DMK

65.5K posts

DMK banner
DMK

DMK

@arivalayam

DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk

Tamil Nadu Katılım Mart 2011
191 Takip Edilen964.8K Takipçiler
DMK retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இரவு பகல் பாராது சமூக வலைத்தளங்களில் களமாடும் உடன்பிறப்புகள் அனைவரும் இணைந்து கழகப் பணியாற்ற @DMKITwing சார்பில் X தளத்தில் COMMUNITY GROUPS உருவாக்கப்படுகிறது. #VoteForDMK என்று Reply செய்யுங்கள். நமது குழுவில் உடனே இணைத்துக்கொள்வோம்! அன்புசால் உடன்பிறப்புகளே.. ஒப்பற்ற தி.மு.கழக ஆட்சியை மீண்டும் அமைக்க அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் 🌄
GIF
தமிழ்
849
592
1.3K
26.7K
DMK
DMK@arivalayam·
திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊 பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறைகள் மூலம் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கான கல்வியை தமிழ்நாடு முன்னெடுத்து வருகிறது 💻 82.5% தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) வசதியுள்ள வகுப்பறைகளுடன், தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. 2021-22ல் 43.5% ஆக இருந்ததிலிருந்து 2024-25ல் 82.5% ஆக உயர்த்தியது திராவிட மாடல் அரசின் மிகப்பெரிய சாதனையாகும் 🏫 மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் எதிர்காலத்திற்கான கல்வியை அணுகுவதை உறுதி செய்வதோடு மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய தரத்தை தமிழ்நாடு அமைத்து வருகிறது 🖤❤️ #ஸ்டாலின்_தொடரட்டும் Data Speaks - DMK Delivers 📊 Tamil Nadu is powering the future of education through digital classrooms 💻 With 82.5% #ICT enabled classrooms, #TamilNadu stands among the top performing states in #India, a massive rise from 43.5% (2021-22) to 82.5% (2024-25) 🏫 Under the leadership of Hon’ble CM Thiru @mkstalin, Tamil Nadu continues to set the benchmark in #education infrastructure and accessibility 🖤❤️ Credit: @Tamilnadustats #VoteForDMK
DMK tweet media
தமிழ்
9
177
241
4.4K
DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இனி ஒரு உயிரும் போக வேண்டாம்! இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்! இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன். #StopHindiImposition #SaveTamilLives
தமிழ்
292
1.7K
4K
179.7K
DMK
DMK@arivalayam·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில நிர்வாகிகளான ஆலோசகர் எஸ்.குமாரசாமி, மாநில தலைவர் கு.பாரதி, பொதுச்செயலாளர் எஸ்.ஜானகிராமன், செயலாளர் கே.சுரேஷ், பொருளாளர் பி.நாகராஜ், மாவட்ட இணை அமைப்பார்கள் எஸ்.யுவராஜ், எம்.உமார்பாரூக் ஆகியோர் நேரில் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களை இன்று (18.03.2026) மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் உழைப்போர் உரிமை இயக்கத்தின் (UUI) மாநில நிர்வாகிகளான ஆலோசகர் எஸ்.குமாரசாமி, மாநில தலைவர் கு.பாரதி, பொதுச்செயலாளர் எஸ்.ஜானகிராமன், செயலாளர் கே.சுரேஷ், பொருளாளர் பி.நாகராஜ், மாவட்ட இணை அமைப்பார்கள் எஸ்.யுவராஜ், எம்.உமார்பாரூக் ஆகியோர் நேரில் சந்தித்து சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை, மாநகராட்சியில் மீண்டும் பணியமர்த்திமைக்கு நன்றி தெரிவித்ததோடு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மதச்சார்பின்மை மற்றும் மாநில உரிமைகளுக்காக தி.மு.கழகத்திற்கும் – அதன் கூட்டணிக் கட்சிகளுக்கம் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் அதுபோது, மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார். *** #VoteForDMK
DMK tweet media
தமிழ்
6
125
254
4.8K
DMK
DMK@arivalayam·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில், வழக்கறிஞர் டாக்டர் பி.எச்.மனோஜ்பாண்டியன், Ex.M.L.A., வழிகாட்டுதலின்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில்,வழக்கறிஞர் டாக்டர் பி.எச்.மனோஜ்பாண்டியன், Ex.M.L.A., வழிகாட்டுதலின்படி இன்று (18.03.2026) மாலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான பி.விஜயகுமார், டி.நந்தகுமார், ஏ.சத்யா, சி.ராகவன், ஏ.டி.நாகேந்திரன், எஸ்.குணசேகரன், எம்.பெருமாள், ஜி.ஜெய்சிங்க, முத்துகுமரன், எஸ்.பாலாஜி, ரோட்டரி என்.சிவக்குமார், நிக்சன், திருமதி அதிசயா, டி.பவித்ரா, பி.லீனா உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோது, மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வழக்கறிஞர் டாக்டர் பி.எச். மனோஜ்பாண்டியன், Ex.M.L.A., தி.மு.க. சட்டத்துறை தலைவர் மூத்த வழக்கறிஞர் இரா.விடுதலை, வழக்கறிஞர் திருமாறன், வழக்கறிஞர் ஆர்.வி.பாபு ஆகியோர் உடனிருந்தனர். #DMK
