மீனா நாயனார்
30 posts

மீனா நாயனார்
@MeenaNayanar
தமிழ்த்தேசியர், ஆசிவகர், தமிழரின் உண்மையான வரலாற்று ஆய்வு, முனைவர் திரு. பாண்டியன் ஐயாவின் மாணவி.



ஆதி தமிழன்🔥🔥



இழவு வீட்டில் ஈரம்கூட காயவில்லை. எப்டிடா மனசு வருது உங்களுக்கு?

40000 பார்வையாளர்களுக்கு சராசரியாக 500 பின்னோட்டங்களைத் தாண்டாது! ஆனால் இங்கே 1800 கருத்துக்கள் பதியப்பட்டுள்ளது! இந்தக் காணொளியில் விஜயின் தவறுகளை, அரசியல் விமர்சனத்தை நான் பேசியிருந்தாலும் , 90% பதிவுகள் விஜயை நான் ஆதரிப்பதாக கமெண்ட் செய்துள்ளார்கள்! இதில் எந்த ஒரு கருத்திலும் அவர்கள் திமுகவை எதிர்க்கவே இல்லை 😅. நானும் எந்த ஒரு கருத்திலும் விஜய்க்கு ஆதரவளிக்கவில்லை! அப்படி இருக்க ஏன் இந்த கருத்துகள் பதியப்படுகிறது? யாரால் இந்தக் கருத்துகள் பதியப்படுகிறது? என்னைப் பொருத்தவரை தமிழ் தேசியர்கள் விஜய் மற்றும் திமுகவை சேர்ந்து எதிர்க்கலாம் ஆனால் விஜய்வை எதிர்க்க திமுகவை ஆதரிக்கக் கூடாது..! கரூர் அசம்பாவிதத்திற்கு இரண்டு தரப்பிலும் தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே எனது கருத்து! திமுகவை இந்த விஷயத்தில் காப்பாற்ற நினைப்பது விஷமத்தனமான அரசியல்! விஜய்யின் தவறை பட்டியலிடுபவர்கள் திமுகவின் தவறையும் சேர்த்தே பட்டியலிடுங்கள் என்பதே எனது வாதம்!



"அன்பின் வழியது உயிர்நிலை " பிறந்த நாளை ஒட்டி, அண்ணனை பார்த்து விட வேண்டும் என்று வருடாவருடம் நினைப்பதுண்டு. இதற்காகவே அமைந்ததுப்போல் அந்த times of India நிகழ்வு செப்.29 ஆம் தேதி அழைத்திருந்த்தார்கள். என்னுயிர் அண்ணன் சீமானின் ஆசியோடும் அன்போடும் தொடங்கிய இப்பிறந்த நாள், அன்பு அண்ணன் மணி செந்திலின் வாழ்த்து தொடங்கி, தொடர்ச்சியாக அன்பு உறவுகளின் வாழ்த்துகளும் அலைபேசி வழி வாழ்த்துகளாலும் நிரம்பி வழிந்தது. கரூர் கொடுந்துயரம் கருதி, இம்முறை புத்தாடைக்கூட அணிய மனம் ஒப்பவில்லை. ஆனால் நாம் தமிழர் உறவுகளின் அன்பின் வழி, மனம் பூரித்துப்போனது. எம்மிறை தேசியத்தலைவர் மற்றும் மாவீரர்களின் ஆசியுடன் நான் பெற்ற பொக்கிசமான நாம் தமிழர் குடும்பத்தினர் என் மீது கொண்டுள்ள அன்பும் பாசமும் மதிப்பும் நெஞ்சத்தை நெகிழச்செய்தது. இத்தனை அன்புக்கும் நான் உரித்தானவள் என்ற கர்வத்துடன், என்றென்றும்என்றென்றும் என் இனப்பணியை நம் இலக்கை நோக்கி முன்னகர்த்திச்செல்வேன் என்ற உறுதியளிக்கிறேன். என் 35 ஆம் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்புகளும்! "Your chosen family sees you, loves you, and stands with you — not because they have to, but because they want to." — Unknown



ஆற்றின் போக்கில் போ.. கடலில் கலக்கலாம்... இல்லையென்றால் நீர் சுழற்சியில் சிக்கி காணாமல் போவாய் 😂😂😂
