DMK

65.6K posts

DMK banner
DMK

DMK

@arivalayam

DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk

Tamil Nadu Katılım Mart 2011
191 Takip Edilen965.3K Takipçiler
DMK
DMK@arivalayam·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் முன்னிலையில், இன்று (26.3.2026) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தஞ்சை மத்திய மாவட்டம், அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி அவர்கள் தலைமையில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் ஏழுப்பட்டி ஜி.பாலு, அம்மாபேட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.கோவிந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் என்.ஏ.பட்டாபிராமன், சரத்குமார், மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஐடி விங் இணைச் செயலாளர் சி.புருஷோத்தமன் - துணைச் செயலாளர் அன்பன்தமிழ், வழக்கறிஞர் அணி எஸ்.பிரபு, ஆசிரியர் கே.சந்திரமோகன், எஸ்.பாலமுருகன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தஞ்சை மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் சாக்கோட்டை அன்பழகன், எம்.எல்.ஏ., தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.பழனிவேல், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, எம்.பி., பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தார். *** #DMK
DMK tweet media
தமிழ்
3
107
342
11.3K
DMK
DMK@arivalayam·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ தொகுதி பங்கீடு. #TNvsNDA
DMK tweet media
தமிழ்
11
68
160
2.8K
DMK
DMK@arivalayam·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி தொகுதி பங்கீடு. #TNvsNDA
DMK tweet media
தமிழ்
1
55
137
3K
DMK
DMK@arivalayam·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழர் தேசம் கட்சி தொகுதி பங்கீடு! #TNvsNDA
DMK tweet media
தமிழ்
17
84
263
10.1K
DMK
DMK@arivalayam·
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்குலத்தோர் புலிப்படை கட்சி தொகுதி பங்கீடு. #TNvsNDA
DMK tweet media
தமிழ்
3
60
146
3.2K
DMK
DMK@arivalayam·
The AIADMK list is out, and it doesn't feature any women or Dalit names! - Dr @DrKanimozhiSomu M.P Avl #TNvsNDA
English
133
146
326
47.1K
DMK retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
திராவிட மாடல் ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் தரம் உயர்த்தி, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் 2024 -2025 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவிகள் 76% மற்றும் மாணவர்கள் 71% சேர்க்கை உயர்ந்துள்ளது. தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். மாணவச் செல்வங்களின் எதிர்காலம் ஒளிமயமாகட்டும்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
11
253
352
5.5K
DMK
DMK@arivalayam·
The AIADMK - BJP alliance seems really weak. It is very clear that they are not confident about winning! - Tmt @ThamizhachiTh M.P Avl #TNvsNDA
English
21
134
239
4.7K
DMK
DMK@arivalayam·
NDA கூட்டணியின் தலைமை பாஜக, அதன் முடிவுகளை எடுப்பவர் அமித்ஷா என்ற நிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள், திமுகவை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை - மாண்புமிகு போக்குவரத்து (ம) மின்சாரத்துறை அமைச்சர் திரு. @sivasankar1ss அவர்கள். #TNvsNDA
தமிழ்
19
136
202
3K
DMK
DMK@arivalayam·
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் - 2026 தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இம்மானுவேல் சேகரனார் மிஷின் ஆதரவு! நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு, ‘இம்மானுவேல் சேகரனார் மிஷன்’ ஆதரவு தெரிவித்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ஒட்டப்பாலம் "இம்மானுவேல் சேகரனார் மிஷனின்" கௌரவத் தலைவரும் - தியாகி இம்மானுவேல் சேகரனார் முதல் பேரனுமான இரமேஷ் தேவேந்திரர் அவர்கள், இன்று (26.03.2026) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களை நேரில் சந்தித்து தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற "இம்மானுவேல் சேகரனார் மிஷன்" நிர்வாகிகள் பாடுபடுவார்கள் என உறுதி அளித்தார்.
DMK tweet media
தமிழ்
14
156
481
12.1K
DMK
DMK@arivalayam·
கருப்பு சிவப்பு வேட்டி கட்டிய தி.மு.க தொண்டன் இருக்கும் வரை என்றைக்குமே பாசிச சக்திகளால் தமிழ்நாட்டுக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது! கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்கள் #VoteForDMK
DMK tweet media
தமிழ்
27
242
386
4K
DMK retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
🔹 தோழமைக் கட்சிகளின் விருப்பத்தையும், புதிய கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்துள்ள சூழலையும் உணர்ந்து ஜனநாயகப்பூர்வமாகத் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளோம்! 🔹 தோழமை இயக்கங்களுக்கு நான் அளித்துள்ள வெற்றி உத்தரவாதத்தை நிறைவேற்ற உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டுள்ளதை நேர்காணலில் நன்குணர்ந்தேன். 🔹 234 தொகுதிகளும் நம் தொகுதிகள்தான்! கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களும் நம் சின்னங்கள்தான்! 🌄 #DravidianModel 2.0-விலும் தோழமை தொடர்வோம்! களத்தினில் #வெல்வோம்_ஒன்றாக! #LetterToBrethren #VoteForDMK
