TVK MANIKANDAN
1.3K posts


2021 சட்டமன்ற தேர்தல்!
திமுக கூட்டணி -45 .6 %
அதிமுக கூட்டணி -39 . 7 %
சீமான் -6 . 8 %
பிப் 2024 விஜய் கட்சி ஆரம்பிக்கிறார்!
2024 போது தேர்தல்!
திமுக கூட்டணி -46 .9 %
அதிமுக கூட்டணி -41 . 33 % (அதிமுக-பாஜக தனி தனி அணி அமைத்தது:இரண்டையும் கூடினாலும்)
சீமான் -8 .1 %
அதிமுக பாஜக கூட்டணியாக வந்த பொழுதும் , தனித்தனியா வந்த பொழுதும் திமுக கூட்டணியே வென்றது!
கூடவே இம்முறை விஜய் வந்து இருக்கிறார் -அவர் பங்குக்கு வாக்கை பிரிப்பார்!
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த மாறுதலும் இல்லாமலும் , சில இசுலாமிய இயக்கங்கள் ,சில புதிய கட்சிகள், தேமுதிக ,கமலின் மக்கள் நீதி மய்யம் என்று சேர்ந்து இருக்கிறது-மொத்தத்தில் திமுக வாக்கை இழக்க எந்த காரணமும் இல்லை!
அதிமுக கூட்டணியில் இருந்து சில இசுலாமிய இயக்கங்கள் விலகி இருக்கின்றன ,தேமுதிகவின் வாக்கை இழக்கிறது ,பாமகவின் பாதி வாக்கை அய்யாவின் போர்கொடியால் இழக்கிறது , கூடவே OPS மூலம் பெற்றுவந்த வாக்குகளை இழக்கிறது -தினகரன் மூலம் வாக்குகளை பெரும்!
இப்ப விஜயின் வருகை மூலம் வாக்கு எவ்வளவு வரும் -யார் வாக்கை பிரிப்பார் என்ற பேசப்படும் எல்லாம் வெறும் யுகங்கள் தான்!
அதிமுக திமுகவின் இடங்கள் ஏறத்தாழ தெரிகிறது!
சீமானை அழகாய் முடித்துவைத்தார் விஜய் என்று தான் தோன்றுகிறது -அவிங்க எல்லாத்துக்கும் திமுக காரணம் திமுக காரணம் என்று சொல்லிகிட்டே தான் இருக்கானுங்க -ஆனால் சீமான் விழுந்தவன் இனி எழவே முடியாத அளவு அவன் பேசிய பழைய பேச்சுகள் இருக்கிறது!
மொத்தத்தில்
47 -50 % பெற்று திமுக கூட்டணி 180 இடங்களுக்கு குறையாமல் பெரும்!
32 -35 % பெற்று அதிமுக கூட்டணி 40 -50 இடங்கள் பெரும்!
8 -11 % பெற்றுவிஜய் கட்சி 0 இடங்களை பெரும்!
3 -4 % பெற்று சீமான் கட்சி 0 இடங்களை பெரும்!
மே நான்கு!😊
தமிழ்


4ம் தேதி திமுக மீண்டும் ஆட்சில வந்தா உண்மையான ஜனநாயகன் படத்தை விஜய்க்கு உதயநிதி காட்டுவன்
திமுக தீயசக்தின்னு சொன்ன விஜய்க்கு திமுக தீயசக்தி என்ன என்ன வேலை எல்லாம் காட்டும்ன்னு அப்பறம் தெரியும் அவனுக்கு..
ஒரு வேளை அதிமுக வந்தா கடைசி நாள்ல விஜய் பேசினத அவங்க மறக்க மாட்டாங்க
எப்படி பார்த்தாலும் விஜய்க்கு ஊமைகுத்து உறுதி..
@TVKVijayHQ
தமிழ்

மே04க்கு எண்ணை மிளகு மசாலாவுடன் அணில் 65க்கு ரெடியாக இருக்கும் சாட்டை 😂😂
@Saattaidurai Nov Avanuga CM கனவுல இருக்கானுக நீ செதைச்சுட்டே இருக்கியேணே.
தமிழ்

