Sabitlenmiş Tweet
Karthik Bharath
103.9K posts


சென்னையில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்
பாமக தலைவர் டாக்டர்
#அன்புமணிராமதாஸ்
முனைவர் #சௌமியாஅன்புமணி MLA அவர்களும் பங்கேற்றனர்
@draramadoss
@Sowmiyanbumani




தமிழ்
Karthik Bharath retweetledi

எங்களுக்கு வேலை கொடுங்கள், நம்மிடம் உள்ள தன்னலமற்ற சக்தியை நாம் பயனபடுத்த வேண்டும்!
அடுத்தடுத்து தலைவரிடம் கட்சியை பலப்படுத்தும் வேலையக் கேட்ட பாமக எம்எல்ஏ வைத்திலிங்கம் அவர்கள்!
#AnbumaniRamadoss
தமிழ்
Karthik Bharath retweetledi
Karthik Bharath retweetledi

அண்ணன் அன்புமணி கூறும்
இந்த கருத்து 100 % உண்மை...
பிக் பாஸ் மட்டுமல்ல ஐபிஎல், திரை படங்கள் என வரிசையாக செல்லலாம்..
விரைவில் தெளிவான அரசியலை தமிழக இளைஞர்கள் அரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது..💯👍
#AnbumaniSpeech
#PattaliPolitics
#PattaliMakkalKatchi
தமிழ்
Karthik Bharath retweetledi
Karthik Bharath retweetledi

ஆண்டுக்கு 3 லட்சம் தாய்மார்களின் உயிர் காப்பு:
பயணத்தின் போதே பிறந்த 1500 குழந்தைகள் -108 அவசர ஊர்தித் திட்டம் பெருமையளிக்கிறது!
தமிழ்நாட்டில் 2025-26ஆம் ஆண்டில் 7.82 லட்சம் மகப்பேறுகள் நிகழ்ந்திருப்பதாகவும், அவற்றில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் மிகவும் நெருக்கடியான காலத்தில் 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குழந்தைப்பேறு அடைந்திருக்கிறார்கள் என்றும் அவசர ஊர்திகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் EMRI Green Health Services நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஓராண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட கருவுற்ற பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதில் 108 அவசர ஊர்தி ஆற்றிய பங்லை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.
கடந்த ஆண்டில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் மருத்துவமனைகளுக்கு 108 அவசர ஊர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனைகளுக்கு செல்லும் வழியில் அவசர ஊர்தியிலேயே மகப்பேறு நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் இதேபோல் 1888 குழந்தைகள் அவசர ஊர்திகளில் பிறந்திருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 500 குழந்தைகளில் ஒன்று அவசர ஊர்தியில் பிறக்கின்றன என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் அவசர ஊர்தி என்பது நகர்ப்புறங்களில் பணக்காரர்களுக்கு மட்டுமான சேவையாகவே இருந்தது. ஏழைகள், அதிலும் கிராமப்புற ஏழைகள் இந்த சேவையை பயன்படுத்துவது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த நிலையை மாற்றியது நான் தான் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மத்திய சுகாதார அமைச்சராக 2004-ம் ஆண்டு பொறுப்பேற்ற நான், 2005-ம் ஆண்டில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் தொடங்கினேன். அதன் ஒரு கட்டமாகத் தான் 108 அவசர ஊர்தி சேவை தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 2004-ஆம் ஆண்டில் 111 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம் இப்போது 35 ஆகவும், 2004-ஆம் ஆண்டில் 35 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் இப்போது 8.20 ஆகவும் குறைந்திருப்பதற்கு 108 அவசர ஊர்தி சேவை ஆற்றிய பங்கு அளப்பறியது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது அதிகாரத்தை சுவைப்பதற்காக அல்ல; அதிகாரத்திலிருந்து நாம் விலகினாலும் நமது திட்டங்கள் நம் பெயரை காலம் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் தளராத நம்பிக்கை எனக்கு உண்டு. அந்த வகையில் 108 அவசர ஊர்தி சேவை, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகைக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம், புகையிலைப் பொருள்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படம், குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளுக்குத் தடை என நான் கொண்டு வந்த திட்டங்கள் வரலாறு உள்ள வரை எனது பணிகளுக்கு சான்றாக இருக்கும் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தற்போது அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள் -977, மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகள்- 307, பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள்- 65, பிற சேவைகளுக்கானவை - 4 என மொத்தம் அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை 2500 ஆக உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த சேவை இன்னும் சிறப்பாக கிடைக்கும். எனவே தமிழ்நாட்டில் இயக்கப்படும் 108 அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை 2500 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
தமிழ்
Karthik Bharath retweetledi
Karthik Bharath retweetledi

