
ருத்ரன் திருஅண்ணாமலை 🔥
11.3K posts




























அண்ணாமலை அவர்களால் நான் பலன் அடைந்து அவருக்கு துரோகம் செய்ததாக பரப்பும் கூட்டம், அதற்கான விளக்கம் இது! @itskJayaprakash @eena_vengayam அன்று பாரதி ஜனதா கட்சியால் பலனடைந்து விட்டு இன்று பிரதமருக்கு துரோகம் செய்தது இவர்கள் முட்டுக்கொடுக்கும் அண்ணாமலை அவர்கள் தான் நான் இல்லை. மேலும் அதில் நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன் முதல் ஆளாக வந்து நின்றார் என்றுதான். எனது வழக்கை முடிக்க உதவினார் என்று எழுதவே இல்லை. கொடுத்த ஸ்கிரீன்ஷாட் ரொம்ப சிம்பிள். நான் கைது ஆன போது. முதல் ஆளாக வந்து பேட்டி கொடுத்தார். வழக்கறிஞர்களை பாலோ செய்ய சொன்னார். அது பெயில் வாங்கும் வரை. பெயில் வாங்குவது ரொம்ப கடினம் என்று யாராவது இங்கு நினைத்துக் கொண்டால் ஒன்று சொல்கிறேன். ஒரு ஒரு வழக்குக்கும் இத்தனை நாளில் பெயில் கொடுப்பது கட்டாயம். அதும் முதல் கைது, நிறுவனம் வைத்திருக்கிறார் காரணங்களால் எனது வழக்கிற்கு ஏழு நாளில் பெயில் கொடுக்கும் வழக்கு தான். அவர் காலத்தில் நான் வாங்கிய வழக்குகள் நாலு. நயினார் அண்ணன் தலைவராக இருந்த காலத்தில் நான் வழக்கு வாங்கியது மூன்று. தனது காலத்தில் வாங்கிய 3 வழக்கை முடித்து வைக்க நயினார் அண்ணன் கொடுத்த வழக்கறிஞர்கள் நான்கு ( உயர்நீதிமன்ற வழக்கறிஞரையும் சேர்த்து) தனது காலத்தில் வாங்கிய வழக்கை முடித்து வைக்க அண்ணாமலை அவர்கள் கொடுத்த வழக்கறிஞர் முட்டை. ஆனால் இறுதியில்? அவர் காலத்தில் வாங்கிய வழக்கை கணக்கு காமித்து நயினார் அண்ணன் காலத்தில் நான் கைதான போது கொலை குற்றவாளியை போல பெயில் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் திமுக. ஆனால் இத்தனை முயற்சி செய்தும் நீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்களுக்கு தொடர்ந்து பேசி வந்த நைனார் அண்ணன் பற்றி இவர்கள் ஜூலை மாசம் எழுதியது "அண்ணாமலை நான்கு நாட்களில் எடுத்தார், நயினார் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்" என்பது. அதுவும் குறிப்பாக இரண்டு முறை கைது செய்யப்பட்ட போது அந்த வாரத்திலையோ அந்த நாள் காலையிலேயே எனக்கு நிச்சியம் நடக்க இருந்தது என்று அண்ணாமலை அவர்களுக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு முறை நான் கைது செய்யப்பட்ட போதும் அதனைப் போல் ஏதாவது ஒரு சுபகாரியம் தினத்தில் தான் கைது செய்யப்பட்டேன். அதனை இந்த நொடி வரை எனக்கு வெளியே சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததில்லை. இதனை ஜூலை மாதம் வெளியில் வந்து நானே அண்ணாமலை அவர்களிடம் ஏன் உங்கள் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் இப்படி எனக்கு உதவி செய்த நயினார் அவர்களை பற்றி அவதூறு பரப்புகிறார்கள்? என்று நான் கேட்ட பிறகு தான், அவருக்கு எதிராக நான் வேலை செய்வது போல சிலர் இன்னும் அதிகமாக எழுத ஆரம்பித்தார்கள். ஆனாலும் அண்ணாமலை அவர்கள் காலத்தில் அவர்களின் அட்வைசர் @ikkmurugan மற்றும் ஆல் இன் ஆல் இவரிடம் நான் வழக்கை முடிக்க உதவுங்கள் என்று கேட்டபோது "அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை உனக்கு ஒன்றும் ஆகாது என்று அண்ணன் சொல்ல சொன்னார்" என பொய் சொல்லிவிட்டு அவர்கள் மீதும் தன்னை சுற்றி இருந்தவர்கள் மீதும் இருந்த வழக்கை மட்டும் தெளிவாக கட்சியின் வழக்கறிஞர்களை வைத்து ஓசியில் முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். இறுதியாக தெளிவாக சொல்கிறேன்.!! நான் திருச்செங்கோட்டில் கோவிலுக்காக போராடி அடிபட்டு ரத்தம் சிந்தி, கொள்கைக்காக சித்தாந்தத்திற்காக கைதாகி எனது வாழ்க்கை இழந்து இப்போது வாரத்திற்கு இருமுறை கோர்ட்டுக்கு தமிழகம் முழுக்க நாய் போல அலைந்து போராடுவது அனைத்தும் பாஜகவுக்கு தான். அந்த "பாஜக வாங்கிய வாக்குகளையும், தான் போலியாக உருவாக்கிய உறுப்பினர் எண்ணையும் சரிசமம் எனவே பாஜகவில் இருந்தால் எதிர்காலம் இல்லை பாஜகவில் இருந்து வாருங்கள்" என்று அனைவருக்கும் போன் செய்து பேசினால் நான் அது யாராக இருந்தாலும் எதிர்ப்பேன். இந்த பதிவு நான் இன்று வெளியிடுவது எனக்கானது மட்டுமல்ல, என்னைப் போல கட்சிக்கு பலர் வந்து போராட்டங்களில் கலந்து கொண்டு வழக்குகள் வாங்கி அதுவும் குறிப்பாக இவர் காலத்தில் எண்ணற்ற வழக்குகள் வாங்கி கண்டுகொள்ளாமல் அவர் விட்டதால் ஒதுங்கியவர்களுக்காக எழுதுவது. நான் மாற்றி மாற்றி பேசுகிறேன் என்று தோன்றினால் எடப்பாடி அவர்களை பற்றி பலவற்றை பேசிவிட்டு எடப்பாடி அவர்கள் முதல்வராக வேண்டுமென்று இவர் மாற்றிப் பேசவில்லையா? திரும்ப இறுதியாக சொல்கிறேன். பாஜகவில் 2018இல் இருந்து பயணிக்கும் நான், படிப்படியாக வளர்ந்துள்ளேன். இந்த மூன்று நாட்கள் பேசுவதைப் போல உள்கட்சி விவகாரத்தை கடந்த ஆறு வருடத்தில் ஒரு நாள் கூட வெளியில் பேசாதவன் நான். இப்போது கட்சியின் நலனுக்காக இவர்களை போல ஆபாச கூட்டத்தை பற்றியும் போலியான உறுப்பினர்களை பற்றியும் பேச பேசினேன். கட்சியை வளர்த்துவார் என்று ஆதரவளித்தேன், அது நடக்காத போது ஆதரவு எதற்கு?? கொள்கை முக்கியம். கட்சி முக்கியம். தனிநபர் அபிமானம் கடைசி.
