என்னுடைய 18 வயதிலிருந்து நேரடியாக அரசியல் களத்தில் பணிபுரிகிறேன். 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட எல்லா தேர்தலிலும் வாக்குச்சாவடியில் முகவராக பணியாற்றி இருக்கிறேன்.
மீசை கூட முளைக்காத பருவத்தில் முதன்முதலாக 1996ல் திமுக வேட்பாளர் மீ.அ.வைத்தியலிங்கத்துக்கு முகவராக அமர்ந்தபோது, அருகில் அமர்ந்திருந்த அதிமுக முகவரான ஸ்ரீஹரி மாமா என்னை மகிழ்ச்சியோடு வரவேற்றார்.
“இந்த வயசுப் பசங்கள்லாம் அரசியல்னா அசிங்கம்னு சினிமா பார்த்து கெட்டுப் போறானுங்க. நீ வந்தது சந்தோஷம் மாப்பிள்ளை” என்றார். வாக்குச்சாவடி வேலைகளை கற்றுக் கொடுத்தவர் அவர்தான்.
18 வயதானோருக்கு வாக்குரிமை கிடைத்து அப்போது ஆறேழு ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். அப்போதெல்லாம் First time voters வாக்களிக்க வருவதே அபூர்வம். தமிழ்நாட்டில் இந்த நிலை 2006 வரை நீடித்தது.
அரசியல் குடும்பத்தில் பிறக்காத முதல் முறை வாக்காளர்களின் வாக்களிக்கும் முறை வித்தியாசமானது. இங்கி பிங்கி பாங்கி போட்டுப் பார்த்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூட வாக்களிப்பார்கள். சும்மா த்ரில்லுக்கு நோட்டாவுக்கு வாக்களிப்பதும் உண்டு.
2006ஆம் ஆண்டு ஒரு புதிய கட்சி உருவானது. விஜயகாந்தின் தேமுதிக. அந்த தேர்தலில் இருந்துதான் முதல் முறை வாக்காளர்கள் அதிகளவில் வாக்கு செலுத்த வாக்குச்சாவடிக்கு வரத் தொடங்கினார்கள். தொடர்ச்சியாக 2016ல் நாம் தமிழர், 2019ல் மக்கள் நீதி மய்யம், 2026ல் தமிழக வெற்றிக் கழகம் என்று புதிய கட்சிகள் உருவாகி, முதல்முறை வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு தொடர்ச்சியாக அழைத்து வருவது என்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான விஷயமே.
ஷங்கர் படம் பார்த்து ‘அரசியலென்றால் சாக்கடை’ என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் இன்று பெருமளவில் இல்லை என்பதே ஆறுதலாக இருக்கிறது.
அரசியல் ஆர்வத்தோடு வரும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்சிசாரா இளைஞர்களை பின்னாளில் சித்தாந்தம், கொள்கை, மொழி, இனம், தலைவர்களின் கடந்தகால செயல்பாடுகள் மற்றும் தியாகங்கள் என்றெல்லாம் சிந்திக்கவைத்து பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கு இந்த புதிய கட்சிகள் ஆட்களை சேர்க்கின்றன என்பதை மறுக்க முடியாது.
ஆரம்பத்தில் passing clouds, floating votes என்று தேர்தல் அரசியலில் மதிப்பிடப்பட்டாலும் இந்த இளைஞர்களை ஈர்ப்பதற்கு பெரிய கட்சிகளில் ஏராளமான திட்டங்கள் உண்டு.
இன்று தற்குறி என்று இளைஞர்களை விமர்சிக்கிறார்களே என்று சமஸ் போன்றவர்கள் கவலைப்பட வேண்டாம். இவர்கள் பின்னாளில் ஞானஸ்தானம் பெற்று திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களாகவும் ஆவார்கள்.
அரசியல் என்றாலே ஊழல், சாக்கடை என்று நிராகரித்துவிட்டு நோட்டாவுக்கு ஓட்டு போடுவதோ அல்லது தேர்தல் நாளன்று ஷார்ட் ட்ரிப் ப்ளான் செய்வதோ என்றில்லாமல் சின்சியராக வாக்குச்சாவடிக்கு வருகிறார்களே என்று மகிழ்ச்சி அடையலாம்.
முதல் ஓட்டு என்பது காதல் மாதிரி. இரண்டு, மூன்று தேர்தல் கடந்த பின்புதான் கல்யாணம். அதன் பின்னரே இந்த வாக்காளர்களுக்கு எதற்கு முன்னுரிமை தந்து வாக்களிக்க வேண்டும் என்கிற தெளிவு பிறக்கும்.
முந்தாநாள் விஜயகாந்த். நேற்று சீமான், கமல். இன்று விஜய். நாளை அஜித்தோ, சிவகார்த்திகேயனோ. ரஜினி மட்டும் ஏமாற்றி விட்டார். எவ்வகையிலாவது வாக்காளர்கள் உற்பத்தி ஆகிக் கொண்டே இருப்பது வரவேற்கத்தக்க அம்சம்தான்.
இம்மாதிரி வருபவர்கள் எவ்வளவு சீக்கிரத்தில் தெளிவு பெறுகிறார்கள், எத்தகைய கொள்கைகளை நோக்கி நகர்கிறார்கள் என்று கவனிப்பதுதான் அரசியல் பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமே.
தமிழ்

திமுகுடன் ஆன கூட்டணி என்பது சீட்டுக்காகவோ,பணத்துக்காகவோ அல்ல வாக்குறுதிகளுக்காக.
ஏனெனில் 2021ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கூறிய பல வாக்குறுதிகளைத்தான் திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
வேறு ஒரு சிறிய கட்சி
சொன்னதை நாமே ஏன் செய்ய வேண்டும்? என்று அவர்கள் சிந்திக்காமல்,இதனால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படுமா?என்பதையே முன்னிட்டு செயல்பட்டனர்.
ஆட்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் தான்,ஆனால் அந்த வாக்குறுதிகளின் உண்மையான முதல்வர் கமல்ஹாசன் தான்🔥.
ஆண்டவர் ஆணையிட்டால் அது நிச்சயம் நடைபெறும்.ஆண்டவர் சொல்லும் இடத்தில் இருக்கிறார்,
அதை செயல்படுத்தும் இடத்தில் #DMK அரசு இருக்கிறது.
அதனால் இது மக்கள் நீதி மய்யத்தின் வெற்றியே.இதை நாம் எதிர்ப்பது,நம்முடைய சொந்த வாக்குறுதிகளை நாமே மறுப்பதற்குச் சமம்.
#KamalHaasan #MakkalNeedhiMaiam

தமிழ்

கருப்பு சிவப்பு சைக்கிள்…
ப்ரோ chatgpt-ல grammar செக் பண்ண போட்டுட்டு copy பண்ணும் போது “ எடுக்க மறந்துட்டீங்க பாருங்க
குட்டி@Ak_Annna_
@VinodhiniUnoffl Vijay will never go to Arivalayam as a watchman like Kamal.”
தமிழ்
TVK MANIKANDAN 리트윗함
TVK MANIKANDAN 리트윗함


