DMK tweet media
தமிழ்
9
143
288
6K
DMK
DMK@arivalayam·
கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் உகாதி வாழ்த்துச் செய்தி! உகாதிப் பண்டிகையைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் உகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்தது தொடங்கி, நம் மாநிலத்தில் வாழும் மொழிச்சிறுபான்மையின மக்களுக்கு என்றும் காவலரணாகத் திராவிட முன்னேற்றக் கழக அரசு திகழ்ந்து வருகிறது. திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் தென்மாநில மக்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, இந்தி ஆதிக்கத்தையும் திணிப்பையும் வீழ்த்திட வேண்டும் என்பதையும், மாநில சுயாட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அண்மைக் காலங்களில், வரிப்பகிர்வில் தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தொகுதி மறுவரையறையால் நாடாளுமன்றத்தில் நமது வலிமையைக் குறைக்கும் சதி, திராவிடப் பண்பாட்டை மதிக்காத ஒன்றிய பா.ஜ.க. அரசின் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இந்த ஒற்றுமை தொடரவும், மென்மேலும் வலுப்பெறவும் என இந்த உகாதி நாளில் உறுதியேற்போம்! வண்ணக் கோலம், அறுசுவையும் அடங்கிய பச்சடி, விருந்துடன் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் உகாதியைக் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழிபேசும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் மீண்டும் எனது உகாதி நல்வாழ்த்துகள்! வரும் மே மாதம் அமையவுள்ள திராவிட மாடல் 2.0-அரசுக்கும் இந்த உகாதி தொடக்கமாக அமையட்டும்! *** #Ugadi
DMK tweet media
தமிழ்
14
162
281
4.4K
DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை? 🖤♥️ எங்கள் மேடைகளில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்! மறுபுறம், சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்! தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்☀️ #VoteForDMK
தமிழ்
200
1.2K
2.1K
40.2K
DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று! நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்! #VoteForDMK
தமிழ்
390
2.7K
5.5K
214.3K
DMK
DMK@arivalayam·
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமிகு. @PremallathaDmdk அவர்களது பிறந்தநாளையொட்டி, அவருக்குத் தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
DMK tweet media
தமிழ்
9
186
432
4.5K
DMK
DMK@arivalayam·
பத்திரிகைச் செய்தி சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு
DMK tweet mediaDMK tweet media
தமிழ்
22
202
546
14K
DMK retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
கடந்த 5 ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கி அதன் மூலமாக 386 மாணவர்கள் பயனடைந்து அயல்நாட்டில் உயர்கல்வி கற்க வழிவகைச் செய்த திராவிட மாடல் அரசு தொடரட்டும்; தமிழ்நாட்டு மாணவர்களின் இலட்சியப் பயணம் சிறக்கட்டும்! #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
17
218
305
3.8K
DMK
DMK@arivalayam·
திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊 இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதி மாநிலமாக தொடர்ந்து நீடிக்கும் தமிழ்நாடு, நாட்டின் ஜவுளிப் பொருளாதாரத்திற்குத் உந்துசக்தியாகத் திகழ்கிறது 🧵 2024-25ல், 7,997.17 மில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதியைப் பதிவு செய்துள்ளது தமிழ்நாடு. இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களை விடவும் மிக உயர்ந்த அளவாகும் 🌍 2020-21ல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதி, 2024-25ல் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்து, 29% வளர்ச்சியை எட்டியுள்ளது. இது இந்தியாவின் ஜவுளித் தலைநகராகத் தமிழ்நாட்டை வலுப்படுத்தியுள்ளது 📈 இந்த வளர்ச்சி, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் கட்டமைக்கப்பட்ட வலுவான