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaM.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
173
1.3K
2.6K
97.5K
DMK
DMK@arivalayam·
DMK opposes the draconian 2026 Transgender Persons Amendment Bill for attacking constitutional rights upheld by the Supreme Court! - Tmt @ThamizhachiTh M.P Avl #ParliamentSession
English
3
133
175
3.9K
DMK
DMK@arivalayam·
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் 175 இடங்களில் களம் காண்கிறது. 🌄 - மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் #TNvsNDA
DMK tweet media
தமிழ்
23
259
416
4.8K
DMK retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
2016 - 21 அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே அரசு பணி வழங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசு கடந்த 5 ஆண்டுகளில் விளையாட்டுத்துறையில் சாதனைப் படைத்த 301 வீரர்கள் வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வழங்கியுள்ளது. தி.மு.கழகத்தின் நல்லாட்சி தொடரட்டும். தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகளை ஈட்டி பெருமை சேர்க்கட்டும்! 🌄 #VoteForDMK
DMK IT WING tweet media
தமிழ்
15
355
637
10.9K
DMK
DMK@arivalayam·
, தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உங்களில் ஒருவன் மடல் #TNvsNDA
DMK tweet media
தமிழ்
19
187
288
3.8K
DMK
DMK@arivalayam·
கூட்டணியின் வலிமைக்குச் சான்று! கழகக் கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன் எம்.பி., அவர்கள் தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் உங்களில் ஒருவன் மடல் #TNvsNDA
DMK tweet media
தமிழ்
10
215
400
5.5K
DMK
DMK@arivalayam·
தோழமை தொடர்வோம்.. களத்தினில் வெல்வோம் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். 2026 சட்டமன்றத் தேர்தல் களத்திற்கான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடும், கழகத்தின் சார்பில் விருப்பமனு அளித்தவர்களுடனான நேர்காணலையும் நிறைவு செய்துவிட்டு, அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பத்தாண்டுகால படுமோசமான அ.தி.மு.க ஆட்சியினால் தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளிலும் ஏற்பட்ட சீரழிவுகளைச் சரிசெய்து, கடந்த ஐந்தாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை இந்திய அளவில் உயர்த்திக் காட்டியிருக்கிறோம். இந்தப் பெரும் முயற்சிக்கும் சாதனைக்கும் துணை நின்ற கொள்கைவழித் தோழமை இயக்கத்தினரின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. அதனை மதித்து உணர்ந்தே இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் ஜனநாயகப்பூர்வமாக நடைபெற்றன. நமது கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ள காரணத்தால், உரிய அளவில் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய சூழலும் தேவையும் இருப்பதை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் தோழமைக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களின் தலைவர்களுடனும் ஆலோசித்தே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, ஒப்பந்தங்கள் நிறைவேறியுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களிடமும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் எம்.பி. அவர்களிடமும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்களிடமும் மற்ற இயக்கத் தலைவர்களிடமும் தொகுதிப் பங்கீட்டு நிலவரங்களை உங்களில் ஒருவனான நான் நேரில் விளக்கினேன். அவர்கள் எதிர்பார்க்கின்ற எண்ணிக்கையில் உள்ள நியாயத்தை மதித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெறுவதற்கேற்ப எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டிய சூழல் இருப்பதையும் அவர்களிடம் விளக்கமாகச் சொன்னேன். எப்போதும் என் மீது அன்பும், திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்ற உறுதியும் கொண்ட நமது தோழமை இயக்கத் தலைவர்களும், தங்கள் இயக்க நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து, உரிய அவகாசம் எடுத்துக்கொண்டு, பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மனப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில்தான் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தோழமைக் கட்சிகளை நம்முடைய அங்கமாகத்தான் பார்க்கிறேன். அவர்களுக்கான தொகுதிகளில் முழுமையான வெற்றியை உறுதி செய்ய அவர்களின் சகோதரனாக என் உத்தரவாதத்தையும் வழங்கியிருக்கிறேன். தேர்தல் களத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றைப் பரிசீலித்து எந்தளவுக்கு வழங்க முடியுமோ அவற்றை வழங்குவதும் கூட்டணிக்கான நடைமுறையாகும். அதனை ஜனநாயகத்தன்மையுடன் நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கழகக் கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை எடுத்துரைத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நண்பர் கமல்ஹாசன் எம்.