Nainar Nagenthran

4.8K posts

Nainar Nagenthran banner
Nainar Nagenthran

Nainar Nagenthran

@NainarBJP

Member of Legislative Assembly, Tirunelveli | Legislative Party Leader - BJP | State President - TN BJP

Tamil Nadu, India انضم Eylül 2017
158 يتبع97.6K المتابعون
تغريدة مثبتة
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
வெற்றி நமதே! 🙏
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
307
782
3.4K
410.9K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
விடியா ஆட்சியின் லட்சணத்திற்கு விளாத்திகுளம் வழக்கே சாட்சி! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி, ஏற்கனவே 2020-இல் மூதாட்டி ஒருவரை வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவிற்குதான் முதல்வர் திரு. @mkstalin அவர்களின் "இரும்புக்கர" ஆட்சி இருந்திருக்கிறது என்பது எத்தகைய வெட்கக்கேடு? அதிலும், ஒவ்வொரு முறையும் கொடூரக் குற்றத்தைச் செய்துவிட்டு அதை மறைக்க சிறுசிறு குற்றங்களில் கைதாகி, சிறையைப் பாதுகாப்புக் கவசம் போல பயன்படுத்தியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் காவல்துறை தரந்தாழ்ந்து போனதையும், குற்றவாளிகள் தைரியமாக செயல்படுவதையும் பட்டவர்த்தனமாக்குகிறது. விளாத்திகுளம் சிறுமி கொலைக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம் வலுபெற்ற பின்னரும், 10 நாட்களாகக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிய திமுகவின் ஏவல்துறை, கடந்த ஐந்தாண்டுகளில் எத்தனைக் குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டிருக்கிறது? எத்தனை தமிழக மகள்களைப் பலி கொடுத்திருக்கிறது? நினைத்தாலே பதைபதைக்கிறது. மொத்தத்தில், சட்டம் ஒழுங்கில் அலட்சியம் காட்டும் @arivalayam ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழகப் பெண்கள் வாழவே முடியும்!
தமிழ்
5
59
140
4K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
உலகம் முழுவதும் வாழும் அன்பான தெலுங்கு மற்றும் கன்னட உறவுகளுக்கு என் இதயம் கனிந்த உகாதி திருநாள் நல்வாழ்த்துகள்! இந்த புது வருடம் உங்கள் வாழ்வில் புதிய வாய்ப்புகளை மலரச் செய்யட்டும். ஒவ்வொரு நாளும் நம்பிக்கையால் நிரம்பி, ஆரோக்கியம் உறுதியாக இருந்து, செழிப்பும் சந்தோஷமும் உங்கள் இல்லங்களை ஒளிரச் செய்யட்டும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகி, கனவுகள் நனவாகும் இனிய நாளாக இந்த உகாதி அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
14
40
113
1.8K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட 12 ஆம் வகுப்பு மாணவியின் குடும்பத்தாரை இன்று நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். உயிரிழந்த மாணவியின் சகோதரியின் படிப்பிற்கு @BJP4TamilNadu சார்பாக நிதியுதவி அளிக்கப்பட்டது. உடன் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் திரு. முத்து பலவேசம் அவர்களும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் திரு. @sidhrangathanr அவர்களும் உடனிருந்தனர். திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கிற்குத் தங்களது குலவிளக்கைப் பலி கொடுத்து விட்டு தவிக்கும் அக்குடும்பத்தாரின் கண்ணீர் முகம் என் நெஞ்சில் ஆறா வடுவாக உறுத்துகிறது. குற்றம் நடந்து பல நாட்கள் கடந்து விட்ட போதும், பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக தெருவில் இறங்கி போராடிய பிறகும் கூட @arivalayam-த்தின் ஏவல்துறை இவ்வழக்கில் இன்னும் ஒரு குற்றவாளியைக் கூட கண்டுபிடிக்கவில்லை என்பது ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கே வெட்கக்கேடு. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும், உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும்!
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
2
65
168
4.6K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம், எனது நெல்லை இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக மதுரை தெற்கு மாவட்ட இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு. R. V. ராஜா அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட தலைவர் திரு. சிவலிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில், எனது தலைமையில் @BJP4TamilNadu தன்னை இணைத்துக் கொண்டார்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
3
65
231
6.7K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
அலட்சிய திமுக ஆட்சியினால் பலியான பிஞ்சு உயிர்! திருச்சி மாவட்டம் கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் பலியாகியதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பு" என்று ஐந்தாண்டுகளாக வெற்றுப் பெருமை பேசிவிட்டு, போதிய மருத்துவர்களைக்கூட திமுக அரசு நியமிக்கவே இல்லை என்பதன் சாட்சியே இக்கொடூர சம்பவம். ஆளும் அரசின் நிர்வாகத் திறனின்மையால் வாழ வேண்டிய அப்பாவிக் குழந்தையின் ஆயுள் பறிக்கப்படுவது இனி என்றும் நேரக் கூடாது! மருத்துவத் துறையைச் சீரழித்து மக்கள் உயிரோடு விளையாடிய @arivalayam-த்திற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைப்போம்!
தமிழ்
3
138
194
3.3K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக மாபெரும் கண்டனப் போராட்டம் தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் இன்று நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அலைகடலென மக்கள் பங்கேற்று, நமது போராட்டத்திற்குப் பேராதரவு தந்தது, ஐந்தாண்டுகால திமுக ஆட்சியின் மீது வேரூன்றி இருக்கும் வெறுப்பையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதான நம்பிக்கையையும் ஒருசேர தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதேநேரம், நமது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக இப்போராட்டத்தை நடத்தியுள்ளது, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒற்றுமையையும் வலிமையையும் பறைசாற்றுகிறது. இன்று நடைபெற்ற இப்போராட்டம் திமுகவிற்கு எதிராகத் தமிழ்நாடு மேற்கொண்டுள்ள அறப்போராட்டத்தின் தொடக்கப்புள்ளியே! ஐந்தாண்டுகளாகத் தனது திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வதைத்து வந்த கொடூர @arivalayam அரசை இன்னும் 37 நாட்களில் மக்களின் பெரும் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வீழ்த்தும்! தமிழகத்தை மீட்டெடுக்கும்!
