Mahesh G
432 posts



I dare you… Take a pen and paper, write something in your mother language… And post the picture here 👇





நீட் தேர்வு பள்ளிகளின் முக்கியத்துவத்தை குறைத்து, கோச்சிங் நிறுவனங்களின் வணிக வேட்டைக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தது தமிழ்நாடு! dummy schools அதிகரித்து விட்டன;. நாள்தோறும் 6 மணி நேரம் கோச்சிங் மையங்களில் மாணவர்கள் வதைபடுகிறார்கள் என்ற அவலம் டெல்லியை இப்போதுதான் உறுத்தத் தொடங்கி இருக்கிறது. ப்ளஸ் ஒன் படிக்கும்போதே நீட்டை நடத்திவிடலாமா? கோச்சிங் மையத்தில் 3 மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது என உத்தரவு போடலாமா? பெயரளவுக்கு பள்ளிகளில் (dummy schools) அட்டன்டன்ஸ் போட்டுவிட்டு முழுநேரமும் கோச்சிங் சென்டரில் இருப்பதை தடுப்பது எப்படி? பழையபடி ப்ளஸ்2 மதிப்பெண்ணுக்கு மதிப்பு தரலாமா? என்றெல்லாம் வல்லுநர் குழுவை அமைத்து ஆலோசனை கேட்கத் தொடங்கி இருக்கிறது ஒன்றிய அரசு. நீட் என்பது சமமற்ற வாய்ப்பு! நீட் என்பது ஏழைகள், கிராமப்புற மக்களுக்கு எதிரான அநீதி! கோச்சிங் மையங்களில் லட்சக்கணக்கில் செலவழிக்கும் வசதியானவர்களுக்கு சாதகமானது! பள்ளிகளின் போதனை; ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை ஒன்றுமில்லாமல் செய்து, கல்விமுறையை சீரழித்துவிடும் என்ற தமிழ்நாட்டின் வாதம் சரியானது என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி இருக்கிறது! கோச்சிங் நேரக் கட்டுப்பாடு நடைமுறை சாத்தியமானதா? பிளஸ் ஒன்னில் நீட் என்பது சுமையை குறைக்குமா? பிளஸ்2 மதிப்பெண் போதும்; நீட் விலக்கு தாருங்கள் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இப்போதாவது ஏற்பார்களா? நீட் ஒரு சர்வரோக நிவாரணி; அருமருந்து என்று தொடர்ந்து பிடிவாதம் காண்பிக்கப் போகிறீர்களா? #NEET #TamilNadu #NEETInjustice