பி., அவர்கள் தனது மனம் திறந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையை மனதார வரவேற்கிறேன். அதுபோலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் மனப்பூர்வமாகத் தெரிவித்திருக்கும் கருத்துகள், 2019 முதல் தொடர்ந்திடும் நமது கூட்டணியின் வலிமைக்குச் சான்றாகும். தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலைத் துணிவுடன் எதிர்த்து நிற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தோளோடு தோள் நிற்பவை நம் தோழமை இயக்கங்கள். மதச்சார்பின்மை - மாநில உரிமை – சமூகநீதி - சமத்துவம் இவற்றை அடித்தளமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணிதான் நம்முடையது. அதில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட வழி ஏற்படாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தி.மு.க கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்பிட முயற்சி செய்கிறார்கள். திசைதிருப்ப நினைக்கும் வதந்திகளை உடன்பிறப்புகள் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து, தோழமைக் கட்சியினருடன் இணைந்து களத்தில் பணியாற்றி, வெற்றியை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட குழு நடத்தி வந்த நிலையில், தி.மு.க.வின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளை ஒவ்வொரு நாளும் சந்தித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறேன். மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி, 23-ஆம் தேதி வரை, இடையில் ரமலான் திருநாள் விடுமுறை தவிர்த்து, 6 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்றுள்ளது. கழகத்தின் நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு.  அதுவும் இந்த முறை 16 ஆயிரத்து 500 உடன்பிறப்புகள் கலந்துகொண்ட கொள்கை உறவுத் திருவிழா. மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணிநேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடைபெற்றது. விருப்பமனு அளித்த உடன்பிறப்புகளின் முகம் கண்டபோது எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தினால் அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்து ஊக்கமுடன் பணியாற்ற முடிந்தது. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களும் இனமானப் பேராசிரியர் அவர்களும் விருப்பமனு அளித்த ஒவ்வொரு உடன்பிறப்பையும் தனித்தனியாக அழைத்து நேர்காணல் நடத்திய தேர்தல்கள் உண்டு. அதன்பிறகு, மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிகளைச் சேர்ந்த அனைவரையும் ஒன்றாக அழைத்து, மொத்தமாக நேர்காணல் செய்ததும் உண்டு. இந்த முறை, ஒவ்வொரு தொகுதிவாரியாக விருப்பமனு அளித்தவர்களை அழைத்து நேர்காணல் நடைபெற்றது. உடன்பிறப்புகள் தங்கள் வாழ்த்துகளை எனக்குத் தெரிவித்தனர். உடன்பிறப்புகளின் உழைப்பையும் அனுபவத்தையும் மதித்து உங்களில் ஒருவனான நான் நேர்காணல் நடத்தினேன். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகள், அதனால் பெருகியிருக்கும் பொதுமக்களின் ஆதரவு, தோழமைக் கட்சிகளின் பலம், கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த பணி இவை குறித்து அவர்களிடம் கேட்டறிந்தேன். அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் கழகத் தலைமை நிர்வாகிகள் முன் தங்களுக்கான நேர்காணல் ‘சீட்’ ஒதுக்கப்பட்டிருந்ததில் விருப்பமனு செய்திருந்த ஒவ்வொரு தொகுதி உடன்பிறப்புகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம், “உங்கள் தொகுதியில் தலைமை யாருக்கு சீட் கொடுத்தாலும் நீங்கள் இதே மகிழ்ச்சியுடன் களத்தில் பணியாற்ற வேண்டும்” என்று கழகத் தலைவர் என்ற முறையில் தெரிவித்தேன். தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளும் தி.மு.க.வின் தொகுதிகள்தான் என்பதால், 234 தொகுதிகளிலும், இந்த மு.க.ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்ற உணர்வுடன் வேலை செய்ய வேண்டும் என்று சொன்னபோது, உடன்பிறப்புகள் அனைவரும், வெற்றி ஒன்றுதான் எங்கள் இலக்கு என்ற உறுதியை அளித்தனர். உடன்பிறப்புகள் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களிடமும் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்குப் பெரும் செல்வாக்கு இருக்கிறது.  நம்பிக்கையும் செல்வாக்கும் வெற்றியாக விளைவதற்கு நாம் அடுத்த 4 வாரங்களும் அயராமல் உழைத்திட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு நிறைவில், தங்கள் கட்சி சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகள் போக, தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுமாக இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது. உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். மதவாத அரசியலையும், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் துரோகத்தையும் எதிர்த்து நின்று, எல்லார்க்கும் எல்லாம் என்கிற ஆட்சி தொடர்ந்திடவும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காத்திடவும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கான வெற்றிக் களத்தில் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்! அன்புடன் மு.க. ஸ்டாலின் திருவள்ளுவர் ஆண்டு 2057 பங்குனி 11 25-03-2026
DMK tweet media
தமிழ்
115
873
1.7K
225.2K
DMK
DMK@arivalayam·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்களின் இரங்கல் செய்தி
DMK tweet media
தமிழ்
8
100
215
9.1K
DMK
DMK@arivalayam·
ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது? பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. "இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது?" என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் #TNvsNDA
DMK tweet media
தமிழ்
6
193
252
2.8K