரிக்கைதான் திமுகவுக்கு கைகொடுத்தது. மாகாண அரசியலில் முன்னுக்கு கொண்டு வந்தது. 2026ல் கைகொடுக்குமா? தினமலரில் எழுதியுள்ளேன்
20-20 மேட்சில் 6வது ஓவரிலேயே திமுக ஜெயித்துவிட்டது. ஸ்டேடியம் வந்திருக்கும் ஆடியன்ஸ் ஏமாந்துவிடாமல் இருப்பதற்காக சும்மா ஆடுகிறார்கள் என்கிறார், நண்பர் ராஜன் குறை. ஜோசப் விஜயிடம் இருப்பது டிவைன் கரீஷ்மா என்கிறார், நண்பர் பெருமாள் மணி.
ஜெயங்கொண்டம் : பஸ் ஸ்டாண்ட் படு கேவலம். கழிப்பிட வசதியெல்லாம் கிடையாது. இடிபாடுகளைத் தாண்டி, கருவேல மரங்களுக்கு நடுவே ஒதுங்கவேண்டியிருக்கும். இந்த லட்சணத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு சிலை வைக்கவேண்டும் என்பதுதான் தொகுதி மக்களின் அதிமுக்கியமான கோரிக்கையாம்!
ஜெயங்கொண்டம் : திமுக vs அதிமுக : கங்கை கொண்ட சோழபுரம் உள்ள தொகுதி. கந்தர்வக் கோட்டை போல் முந்திரிக்காடும் நெய்வேலி போல் நிலக்கரி வயலும் உள்ள பகுதி. பா.ம.க & நாம் தமிழர் செல்வாக்குள்ள தொகுதி
மதுரை செண்ட்ரல்ல பி.டி.ஆரை எதிர்த்து சுந்தர் சி நிக்குறாராம். எப்படியும் பி.டி.ஆர் ஜெயிச்சுடுவார்!
யாருப்பா சொன்னா?
வெண்ணிற ஆடை மூர்த்தியே சொல்லியிருக்கார்!
அப்ப சரி!
#எங்கேயோ கேட்ட குரல்