Mohana Krishnan
38.8K posts


திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சாராக பொறுப்பேற்றது முதலே அம்மா உணவகங்களை தரம் உயர்த்திடவும், மக்களுக்கு தரமான உணவு வகைகளை வழங்கிட தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக, 2022 ம் ஆண்டு முதல் அம்மா உணவங்கங்களின் தரமும், விற்பனையும் படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. 2025-26 ம் நிதியாண்டில் ௹.7.06 கோடி செலவில் அம்மா உணவகங்களின், இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டன அம்மா உணவகங்களின் கட்டிடங்கள் புனரமைப்பு பணிகளுக்கு 2024-25 நிதியாண்டில் ௹.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 290 அம்மா உணவக கட்டிடங்களின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாகவே, அம்மா உணவகங்களில் பயன்பெறும் எளிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததுடன், 2026 ஜனவரி மாத வருவாய் 1 கோடியே 13 லட்சத்தை எட்டியது. பின்னர் ஒவ்வொரு மாத வருவாயும் 1 கோடி ரூபாய்க்கு மேல் என்ற சராசரி நிலையில் நீடித்தும் வந்தது. இந்நிலையில் தான் சர்வதேச போர் பதற்ற சூழலால் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அம்மா உணவகங்களுக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் உணவு தயாரிப்பு அளவும், விற்பனையும் ஏப்ரல் மாதம் மட்டுமே சரிந்தது. பின்னர், மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், மே மாதம், ஜூன் மாதங்களில் மீண்டும் விற்பனை முந்தைய நிலையை (௹.1 கோடிக்கு மேல் விற்பனை) எட்டியது.


கடந்த 30.05.26 அன்று கோவை மாவட்டத்தில் சமூகநீதி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டிருந்த போது, 'தீண்டாமை வன்கொடுமை காரணமாக தங்கள் பகுதிக்கு பேருந்து இயக்கப்படுவதில்லை' என்று தொண்டாமுத்துார் பேரூராட்சிக்குட்பட்ட கெம்பனுார் அண்ணாநகர் பகுதி மக்கள் எம்மை சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டத்திற்குட்பட்டு அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று அறிவுறுத்தினேன். பல ஆண்டுகள் கழித்து, கடந்த மாதம் கெம்பனூர் அண்ணாநகர் வரை எண். 21 பேருந்து மீண்டும் இயக்கப்பட்டது. இன்று (18.07.26) மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே. சம்பத்குமார் மற்றும் பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் கெம்பனூர் முதல் அண்ணா நகர் வரை இயக்கப்பட்டு வரும் எண். 21 பேருந்தில் மகிழ்வான பயணம் மேற்கொண்டோம். @tvksampathcbe





”Party Fund இல்லாம தி.மு.க ஆட்சியில எந்த ஒரு அனுமதியுமே கிடைக்காது.. அமைச்சரே தனியா ஒரு ஆபீஸ் போட்டு Party Fund வாங்கிட்டு இருந்தாருங்க.. இப்போ இருக்குற த.வெ.க ஆட்சிய பாக்கும் போது ஆச்சரியமா இருக்கு, எந்த ஒரு லஞ்சமே வாங்குறது இல்ல”.. கோவை மாவட்டத்தையே அவர் ஒரு கரூர் கம்பெணியா மாத்தி வச்சிருக்காரு.. ஒரு அண்டா குண்டாக்கு கூட எங்கள நம்ப மாட்றாங்க அதனால நான் கட்சியில இருந்து வெளில வந்துட்டேன் - அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறிய தி.மு.கவில் இருந்து விலகுவதாக அறிவித்த கோவை மாநகராட்சி கவுன்சிலர் பாபு #Covai | #PartyFund | #DMK | #Councillor | #PolimerNews