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமக்கு நேர்ந்த அவலத்தை நேரடியாக வெளிப்படுத்துவதற்கு கூட முடியாத நிலையில் உள்ள இளம்பெண்ணை மனித மிருகங்கள் சீரழிந்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
கறம்பக்குடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பணியாற்றி வரும் அந்தப் பெண் , வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது, அங்கு மகிழுந்தில் வந்த கும்பல் அவரை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு சென்றிருக்கிறது.
அதேபோல், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா வணிகம் குறித்து செய்தி வெளியிட்டதால், ஆத்திரமடைந்த கஞ்சா வணிகக் கும்பல் ஒன்று, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் காஜா முகைதீன் என்பவரை கத்தியால் குத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த செய்தியாளர் தஞ்சாவூர் மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பெருந்தீமைகளில் குறிப்பிடத்தக்கது கஞ்சா வணிகமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்தது ஆகும். திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் அத்தகைய குற்றங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடர்வது கவலையளிக்கிறது.
தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார். திமுக அரசில் ஏற்பட்ட தீமைகளை ஒழிப்பதில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான ஆர்வம் காட்டுவதற்கு இந்த நிகழ்வுகள் சான்றாகும்.
புதுக்கோட்டை அருகே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்விலும், கஞ்சா வணிகக் கும்பலால் செய்தியாளர் கத்தியால் குத்தப்பட்ட நிகழ்விலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இத்தகைய குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
தமிழ்
Karthik Bharath retweetledi

வேலைவாய்ப்பு மோசடி: செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு
தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்!
@draramadoss
@CMOTamilnadu

தமிழ்
Karthik Bharath retweetledi

வேலைவாய்ப்பு மோசடி: செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு
தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி அப்பாவி இளைஞர்களிடம் மோசடியாக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமான பரிமாற்றம் செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
திமுகவைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி 2011-15 காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாக கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது, இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, வேலைவாய்ப்பு மோசடி மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 410 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனாலும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதி அவசியம் என்பதாலும், செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதாலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியவில்லை.
செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணைக்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதி அப்போதைய ஆளுனர் ஆர்.என். இரவி அவர்களிடம் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அரசிடம் தான் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கையை முந்தைய அரசு நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து தான் இப்போது அமலாக்கத்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வாங்கியதை செந்தில் பாலாஜியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவ்வாறு பாதிக்கப்பட்ட பலருக்கு நேரடியாக பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் உயர்நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடி மூலம் கிடைத்த பணத்தை செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய குற்றங்களைச் செய்த ஒருவர், திமுக அரசால் உருவாக்கித் தரப்பட்ட பாதுகாப்புப் போர்வையை பயன்படுத்திக் கொண்டு தப்பிப்பதை அனுமதிக்கக் கூடாது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் நிலைப்பாடும் இத்தகையதாகவே உள்ளது. லஞ்சத்திற்கு எதிராக ஜீரோ சகிப்புத் தன்மையுடன் த.வெ.க. அரசு செயல்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் 87-ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு செயல்வடிவம் தரும் வகையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
தமிழ்
Karthik Bharath retweetledi
Karthik Bharath retweetledi

@AMRBrother @Cuddalore_Dt @cudpoliceoffi @CMOTamilnadu @TVKVijayHQ தங்களின் (TWITTER Karthik Bharath) கோரிக்கை மனுவானது (மனு எண் 78) சம்பந்தப்பட்ட DM TASMAC 9445029733 அவர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி To புவனகிரி செல்லும் வழியில் கொத்தவாச்சேரி மெயின் ரோட்டில் இருக்கும் இந்த கடையை உடனடியாக மூட வேண்டும்
அருகில் பேருந்து நிலையம்
கோயில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்
@cudcollector
@Cuddalore_Dt
@cudpoliceoffi
@CMOTamilnadu
@TVKVijayHQ

தமிழ்
Karthik Bharath retweetledi

தமிழக மக்களின் நலன் - உரிமைகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கும் அவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளாக மிக மோசமான ஆட்சியை நடத்தி வந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தது. திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு மகத்தானது. திமுகவுக்கு எதிரான அலையை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அறுவடை செய்யும்; அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால், தமிழக மக்களின் விருப்பமும், தீர்ப்பும் வேறாக அமைந்திருக்கிறது. மக்களின் இந்த முடிவை பா.ம.க. ஏற்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே மக்களின் நலன்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதியாக போராடி வருகிறது. இனி வரும் காலங்களிலும் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களத்தில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பா.ம.க - கூட்டணி கட்சிகளுக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@EPSTamilNadu @NainarBJP @TTVDhinakaran @GK__Vasan @jaganmoorthy_m

தமிழ்
Karthik Bharath retweetledi
Karthik Bharath retweetledi

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பதவியேற்ற பின் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க தர்மபுரிக்கு வருக தந்த
@Sowmiyanbumani அவர்களை
வரவேற்ற பாமக நிர்வாகிகள்..
#சௌமியாஅன்புமணி



தமிழ்