தொழில் கொள்கை, உள்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதிச் சூழல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது 🖤❤️ #ஸ்டாலின்_தொடரட்டும் Data Speaks - DMK Delivers 📊 Tamil Nadu continues to power India’s textile economy and remains the No.1 textile exporter in the country 🧵 In 2024-25, #TamilNadu recorded $7,997.17 million in textile exports, the highest among all Indian states 🌍 From $6,193.39 million in 2020-21 to $7,997.17 million in 2024-25, #textile exports grew by 29%, strengthening Tamil Nadu’s position as India’s textile powerhouse 📈 This growth reflects strong industrial policy, infrastructure, and #export ecosystem built under the #DravidianModel of Hon’ble CM Thiru @mkstalin 🖤❤️ Credit: @TamilnaduStats #VoteForDMK
DMK tweet media
தமிழ்
22
415
612
8.7K
DMK
DMK@arivalayam·
234 தொகுதிகளில் மக்களின் எழுச்சியுடன் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரப் பரப்புரை கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் சிதைக்க தமிழ்நாடு என்றும் அனுமதிக்காது. மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். தி.மு.கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைத்திட ஒன்றிணைவோம்! #தமிழ்நாடு_தலைகுனியாது #VoteForDMK
தமிழ்
20
276
401
4.9K
DMK
DMK@arivalayam·
அரசியல் நாகரிகமோ, அடிப்படை அறமோ அ.தி.மு.க.வினருக்கு என்றும் இருந்ததில்லை. அதனால், பெண்களை இழிவு படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் தனது கட்சியைச் சார்ந்த இந்த நபரின் அருவருக்கத்தக்கப் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்! - கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள் #SayNoToNDA
DMK tweet media
தமிழ்
38
231
346
5K
DMK
DMK@arivalayam·
திராவிட மாடல் அரசுக்குப் பெண்களிடம் பேராதரவு இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் பழனிசாமி! அதிமுக ஆட்சியை விட திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள்! தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி! - மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு @regupathymla அவர்களின் செய்தியாளர் சந்திப்பு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் திரு. எஸ். ரகுபதி அவர்கள் இன்று (17-03-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக் குறிப்பு: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார். நாங்கள் இரண்டு தினங்களுக்கு முன் தமிழ்நாட்டு மக்களுக்கு எரிவாயு சிலிண்டர் தடையில்லாமல் கிடைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம். ஆனால் பழனிசாமி மாநில அரசை கண்டித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார். அதில் கூட கேஸ் சிலிண்டர் மக்களுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்கின்ற கோரிக்கையை தனது தோழமைக் கட்சியான ஒன்றிய அரசை நடத்தும் பாஜகவிடம் முன்வைக்க மறுத்துவிட்டார். அதிமுக ஆட்சியிலேயும் போதைப்பொருள் நடமாட்டம் இருந்தது. குட்காவுக்காக ஒரு அமைச்சர் மீதே எப்ஐஆர் போடப்பட்ட காலம் எல்லாம் அதிமுக ஆட்சியில் தான் நடந்தது. அதேபோல் நடிகர்களுக்குப் போதை பொருள் கொடுத்ததற்காக பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அதிமுக ஐடிவிங்கை சேர்ந்தவர். அதற்கு பிறகு அவர் நீக்கப்படுகிறார். இப்படி போதை பொருள் சப்ளை செய்கின்றவர்களையே தன்னுடைய கட்சியில் வைத்துக்கொண்டு, அதற்காக எப்ஐஆர் போடக்கூடிய குற்றவாளிகளை கூட தன்னுடைய கட்சியில் வைத்துக்கொண்டு இன்றைக்கு வந்து தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் என்கிறார். தமிழ்நாட்டில் எங்கேயும் போதை பொருள் உற்பத்தி கிடையாது. காண்ட்லா துறைமுகம் என்று குஜராத்தில் இருக்கிறது அதானியின் துறைமுகம். அங்கிருந்துதான் நிறைய போதை பொருள்கள் வெளியே வருகின்றன என்பது அகில இந்திய ரீதியிலேயான குற்றச்சாட்டு. அதனுடைய கடைமடைப் பகுதிதான் தமிழ்நாடு. எனவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போதை பொருட்கள் பல அளவுகளில் சென்றிருக்கும். ஆனால் தமிழ்நாடு என்பது கடைமடை பகுதியாக இருப்பதால் நம்முடைய காவல் துறையும் பல செக்போஸ்ட்களை அமைத்து கடுமையாக தடுத்து நிறுத்தி இருக்கிறோம். அந்த தடையையும் மீறி ஒரு சில போதை பொருட்கள் தமிழ்நாட்டுக்குள் வந்திருக்கலாம். அதையும் கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்குகளை