திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி

6K posts

திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி banner
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி

திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி

@RamkumarPE64370

https://t.co/g0S1s4l3ou https://t.co/C1H5mXOOfq https://t.co/fhFABePfCK

PENNADAM CUDDALORE DISTRICT Katılım Mayıs 2023
3.8K Takip Edilen3.5K Takipçiler
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
இது வரை following பண்ணாத உடன்பிறப்புகள் FOLLOWING பண்ண வேண்டுகிறேன் நானும் அனைவரையும் following செய்கிறேன் @RamkumarPE64370 Like and shere please thankyou தற்குறிகளை கதர விட வேண்டும் ஒன்றினைவோம்
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி tweet media
தமிழ்
0
4
9
226
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
ஆக்க பூர்வமாக செயலாற்றும் திமுக
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு. அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்! ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது? Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க. பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க. “உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு. மாண்புமிகு முதல்வர் அவர்களே, உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க. எங்களைப் பொறுத்தவரை, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!

தமிழ்
0
0
0
9
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
தரமான சம்பவம் ஆட்சி மீது இப்போதே நம்பிக்கை இல்லை
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம். தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை. மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.

தமிழ்
0
0
1
11
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
திமுக உடன்பிறப்புகள் யாரயாவது ISTAGRAM Accountல் Follow பண்ணாமல் இருந்தால் Follow செய்யுங்கள் Follow Back செய்கிறேன் 🖤❤️ ஒன்றிணைந்து களமாடுவோம்🙏 instagram.com/ramkumar8473?i…
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி tweet media
தமிழ்
1
0
2
83
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
திமுக உடன்பிறப்புகள் யாரயாவது Follow பண்ணாமல் இருந்தால் 👉Follow செய்யுங்கள் 👉Follow Back செய்கிறேன் 🖤❤️ லிங்க் @RamkumarPE64370 ஒன்றிணைந்து களமாடுவோம்🙏🙏
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி tweet media
தமிழ்
1
6
18
259
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
திமுக உடன்பிறப்புகள் யாரயாவது Follow பண்ணாமல் இருந்தால் Follow செய்யுங்கள் Follow Back செய்கிறேன் 🖤❤️ ஒன்றிணைந்து களமாடுவோம்🙏 @RamkumarPE64370
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி tweet media
தமிழ்
0
2
7
89
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
நீட் தேர்வை ஒழிக்க புதிய அரசும் ஒத்துழைப்பு தரவேண்டும்
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

#NEET – Never Been Neat: இந்த ஆண்டும் #NEET Paper Leak முறைகேடுகள் வெளிவந்து, Exam Cancel ஆகியிருக்கு. இலட்சக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்காங்க. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல, நீட்ல Scam இல்ல, நீட்டே ஒரு Scam-தான்! ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கையோடும், மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்தோடும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வுமுறை ஒழிக்கப்படணும். மீண்டும் நீட் தேர்வு நடத்துனா ஏற்படும் Delay, மாணவர்களின் உயர்கல்விக் கனவில் குழப்பங்களைத்தான் ஏற்படுத்தும். அதனால, பழையபடி Plus Two தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே MBBS இடங்கள் ஒதுக்கப்படணும். தமிழ்நாட்டில் புதிதாக அமைந்திருக்கும் அரசும் நீட் தேர்வுக்கு எதிரான தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கணும். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் எங்க திராவிட மாடல் அரசின் சட்ட நடவடிக்கைகளை, புதிய அரசும் கையிலெடுத்து, நம் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu

தமிழ்
0
0
0
14
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
வாழ்த்துக்கள் @Udhaystalin அண்ணா
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவராக பணியாற்றும் வாய்ப்பைத் தந்துள்ள கழகத்தலைவர் @mkstalin அவர்களை, பேரவைக்குச் செல்லும் முன்பு இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். நன்றி தெரிவித்தோம்.

தமிழ்
0
0
0
12
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
🎉 உங்கள் நண்பர்களுடன் செயலியைப் பகிருங் உங்கள் பரிந்துரை குறியீட்டை பகிரவும் 👉 IHEWBILLGஇந்த இணைப்பைப் பயன்படுத்தி செயலியைப் பதிவிறக்கவும்: play.google.com/store/apps/det…
தமிழ்
0
1
1
80
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
தமிழ் நாட்டின் காவல் தெய்வம் @mkstalin தான்
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்
0
1
2
33
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
மக்களுக்கு பணிபுரிய மனம் வேண்டும் விஜய் ப்ரோ
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

தமிழ்
0
0
0
8
திமுக பெண்ணாடம் ராம்குமார்-தமிழ்நாட்டை தலைகுனிய வி
என்றும் மக்கள் முதல்வர் @mkstalin தான்
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@mkstalin

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன். அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன். கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம். தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்
0
0
1
19