justchill ری ٹویٹ کیا

PILக்கு மூடுவிழா? இது யுபிஏ காலமில்லை, தேசிய ஜனநாயக கூட்டணி காலம்!
சபரிமலை தீர்ப்பு மறு ஆய்வில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறது: "பொது நல வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். முன்பிருந்தது போல, பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமே வழக்கு தொடுக்க வேண்டும் என்ற முறையை நீதிமன்றம் கொண்டு வர வேண்டும்".
9 பேர் அமர்வில் உறுப்பினரான நீதிபதி நாகரத்னா முதலில், "இப்படி பெண்களை அனுமதிக்காமல் இருப்பது தீண்டாமை இல்லையா?" என்று கேட்டார். அதற்கு துஷார் மேத்தா பதிலளித்ததும் அந்தக் கேள்வி முடிவுக்கு வந்தது.
அதையடுத்து நீதிபதி நாகரத்னா, "அதெப்படி சபரிமலை பக்தர்கள் அல்லாத யங் லாயர்ஸ் அசோசியேஷன் என்கிற (மாற்று மத) என்.ஜி.ஓ வழக்குத் தொடுத்தது 2006இல் (யுபிஏ காலத்தில்). அதே வழக்கை இன்று தொடுத்திருந்தால் இந்த நீதிமன்றம் அதை ஏற்றிருக்காது. எப்படி இந்த வழக்கு 2006இல் ஏற்கப்பட்டது என்பது விசாரிக்கப் பட வேண்டும்" என்று சொல்ல...
துஷார் மேத்தா, "என்.ஜி.ஓ என்ற பெயரில் மாற்று மதத்தவர் சபரிமலை விவகாரத்தில் தலையிட்டது தான் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி. ஒரு காலத்தில் ஏழைகளுக்கு நீதிமன்றம் எட்டாத தூரத்தில் இருந்ததாகச் சொல்லி பொது நல வழக்குகள் நடைமுறைக்கு வந்தன. இன்று அதற்கான தேவை இல்லை. with the development of a robust statutory legal-aid framework under the National Legal Service Authority (NALSA), the development of e-court, and widespread availability of internet, physical barriers for the poor to approach the courts no longer exist. மேலும் பொது நல வழக்குகள் உண்மையில் துஷ்பிரயோகம் செய்வதற்காகவே என்.ஜி.ஓக்கள் வழக்கு தொடுக்கின்றன. PIL முறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று பதிலளித்திருக்கிறார்.
நீதிபதி நாகரத்னா கேட்ட இதே கேள்வியைத் தான் அன்று 5 நபர் அமர்வில் இருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ராவும் கேட்டார். என்றாலும், அமர்வின் பிற நீதிபதிகள் - அன்றைய தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, ரோஹிண்டன் நரிமன், சந்திரசூட், கன்வில்க்கர் - கொடுத்த பெரும்பான்மை தீர்ப்பால் சபரிமலையின் பாரம்பரியம் மீறப்பட்டது. கம்யூனிஸ்ட் அரசு தீவிரமாக 'பெண் பக்தைகளை' சபரி மலைக்கு 'அனுப்பியது'.
அதே கம்யூனிஸ்ட்டுகள் இன்று உச்சநீதிமன்றத்தில், "நாங்கள் பாரம்பரியத்தை மீற விரும்பவில்லை. எனவே, முன்பிருந்தது போலவே குறிப்பிட்ட வயது பெண்கள் அங்கு செல்ல தடை நீடிக்க வேண்டும்" என்று மனு சமர்ப்பித்திருக்கிறார்கள். கேரளாவில் ஹிந்துக்களைச் சீண்டி பாடம் கற்றிருக்கிறது கம்யூன் கூட்டம். என்றாலும் கான்கிரஸ் திருந்தவில்லை.
Centre tells Supreme Court that the time has come to end PIL system, cites misuse by activists to meddle in matters of faith, argues for restoration of Locus Standi principle
#google_vignette" target="_blank" rel="nofollow noopener">opindia.com/news-updates/c…

தமிழ்
