போட்டு கொண்டிருக்கின்றது காவல்துறை. இந்த 75 நாட்களில் 246 கொலைகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் தான் அதிகம் என்பது தரவுகளோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த புள்ளி விவரங்களை மறுத்து பழனிசாமி சொல்லி இருந்தால் அது நியாயம். அதிமுக ஆட்சியில் எத்தனை படுகொலைகள் நடந்திருக்கின்றன என்பதையும் புள்ளி விவரத்தோடு ஒவ்வொரு ஆண்டுக்கும் சொல்லி இருக்கின்றோம். எனவே அதிமுக ஆட்சியை விட இன்றைக்கு சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட்டு மக்கள் பாதுகாப்போடு இருக்கிறார்கள். பெண்கள் மீது திடீர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பாசம் வந்திருக்கிறது. காரணம், பல்வேறு சர்வேக்களில் 80% பெண்கள் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்கின்ற தகவல்கள் வருகின்றன. எனவே பெண்கள் ஓட்டுக்களை தடுக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசுக்கு எப்பவுமே இந்த 100 நாள் வேலை எல்லாம் பிடிக்காது. பெண்கள் சம்பாதிப்பது சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக சம்பாதிப்பது இதெல்லாம் அவருடைய எஜமான் பாஜகவுக்கு பிடிக்காது. எனவே இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டில் பெண்களை அச்சப்படுத்துகின்ற வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை போல ஒரு போலி நாடகத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது தகர்த்தெறியப்படுகிறது. ஆனால் ஒரு சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கலாம். அதை எங்களுடைய காவல் துறை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றோம். இந்தியாவிலேயே விழிப்புணர்வோடு பணியாற்றுகின்ற காவல் துறை நம்முடைய தமிழ்நாடு காவல் துறை. அது எடப்பாடி பழனிசாமிக்கு மறந்து போய்விட்டது. கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். மூன்று நான்கு நாட்களில் பயணத்தை நிறுத்திட்டார். ஏனென்றால் அதிலும் தோல்வி. பிரச்சார பயணத்தில் தோல்வி கண்ட ஒரு அரசியல் தலைவர் இருக்கிறார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். இப்போது மீண்டும் தொடங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியையோ அவருடைய கொள்கையையோ மக்கள் நம்பத் தயாராக இல்லை. அதிமுகவின் அப்பாவி தொண்டர்கள் இப்படிப்பட்ட மோசமான தலைமை நமக்கு வந்துவிட்டது என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பலர் வெளியேறிவிட்டார்கள். இன்று அந்தக் கட்சி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. எனவே எப்பாடுபட்டாவது தன்னுடைய கட்சிப் பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரே இலக்கோடுதான் அவர் அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்கின்ற ஆர்வம் எதுவும் அவருக்கு கிடையாது. நிறைய புதிய போட்டியாளர்கள் வந்திருப்பதால் அதிருப்தி அடைந்திருக்கிறார். எதிர்கட்சி தலைவர் பதவி நமக்கு இல்லாமல் செய்திவிடுவார்களோ என்கின்ற அச்சம் எடப்பாடி பழனிசாமிக்கு வந்திருக்கிறது. எது எப்படியானாலும் வரப்போகிற தேர்தலில் எங்களுடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொன்னதை போல 200 தொகுதிகளுக்கு மேல் எங்களுடைய கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. எங்களுடைய கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. மக்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கின்ற கூட்டணி. எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். நிறைய வழக்குகள் வருவதாக சொல்கிறார். பெண்களுடைய ரகசியம் காப்பாற்றப்படுவதாலும் அவர்களுக்கு தைரியம் கொடுக்கப்பட்டிருப்பதாலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் புகார் கொடுக்க முன்வருகிறார்கள். கடந்த காலத்தில பழனிசாமி ஆட்சி காலத்தில் ரகசியம் காக்கப்படவில்லை. புகார் கொடுக்க வந்த பெண்ணின் மீதே வழக்கு போட்டு அதற்கு பிறகு போராடித்தான் அந்த வழக்கு மாற்றப்பட்டது. வரியெல்லாம் உயர்த்திவிட்டதாக குற்றத்தாட்டைச் சொல்லி இருக்கிறார். ஒன்றிய அரசின் 15வது நிதி ஆணயம் தனது அறிக்கையில் 2022-23 ஆம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு 2021-22 ஆம் ஆண்டில் சொத்து வரி தள விகிதங்களை (ஃப்ளோர் ரேட்ஸ்) அறிவிக்க செய்ய வேண்டும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ளது. எனவே வரி உயர்வுக்குக் காரணம் ஒன்றிய அரசே தவிர நாங்கள் அல்ல. எனவே