
பேருந்து நிலைய நுழைவு வாயில் நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு மகளிர் இலவச பேருந்து.
குமரி மாவட்டம் - தக்கலை : காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயில் நடுவழியில், வண்டி எண் TN -32 N 2910, தடம் எண் 13J பெரும்சிலம்பு To நாகர்கோவில் ஓடும் மகளிர் இலவச பேருந்து பழுதாகி நிற்கிறது.
செல்ஃப் பிரச்சினை என்றும், கிளச் தகராறு உண்டு, பிரேக் சரியில்லை என்றும் பல முறை டிப்போ அதிகாரிகளிடம் கூறியும் சரி செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த தடத்தில் இயங்கும் இந்த இலவச பேருந்து, இப்படி தரமற்று மிக மோசமான நிலையில் ஓடுவதால் பயணிகள் அச்சத்துடனே பயணம் செய்வதாக பெண் பயணிகள் கூறுகின்றனர்.
மேலும் நடுவழியில் நின்ற பேருந்தால் உள்ளே நுழையும் மற்ற பேருந்துகள் இடையூறு ஏற்படும் என்று கருதி அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் இதனை தள்ளி ஓதுக்கி நிறுத்த முயன்றும்,
டிப்போ அதிகாரிகள் தள்ள வேண்டாம், அங்கேயே (நடுவழியில்) நிற்கட்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து உயர்அதிகாரிகள் இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பார்களா.? இந்த தடத்தில் புதிய பேருந்து இயக்கப்படுமா.?
@TamilanParthib1 @arasubus
தமிழ்