தமிழ்
9
125
235
3.4K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
நிர்வாகத் திறனற்ற @arivalayam-த்தின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் பலனாக, தமிழகத்தில் திக்கெட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தினந்தோறும் காவு வாங்கப்பட்டு வருவதை வெளிப்படுத்தும் தமிழகப் பெண்கள்! இனியொரு விதி செய்வோம்! தீயசக்தி திமுகவை துரத்தி, பெண்களைப் பாதுகாப்போம்! #SaveWomenFromDMK
தமிழ்
5
69
129
2.1K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் மதுரையில் சுதந்திர புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. கார்த்திக் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் இயக்கத்தின் முழுமையான ஆதரவு நம் NDA கூட்டணிக்கே இருக்கும் என உறுதியளித்தார்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
1
40
124
2.3K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் எழுச்சியின் வடிவாக அமைந்தது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்ட ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று உரையாற்றினேன். இந்த விடியா திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்கு எதிரான அதிகரித்து வரும் குற்றச்செயல்கள், காவல் நிலைய மரணங்கள் போன்ற மனிதாபிமானமற்ற நிகழ்வுகள் குறித்து வலுவான கண்டனத்தை பதிவு செய்தோம். மேலும், ஒருகாலத்தில் புனிதமான சமூக ஒற்றுமையால் பெயர் பெற்ற தமிழ்நாட்டை, தங்களின் சுயநல அரசியல் லாபத்திற்காக பிரிவினை அரசியலால் சிதைத்து, மக்களிடையே பிளவை விதைக்கும் இந்த நயவஞ்சக ஆட்சிக்கு எதிராக மக்கள் குரல் கொடுத்தனர். இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து NDA தோழமைக் கட்சித் தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இணைந்து பெரும் ஒற்றுமையுடன் கலந்து கொண்டு நிகழ்வை வெற்றிகரமாக்கினர். தமிழகம் தழுவிய இந்த மகத்தான மக்கள் எழுச்சி, விரைவில் இந்த செயலற்ற திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி, மக்களின் தீர்ப்பின் மூலம் அவர்களை வீட்டிற்கு அனுப்பும் என்ற உறுதியை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் அஇஅதிமுக மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. @SellurKRajuoffl அவர்கள், முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் அஇஅதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. @rbudhayakumar_ அவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் மற்றும் அஇஅதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. @rajanchellppavv அவர்கள் கலந்து கொண்டனர். (1/2)
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
11
189
626
11.1K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
I extend my heartfelt congratulations to National President of BJP Thiru. @NitinNabin Avl on being elected as a Member of the Rajya Sabha from Bihar. Starting his political journey at a young age as a humble party worker, his rise to becoming a National President of the @BJP4India is truly a Proof of his dedication, perseverance, and hard work. I sincerely wish him continued success as he represents the voice of the people of Bihar in Parliament and contributes significantly to the state’s progress and development. இன்றைய தினம் தேசிய பாஜக தலைவர் திரு. நிதின் நபின் அவர்கள் பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறு வயதிலிருந்தே எளிய காரியகர்த்தாவாக தனது அரசியல் பயணத்தை தொடங்கி, தன்னுடைய விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் இன்று பாஜக தேசிய தலைவராக உயர்ந்துள்ளார். அவரது அயராத உழைப்பு மூலம் நாடாளுமன்றத்தில் பீகார் மக்களின் குரலாக விளங்கி பீகாரை மேலும் வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்வதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Nainar Nagenthran tweet media
English
4
36
124
2.5K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் மதுரையில் நம் NDA தோழமைக் கட்சியான அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. P V கதிரவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடினார்.
Nainar Nagenthran tweet media
தமிழ்
1
34
129
1.9K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் மதுரையில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவையின் நிறுவனத் தலைவர் திரு. கண்ணன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர்களின் பேரவையின் முழுமையான ஆதரவு நம் NDA கூட்டணிக்கே இருக்கும் என உறுதியளித்தார். மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்கள், தற்போதைய விடியா திமுக ஆட்சியை 2026ஆம் ஆண்டு மாற்ற வேண்டும் என்ற நோக்கில் நம் NDA கூட்டணிக்கு ஆதரவாக திரளாக இணைந்து வருகின்றன. இந்த வளர்ச்சி, நம் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நம்பிக்கையையும் ஆதரவையும் உறுதியாக வெளிப்படுத்துகிறது.
Nainar Nagenthran tweet media
தமிழ்
0
33
104
2.1K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