ஒன்றிய அரசை எடப்பாடி பழனிசாமி கேட்கவேண்டும். ஒடிசா மாநிலம் அமைதியாக இருந்தது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு எத்தனை கலவரங்கள் எத்தனை கலாட்டாக்கள் என்று போய் பாருங்கள் தெரியும். இதுதான் பாஜகவின் உண்மை முகம். தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்குகிறது. இங்கே எந்தவிதமான அதிருப்திகளுக்கும் இடமில்லை. திராவிட மாடல் ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது தொடர வேண்டும் என்பதுதான் அவர்களுடைய ஆசை. இதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார். ஆதாரத்தோடும் புள்ளி விவரங்களோடும் சொல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறோம். அவருக்கு ஆதாரமும் கிடையாது புள்ளி விவரமும் கிடையாது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்: கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமூகமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வரும் 23-ஆம் தேதி வரை நேர்காணல்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெற உள்ளன. அதற்குள்ளாக அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு முறையான அறிவிப்புகள் வெளியாகும். நடிகர் ரஜினிகாந்த் அவர்களை திமுக மிரட்டுவதாகக் கூறப்படும் வதந்திகளில் உண்மையில்லை. ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார்; அவருக்குப் பின்னால் மிகப்பெரிய ரசிகர் மன்றமே இருக்கிறது. அவரை யாராலும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவர் அன்புக்கு மட்டுமே அடிபணிவார் என்பது எங்களுக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். 1996-லேயே எங்களுக்காகக் குரல் கொடுத்தவர் அவர். திமுக-வின் நெருங்கிய நண்பரான அவரை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை சிபிஐ அழைத்துள்ளது. அவர்களுக்குத் தகுந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய ஆற்றலும், தைரியமும் அவரிடம் உள்ளது. அவர் சட்டப்பூர்வமாகத் தனது விளக்கத்தைப் பதிவு செய்வார். தற்போது டாஸ்மாக்கில் ஊழல் நடப்பதாகக் கூறுவது ஆதாரமற்றது. 2021-க்கு முன்பிருந்த பழைய கணக்குகளை வைத்துக் கொண்டு தற்போது குறை கூறுகிறார்கள். எங்களது ஆட்சியில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை. 'திராவிட மாடல்' ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தருகிறார்கள். எங்களைப் பற்றிப் பரப்பப்படும் பொய்யான தகவல்கள், வரப்போகும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் தோல்வியையே உறுதிப்படுத்தும் என்று தெரிவித்தார். *** #SayNoToNDA
DMK tweet media
தமிழ்
10
114
195
2.8K
DMK
DMK@arivalayam·
C.V.Shanmugam is known for his condemnable speeches! - Thiru. T.K.S.Elangovan, DMK Spokesperson #SayNoToNDA
English
19
194
350
5.2K
DMK
DMK@arivalayam·
பிரச்சார பயணத்தில் தோல்வி கண்ட ஒரு தலைவர் இருக்கிறார் என்றால் அது திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான்! - மாண்புமிகு அமைச்சர் திரு @regupathymla அவர்கள் #SayNoToNDA
DMK tweet media
தமிழ்
7
146
212
2.8K
DMK
DMK@arivalayam·
10 முறை முதலமைச்சராக ஆன திரு.நிதிஷ் குமார் அவர்களையே முதல்வர் பதவியில் இருந்து விலக வைத்து பீகாரில் ஆட்சியை அபகரித்து உள்ளது பாஜக. ஊர்ந்து போய் முதலமைச்சர் ஆன பழனிசாமியை எல்லாம் ஊதி தள்ளிவிடுவார்கள். - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் #SayNoToNDA
தமிழ்
37
479
937
17.2K
DMK
DMK@arivalayam·
தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் - 2026 தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல் தலைமை கழக அறிவிப்பின்படி தமிழ்நாடு - புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விண்ணப்பம் செலுத்திய கழக வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று (17.03.2026) துவங்கியது. சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள், முதல் நாளான இன்று புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களை நேரில் சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
DMK tweet mediaDMK tweet mediaDMK tweet media
தமிழ்
8
204
398
8.6K
DMK
DMK@arivalayam·
சொன்னதைச் செய்தோம்.. செய்வதைச் சொல்வோம்! திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சிக்கு 2026-ல் மீண்டும் உதயசூரியன்! #VoteForDMK
தமிழ்
35
428
892
12K