Muthalvan Thamizhchelvan
4.1K posts

Muthalvan Thamizhchelvan
@Muthalvant
Anchor (Politics) - IBC தமிழ்





ஒடுக்கப்படுகிற மக்களை ஒன்று திரட்டி, அவர்களுக்குச் சித்தாந்தக் கல்வியைப் புகட்டி, அரசியல்மயப்படுத்தி, ஜனநாயக வழியில் அதிகாரத்தை அடையச் செய்யும் அண்ணல் அம்பேத்கரின் செயல் திட்டத்துக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட களப்பணியாளர், எழுச்சித் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், என் உடன் பிறவாச் சகோதரர் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன். @thirumaofficial








ஆக17-தமிழர் எழுச்சிநாள். 'மதச் சார்பின்மை காப்போம்' என்னும் கருப்பொருளை மையப்படுத்தி இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆக-16 மாலை 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இவ்விழா நடைபெறவுள்ளது. கீழ்க் காணும் அழைப்பிதழில் உள்ளவாறு இசைப்பொழிவு, கவிப்பொழிவு, கருத்துப்பொழிவு மற்றும் வாழ்த்துப்பொழிவு என தொடர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. உலகநாயகன்-கலைஞானி @ikamalhaasan அவர்கள் பங்கேற்கிறர். நிறைவாக,திண்டுக்கல் லியோனி உரையாற்றுகிறார். #தமிழர்_எழுச்சிநாள் #திண்டுக்கல்_லியோனி




விசிக ஒரு பொது கட்சி, தலித் என்பதற்காக என் பின்னால் வரவேண்டாம் என்று ஏற்கனவே திருமா பிரகடனம் செய்துவிட்டார். இதன்பிறகும் தூய்மை பணியாளர்கள் விடயம் தொடர்பாக எல்லோரும் திருமாவை கேள்வி கேட்பது அர்த்தமற்றது. எனவே தலித்துகளுக்கான தலைவரும் கட்சியும் உருவாகும் தேவை இருக்கிறது





தமிழ்நாட்டில் தினம் தினம் தலித்துகள் படும் பாட்டிற்கு இதெல்லாம் தேவையா? தலித்துகள் என்னா ஆனாலும் கவலைப்படாமல் திமுகவிற்கு ஆதரவு கொடுப்பது ,தாங்கள் சுகபோக வாழ்க்கை வாழத்தானா ? எங்கே இதையெல்லாம் கேள்வி கேட்டு விட போகிறார்கள் என்கிற அச்சத்தில் தான் கால் வலி, கை வலி, தியாக வாழ்வு என்று தினம் தினம் பிரச்சாரம் செய்கிறார்களா ?



இதை குறித்து வைத்து கொள்ளுங்கள்!! பேரறிஞர் அண்ணா அவர்களை பல ஆண்டுகள் எதிர்த்து வந்தவர்கள் சில ஆண்டுகளாக மௌனம் சாதிப்பதை பார்க்க முடிகின்றது. எனில் அவரை விரைவில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என்று பொருள். நாராயண குரு அவர்களைப் போல அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போல விரைவில் பேரறிஞர் அண்ணா அவர்களும் அவர்களை எதிர்த்தவர்களாலேயே சொந்தம் கொண்டாட போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை... தற்போது இது கேட்பதற்கு நகைப்பாக இருக்கலாம், எரிச்சல் தரலாம் ஆனால் இது நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்...