திறனற்ற திமுக ஆட்சியால் தேர்தல் காலத்திலும் தொடரும் கொடூர குற்றங்கள்! சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில், கஞ்சா போதையில் இருந்த இரு இளைஞர்கள் 66 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாகச் சீரழிந்ததற்கான சிறந்த சாட்சி! திமுகவின் 5 ஆண்டுகால கொடூர ஆட்சியால், தமிழகத்தின் நாலாப்புறமும் கஞ்சா புழக்கம் தலைவிரித்தாடி இளைஞர்களின் வாழ்வு பாழாவதோடு வயது வரம்பின்றி அனைத்துதரப்பட்ட தமிழகப் பெண்களின் பாதுகாப்பும் பறிபோய் வருகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, கொடூர குற்றங்கள் பெருகுவது, திமுக ஆட்சியால் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் கூடாரமாகவே மாறிவிட்டதை உணர்த்துகிறது. முதல்வர் திரு. @mkstalin அவர்களின் திறனற்ற நிர்வாகத்தால் அரங்கேறிய இந்த கொடூரத்தைப் பார்த்த பின்பு, இனி என்றுமே @arivalayam-த்தை ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள் தமிழக மக்கள்! இது நிச்சயம்!
தமிழ்
1
41
116
3.2K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் தலைவர் திரு. ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு அவர்களின் தாயாரும், மறைந்த திரு. கெங்குசாமி நாயுடு அவர்களின் துணைவியாருமான திருமதி. ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு அம்மா அவர்கள் மறைந்த செய்தி செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!
Nainar Nagenthran tweet media
தமிழ்
9
20
78
2.8K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
Condemnation of Thiru. Aadhav Arjuna for Spreading Unwanted Remarks Against Superstar Thiru. Rajinikanth! Superstar Thiru. @rajinikanth is one of the most respected and celebrated figures in Indian cinema, having reigned over the Tamil film industry for more than four decades. A global face of Tamil cinema, he has been honoured with some of the nation’s highest recognitions, including the Dadasaheb Phalke Award, the Padma Bhushan, and the Padma Vibhushan. Beyond his remarkable artistic achievements, he is widely admired for his humility, spiritual outlook, and the immense affection he enjoys among people across caste, religion, language, and region. It is therefore deeply inappropriate and condemnable that Thiru. @AadhavArjuna of TVK has chosen to make unwarranted remarks about such a widely respected personality in the public domain. Attempts to gain publicity by targeting a figure who commands such enduring goodwill among the people of Tamil Nadu reflect a lack of basic decorum. I urge the leadership of his party to take note of these remarks, publicly disassociate themselves from them, and advise him to refrain from such conduct in the future. Further, Thiru. Aadhav Arjuna should issue an unconditional apology to the fans and well-wishers of Superstar Thiru. Rajinikanth avl.
English
163
606
1.8K
132.4K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் திரு. ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்! திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுடைய மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர். அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த திரு. @AadhavArjuna அவர்கள் பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்! பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து திரு. ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களிடம் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்
158
663
1.7K
110.2K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
கஞ்சா போதையில் தடம் புரளும் தமிழகம்! கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தாலும், அரசு மருத்துவமனைக்குள் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டிய இச்சம்பவம் எளிதில் கடந்து செல்ல முடியாதது. “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் திரு. @mkstalin அவர்களின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் சரளமாகக் கிடைக்கின்றன, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர், போதையின் வீரியத்தில் பார்ப்போர் மீதெல்லாம் தாக்குதல் தொடுப்பது தமிழகத்தில் வாடிக்கையாகிவிட்டது, சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் போதையில் ரகளை செய்பவர்களைக் கண்டிப்பதற்கு கூட பொதுமக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு “தமிழகத்தில் போதை நடமாட்டமே இல்லை” என வாய்கூசாமல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் @arivalayam-த்தின் உடன்பிறப்புகளைக் கண்டாலே கடும் கோபம் தான் எழுகிறது. இவர்களைப் போன்ற நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறி கூட அதிகாரம் கிடைத்து விடக் கூடாது!
Nainar Nagenthran tweet media
தமிழ்
20
275
549
36.6K
Nainar Nagenthran
Nainar Nagenthran@NainarBJP·
இன்றைய தினம் சென்னை எக்மோரில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க. சார்பான இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையில் கலந்து கொண்டு, இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து நோன்பு திறந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெரும் பாக்கியமும் அளித்தது. இந்த சிறப்பான நிகழ்வில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு, சமுதாய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து நோன்பு திறந்தனர். (1/2)
Nainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet mediaNainar Nagenthran tweet media
தமிழ்
4
73
318
6.6K