Sriram GV

3.5K posts

Sriram GV banner
Sriram GV

Sriram GV

@sriramdvine

TVK Central chennai district executive committee member. Proprietor of Dvine events! Athiest,Scriptwriter & Asst director.

Chennai, India Beigetreten Ekim 2014
148 Folgt716 Follower
Angehefteter Tweet
Sriram GV
Sriram GV@sriramdvine·
தலைவர் தளபதியின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சென்னை மாவட்டம் சார்பாக 📍 தளபதி விலையில்லா விருந்தகம் 🏛 மாவட்ட தலைமை அலுவலகம் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் திரு.@BussyAnand மற்றும் பொதுச் செயலாளர் (தேர்தல்- பிரச்சாரம்) திரு.@AadhavArjuna அவர்களால் திறந்து வைக்கப்பட்டது!
Sriram GV tweet mediaSriram GV tweet mediaSriram GV tweet mediaSriram GV tweet media
தமிழ்
0
0
1
109
Sriram GV retweetet
Vignesh
Vignesh@vignesh_1718·
I’ve compiled all Manifesto’s using Claude. TVK is winning this election not only in perception, but in their people focused Manifesto. Idhu oru #WhistlePuratchi claude.ai/public/artifac… Please read! Key findings from the actual manifesto: AI: TVK proposes India’s first AI Ministry + GPU cluster + Tamil AI model. ADMK has zero AI policy. DMK mentions AI only in table of contents. Women: TVK ₹2,500 + 6 cylinders vs ADMK ₹2,000 + 3 cylinders vs DMK’s existing ₹1,000 scheme Youth: TVK ₹4,000/month vs ADMK’s ₹2,000 vs DMK’s unspecified amount Fishermen: TVK ₹20,000 ban compensation vs ADMK’s ₹12,000 (up from ₹8,000) 💰 P&L Tab 5-year revenue, expenditure, and AI savings breakdown for all 3 parties TVK’s AI ROI: ₹3,200 Cr invested → ₹44,200 Cr returned (1,281% ROI, payback in under 8 months) Net fiscal balance: TVK is the only party in surplus​​​​​​​​​​​​​​​​ #TVKManifesto2026 #TVKVijay#TVKforTN #VotforWhistle
Vignesh tweet media
English
62
873
1.8K
69.4K
Sriram GV retweetet
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
திறனற்ற ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் திருப்பூரில் திரண்ட மக்கள்!
தமிழ்
3
2.9K
9.5K
49.3K
Sriram GV retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
திமுகவின் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால், திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக வரும் செய்தி, நெஞ்சைப் பதற வைக்கிறது. மக்களை ஏமாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலிலும் 8000 ரூபாய் கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு அதைப் பயன்படுத்தி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் கூறி வருகின்றனர்.  இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஏமாற்றியாவது வெற்றியைப் பெற வேண்டும் என்று குட்டிக்கரணம் போட்டு வரும் திமுகவின் தோல்வி பயத்தின் அறிகுறி தான் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் அறிவிப்பு. சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தல் என்ன சதுரங்க வேட்டையா? உங்கள் அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்க, இதென்ன இரிடியம் விற்பனையா? மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எட்டாயிரம் ரூபாய் கூப்பன்? இன்று இந்த ஜனநாயக விரோத எட்டாயிரம் ரூபாய் கூப்பன் விநியோகம் செய்யும்போது திமுகவினரின் ஆபாச வசவுகளைத் தாங்க இயலாமல், மன உளைச்சலால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார் என்கிற செய்தி உங்கள் மனசாட்சியை உலுக்கவில்லையா ஸ்டாலின் சார்? இந்தக் கொடூரச் செயலுக்குக் காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அத்தோடு மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகாரச் சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு, அதிரடி  நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழ்
779
7.7K
17K
540.7K
Sriram GV retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026' மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும். ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு "தண்டனை"யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு "வெகுமதி"யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில்,  தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது.  இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்
