

Benjamin TVK
664 posts

@BenjaminTVK
Japan-trained Certified International Trainer with 25+ years of expertise, honored by Texas leaders, a proud TVK member, empowers communities through training.




எந்த வேட்பாளருக்கும் கிடைக்காத அளவுக்கு மரியாதை, அன்பு, அரவணைப்பு, இன்று வில்லிவாக்கம் மார்க்கெட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அண்ணன் ஆதவ் அர்ஜுனாவுக்கு மக்கள் வழங்கிய வரவேற்பு வரலாற்று சிறப்பு மிக்கது! பழக்கடை, மளிகைக்கடை, பேன்சி ஸ்டோர் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்கள் பணியை விட்டுவிட்டு ஓடி வந்து அண்ணனை சுற்றி நின்றனர்… ஒரு புகைப்படம் எடுக்கவே போட்டி போட்டுக் கொண்ட அந்த மக்கள் அன்பு, அதுவே உண்மையான வெற்றியின் அறிகுறி! “வாக்கு எல்லாம் @TVKVijayHQ அவர்களுக்கு தான்… விசிலுக்கு தான் ஓட்டு… TVK தான் ஓட்டு…” என்று முழங்கிய அந்த குரல்கள் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன! இந்த மக்களின் பேராதரவு வெற்றியை முன்கூட்டியே அறிவிக்கிறது… விரைவில் தேர்தல் நாள் வர வேண்டும்… நமது தலைவர் முதலமைச்சராக வர வேண்டும்… வில்லிவாக்கம் ஒரு புதிய விடிவை காண வேண்டும்… அந்த நாளை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்! ✊🔥

தமிழக வெற்றிக் கழகத்தின் எடப்பாடி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதியின் தேர்தல் பணிகள் குறித்துப் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: மேட்டூர் தொகுதியில் தேர்தல் பணி எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளர் எவரும் போட்டியிடாத சூழலில், கட்சியின் வலிமையை அண்டை தொகுதிகளில் நிரூபிக்கத் தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, எடப்பாடி தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவரும், பக்கத்து தொகுதியான மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளரை ஆதரித்துத் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் 2: வாக்குகள் அளிப்பது குறித்த நிலைப்பாடு எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தங்களது வாக்குகளை யாருக்கு அளிக்க வேண்டும் என்பது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில், எங்களது தலைவர் தளபதி அவர்கள் எந்த வேட்பாளருக்கு அல்லது எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ, அவருக்கே எங்களது ஒட்டுமொத்த வாக்குகளையும் அளிக்கப் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. தீர்மானம் 3: தலைமைக்குக் கோரிக்கை இந்தத் தீர்மானங்கள் குறித்துக் கழகத்தின் பொதுச்செயலாளர் அவர்களிடமும், சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் விஜய் தமிழன் ஆ.பார்த்திபன் அவர்களிடமும் உரிய முறையில் கோரிக்கை வைக்கவும், அவர்களின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் இக்கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது. இக்கூட்டத்தில் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். @TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @BussyAnand @AadhavArjuna @CTR_Nirmalkumar @imrajmohan @KASengottaiyan @RameshOffcl @LoyolaMani @TamilanParthib1 @VenkatesanTVK #தமிழகவெற்றிக்கழகம் #VoteForWhistle






தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்கள், நாளை (08.04.2026, புதன்கிழமை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி - தூத்துக்குடி புறவழிச்சாலையில் உள்ள காப்பர் லீப் ஹோட்டல் அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் நண்பகல் 01.00 மணி முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்பின்னர், தாழையூத்து, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, மார்க்கெட் மற்றும் K.T.C.நகர் வழியாக, தூத்துக்குடி செல்கிறார். மாலை 3 மணி முதல் கழகத் தலைவர் அவர்கள், தூத்துக்குடி நகர உட்கோட்டம், மைல் பகுதியில் இருந்து VVD சிக்னல் வரை சாலை நிகழ்ச்சி ( Road Show) நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பிரசார நிகழ்வுகளில் கலந்துகொள்ள வரும் கழகத் தலைவர் அவர்களின் பிரசார வாகனத்தை இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட எவ்வித வாகனங்களிலும் யாரும், அறவே பின்தொடரக் கூடாது. தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும், இந்தத் தேர்தல் பிரசார நிகழ்வுகளில், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு என்.ஆனந்த், பொதுச் செயலாளர், தலைமை நிலையச் செயலகம் (Party Headquarters Secretariat), தமிழக வெற்றிக் கழகம்

