Common Man
1.1K posts





ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது... முழு நேரலை.. முழு நேரலை... அத்தனையும் உருட்டா சார்! ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம். எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்! #TNAssembly







திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்ததாக தவெக ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. குற்றச் செயல்கள் நடைபெறுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், கடந்த 1 மாதமாக நடப்பதை எல்லாம் பார்த்தால், தமிழக மக்களை, குறிப்பாக பெண்களை, இன்றைய ஆளுங்கட்சியான தவெக நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் போல! அந்த அளவிற்கு சொந்த கட்சி நிர்வாகிகள் பல குற்றங்களை, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ, கட்சித் தலைவராகவோ இன்றைய பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர் என்ன செய்தார்? 9-5 Desk Job போல முதல்வர் பணியை பார்க்கும் இன்றைய முதலமைச்சர், அந்த 9-5 நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காப்பது குறித்து எதாவது பணியை செய்தாரா? இதில், இன்றைய முதல்வர் உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் கொடுத்துவிடும் முடிவில் இருப்பதாக சில செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள தவெக நிர்வாகி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial

எனது மகன் மிதுன் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக மட்டும் தான் இருக்கின்றார். அவர் எந்தப் பதவியிலும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய மகன் அரசியலுக்கு வரமாட்டார்! -மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்.







வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்கள்! ஆளுநர் உரைக்கு வைகோ பாராட்டு தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் @lokbhavan_tn ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள @CMOTamilnadu ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டியுள்ளார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே. மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன் ,பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது. மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார். 2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது. சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அரசு நிர்வாகத்தில் புறையோடிக் கிடக்கும் லஞ்ச ஊழல்களை அடியோடு ஒழிக்கவும், நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தி அனைவருக்குமான அரசாக தமிழ்நாடு அரசு திகழும். கனிம வளக் கொள்ளைகள் தடுக்கப்படும்; அரசின் வருவாய் அதிகரிப்பதற்கு மதுபான உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த வரித் தொகை சுமார் 1000 கோடிக்கு மேல் அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்திருப்பது நிதி மேலாண்மையில் புதிய அரசின் அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. ஒன்றிய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில் நிதிப் பற்றாக்குறை இருந்தாலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தவெக அரசு முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு இயந்திரம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும். தொழில் தொடங்க ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டு எளிமையான வழிமுறைகள் உருவாக்கப்படும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்; போதைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படும். இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு சமூக நீதி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். போன்ற அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கதாகும். @TVKVijayHQ ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கதாகும். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 18.06.2026 #vaiko #CMJosephVijay #governer #TamilnaduAssembly #mdmk