590
7.1K
16.5K
723.2K
Sriram GV retweetet
Dr.Tk.Prabhu
Dr.Tk.Prabhu@drtkprabhu_TVK·
தோல்வி பயத்தில் காங்கிரஸ்? காரைக்குடியில் இன்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முதியவர்கள் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க முயன்ற போது அரசு அதிகாரிகள் அதை மாற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுகள் செல்லும் வகையில் மாற்றி உள்ளனர். இதனை எதிர்த்து குடும்பத்தினர் கேள்வி எழுப்பியபோதும், அதிகாரிகள் தரப்பில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தோல்வி நிச்சயம் என்று உணர்ந்த காங்கிரஸ், இது போன்ற உள்ளடி வேலைகளை பார்க்கத் தொடங்கியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களின் ஆதரவு இருந்தால், நல்லாட்சி வழங்கியிருந்தால், கடந்த 5 வருடங்களில் ஏதாவது நல்லது செய்து இருந்தால் இது போன்ற எந்த சதி முயற்சியும் தேவையில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகள் மக்கள் நலனில் செயல்படாமல், தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை திருப்ப முயல்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். ஒரு வாக்காளரின் ஓட்டு என்பது அவரது அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிப்பது, குறிப்பாக முதியவர்களின் வாக்குகளை மாற்றுவது மிக கடுமையான குற்றம். இது வெறும் தேர்தல் முறைகேடு மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளை மீறும் செயல். இதனை தட்டிக் கேட்ட குடும்பத்தினரையே மிரட்டுவது, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் என்பதற்கே எடுத்துக்காட்டு. இந்த சம்பவம் தொடர்பாக உடனடி, வெளிப்படையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், இது போன்ற செயல்கள் மற்ற இடங்களிலும் நடைபெற வழிவகுக்கும் என்பதால், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி, பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மக்களுடன் இணைந்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படும். டாக்டர். TK.பிரபு, சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர், தமிழக வெற்றிக் கழகம்.
Dr.Tk.Prabhu tweet mediaDr.Tk.Prabhu tweet mediaDr.Tk.Prabhu tweet media
தமிழ்
105
3.9K
8.8K
178.8K
Sriram GV retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம்  சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
TVK Vijay tweet media
தமிழ்
757
10.6K
47K
501.2K
Sriram GV retweetet
Iʀsʜᴀᴅ
Iʀsʜᴀᴅ@irshad5005·
This elderly woman is a visually impaired senior citizen from a coastal village... She is eligible for a postal ballot. While there were no relatives at her home, members of the #Congress party went there and forcibly made her cast her vote for the 'Hand' symbol 😳 In reality, she intended to vote for @TVKVijayHQ ... They have deceived her and forced her to vote for the Congress party's symbol against her will... Is this how @INCIndia protects democracy? Such anarchy... Should we bring those who take the law into their own hands back to power?... This video is being circulated across all media platforms... I urge the Election Commission to take strict action regarding this matter. @TNelectionsCEO @ECISVEEP
English
16
303
472
8.7K
Sriram GV retweetet
Polimer News
Polimer News@polimernews·
வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கரூர் த.வெ.க வேட்பாளர் மதியழகன்.! #Karur | #TVK | #TNElection2026 | #ElectionCampaign | #PolimerNews
தமிழ்
31
1.5K
6.8K
69.2K
Sriram GV retweetet
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சிட்கோ நகர் மற்றும் பலராமபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று காலையும், ராஜமங்கலம் தெரு, ஜெகநாதன் நகர், பாலாம்பிகை நகர், வள்ளுவர் நகர் மற்றும் பாபா நகர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டோம். பிரசாரத்தின் நடுவே ராஜமங்கலத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினோம். வழியே மூத்த பத்திரிகையாளர் திரு. ராஜ்தீப் சர்தேசாய் அவர்களை சந்தித்து உரையாடினோம். பிறகு, ஷ்யாம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் கலந்துரையாடினோம். இப்பகுதிகளில், சரியான வடிகால்கள் இல்லாததால் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது; குடிநீரோடு கழிவுநீரும் சாக்கடையும் கலக்கிறது; பல்வேறு சுகாதார குறைபாடுகள் மக்களை வாட்டி வதைக்கிறது. இவ்வாறு மக்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தில் பாராமுகம் காட்டியது திமுக. சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியினை மிகவும் பின்தங்கிய தொகுதியாக மாற்றியுள்ளது திமுக. ''எங்கள் வாழ்வாதாரம் முன்னேற எங்களுக்கு மாற்றம் தேவை'' என்று கழகத் தலைவர் அவர்களைத் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்க மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள். வில்லிவாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளரான என்னிடம் மக்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தேன். விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்! வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!! நம்மால் முடியும்!!! 1/3
Aadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet mediaAadhav Arjuna tweet media
தமிழ்
10
810
2.8K
19K
Sriram GV retweetet
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
உங்களில் ஒருவனா, உங்களுக்கான ஒருவனா, உங்களோடு கைகோர்த்து, உங்கள் கரம்பற்றி, உங்க வீட்டுப் பிள்ளையாகக் களத்தில் நிற்கும் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்! விசில் சின்னத்திற்கு வாக்களிப்போம்! வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம்!! நம்மால் முடியும்!!!
தமிழ்
16
2.1K
6.5K
45.3K
Sriram GV retweetet
𓃰 PRAVEEN 𓃰 VOTE FOR TVK (Whistle)
Guys, here you go! 🔥 "233 TVK candidates' photos with constituency names and serial numbers in a single video." If you like it, please follow, like, and retweet 🙌 I haven’t added any watermark, so if you repost this video, kindly give credit to this ID🙃. It will be more helpful 😁. @Revanthrajesh2 thanks for ur help bro🫡. And finally, don't forget to follow before like this video.😂 #VoteforTVK #TVKVijay@TVKVijayHQ
English
67
1.1K
2.3K
55.6K
Sriram GV retweetet
Aadhav Arjuna
Aadhav Arjuna@AadhavArjuna·
குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட, குமரி முனையில் பேரலையாகச் சங்கமித்த கன்னியாகுமரி மக்களுக்கு நன்றி!
தமிழ்
12
2.2K
7.3K
46.9K
Sriram GV
Sriram GV@sriramdvine·
திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மக்களுடன் நேரடி தொடர்புக்காக 24 மணி நேர உதவி எண் அறிமுகம் – எந்த நேரமும், எந்த பிரச்சனையும் நேரடி தீர்வு. மக்களின் குரலை கேட்டு செயல்படும் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. #Villivakkam #TVK #AadhavArjuna #24x7support
Sriram GV tweet media
தமிழ்
0
0
0
47
Sriram GV retweetet
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
நம் வெற்றித் தலைவர் விஜய் அவர்களைக் கொண்டாடத் திரளாகத் திரண்டு வந்த கன்னியாகுமரி மக்களுக்குக் கோடான கோடி நன்றிகள்! #VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
TVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet mediaTVK IT Wing Official tweet media
தமிழ்
27
2K
6K
47.7K
Sriram GV retweetet
Rajdeep Sardesai
Rajdeep Sardesai@sardesairajdeep·
Long day spent on Chennai’s election campaign trail. One of the more interesting candidates is TVK’s @AadhavArjuna . He is the son-in-law of the ‘lottery king’ Santiago Martin, the top private donor of electoral bonds. When I ask Arjuna about he being the ‘money-bags’ of the Vijay-led TVK, he answers: ‘I am no longer in any business… Don’t forget DMK got maximum bonds from my father in law. Did you ask them any questions?’ #ElectionsOnMyPlate
Rajdeep Sardesai tweet media
English
53
114
987
83.3K
Sriram GV retweetet
TVK Vijay
TVK Vijay@TVKVijayHQ·
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!
தமிழ்
1.7K
9.3K
27.3K
1.3M